Published:Updated:

``இதுவும் கடந்து போகும்..!" - நீதிமன்ற தீர்ப்பு குறித்து சசிகலா கருத்து

திருச்செங்கோட்டில் சசிகலா ( நா.ராஜமுருகன் )

``என்னைப் பொறுத்த வரைக்கும் முப்பத்தி மூன்று ஆண்டு அனுபவத்தில் இதுவும் கடந்து போகும். தொடர்ந்து, எதிர்காலத் திட்டம் குறித்து முன்னமே சொல்ல முடியாது" என்று திருச்செங்கோட்டில் சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.

``இதுவும் கடந்து போகும்..!" - நீதிமன்ற தீர்ப்பு குறித்து சசிகலா கருத்து

``என்னைப் பொறுத்த வரைக்கும் முப்பத்தி மூன்று ஆண்டு அனுபவத்தில் இதுவும் கடந்து போகும். தொடர்ந்து, எதிர்காலத் திட்டம் குறித்து முன்னமே சொல்ல முடியாது" என்று திருச்செங்கோட்டில் சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.

Published:Updated:
திருச்செங்கோட்டில் சசிகலா ( நா.ராஜமுருகன் )

இன்று, 'சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய அ.தி.மு.க-வின் பொதுக்குழு தீர்மானம் செல்லும்' என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதோடு, அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இப்படி, தீர்ப்பு வந்துள்ள நிலையில், இன்று நாமக்கல் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், திருச்செங்கோட்டில் உள்ள ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சாமி தரிசனம் செய்தார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்து முடித்த பின் சசிகலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அவர்களிடம் பேசாமல் காரில் ஏறியவர், 'மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்' என்று மட்டும் கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார். அதன்பிறகு, திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா,

ஆஞ்சநேயர் கோயிலில் சசிகலா
ஆஞ்சநேயர் கோயிலில் சசிகலா
நா.ராஜமுருகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"இடைக்கால மனு கொடுத்ததில் இன்று இந்த தீர்ப்பு வந்துள்ளது. இதன் முழு விவரங்களை தெரிந்துகொண்டு, அப்பீலுக்கு செல்வோம். எங்களுடைய இயக்கத்தினுடைய கழகத் தொண்டர்கள்தான் அடித்தளம். புரட்சித்தலைவர் உருவாக்கிய கடைக்கோடி தொண்டர்கள் தான், ஒரு பொதுச் செயலாளரை தீர்மானம் பண்ணமுடியும். அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க முடியும். இந்தியாவில் எந்த கட்சியிலும் இந்த சரத்து கிடையாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் சட்ட விதிகளில் உள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புரட்சித் தலைவரை பொறுத்தவரை, அவர் பணியாற்றிய, பாடுபட்ட இயக்கத்தில் உள்ள நாலு பேரோ, நாலு நபர்களோ இல்லை ஐந்து நபர்களோ சேர்ந்து யாரையும் நீக்கிவிட முடியாது. நீக்கவும் கூடாது என்பதற்காகவே தான் அவர் ஆரம்பித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சிக்கு சட்ட திட்ட விதிகள் இயற்றும் போது அவர் சொன்ன கருத்து கழகத் தொண்டர்களின் ஆசைப் படிதான் ஒரு பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்று சொல்லியிருந்தார். அது, கட்சியில் இப்போது மூன்றாவது தலைமுறையும் தொடர்கிறது. தொண்டர்கள் விருப்பப்படி எல்லாம் நிறைவேறும். கட்சியில் இப்போது இருக்கும் நிலைமை அனைவருக்கும் தெரியும். தொடர் தோல்விகள், அதிலிருந்து அ.தி.மு.க-வை மீட்டெடுத்து, நூறு ஆண்டுகளானாலும் அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்க பாடுபடும் என அம்மா சொல்லியிருக்கிறார்கள்.

திருச்செங்கோட்டில் சசிகலா
திருச்செங்கோட்டில் சசிகலா
நா.ராஜமுருகன்

அதை நிறைவேற்றுவது எனது கடமை. ஒரு கட்சியை ஆரம்பித்தால், அவர்கள் வளர நினைப்பது ஆசைப்படுவது சகஜம்தான். அதை நாம் எதுவும் சொல்ல முடியாது. என்னை பொறுத்தவரை, அ.தி.மு.க நிச்சயமாகவே வருங்காலங்களில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும். தமிழக மக்களுக்காக பாடுபடும். பா.ஜ.க-வுடன் தற்போதைய கூட்டணியை பொறுத்தவரை, கால சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாதிரிதான் செயல்படமுடியும். என்னைப் பொறுத்த வரைக்கும், முப்பத்தி மூன்று ஆண்டு அனுபவத்தில் சொல்கிறேன், இதுவும் கடந்து போகும். எதிர்காலத் திட்டம் குறித்து முன்னமே சொல்ல முடியாது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் எப்படி செயல்பட்டார்களோ அதே போல் தான் என்னுடைய நிலைப்பாடும் இருக்கும். ஏழை, எளிய மக்களுக்காக அ.தி.மு.க உருவாக்கப்பட்டது. அதை ஜெயலலிதா கடைசிவரை செயல்படுத்தினார். நானும் அதே வழியில் தான் செல்வேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism