Published:Updated:

அதிமுக: ``இபிஎஸ் பதவியே செல்லாத போது, ஓபிஎஸ்-ஸை நீக்கியது எப்படி செல்லும்?" - சசிகலா பேட்டி

சசிகலா

`இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதே செல்லாது என்றபோது, அவர் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது எப்படி செல்லும்.' - சசிகலா

அதிமுக: ``இபிஎஸ் பதவியே செல்லாத போது, ஓபிஎஸ்-ஸை நீக்கியது எப்படி செல்லும்?" - சசிகலா பேட்டி

`இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதே செல்லாது என்றபோது, அவர் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது எப்படி செல்லும்.' - சசிகலா

Published:Updated:
சசிகலா

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் அ.தி.மு.க நிர்வாகி குடும்ப திருமணவிழாவில் கலந்துகொண்ட வி.கே.சசிகலா, செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ``நான் தொடர்ந்த வழக்கு என்பது நிலுவையில் இருக்கும் போது, தற்போது கூட்டப்பட்ட பொதுக்குழுவே தவறானது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதே செல்லாது என்றபோது, அவர் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது எப்படி செல்லும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, பல பொதுக்குழுவில் கலந்துகொண்டிருக்கிறேன். அங்கு நிதி நிலை அறிக்கையைப் பொருளாளர்தான் வாசிக்க வேண்டும். அப்படி இருக்க, இன்று நடந்ததை எப்படி பொதுக்குழு என்று ஏற்றுக்கொள்ள முடியும். தி.மு.க-வில் எங்களுடைய தலைவர் எம்.ஜி.ஆர் இருந்தபோது, இதுபோன்ற தவறான செயல் நடந்ததால்தான், அவர் மாற்றுக்கட்சியையே ஆரம்பித்தார். தன்னை நீக்கியது போல, தன்னுடைய கட்சியில் நடக்கக்கூடாது, என்பதனை மனதில் வைத்துத்தான், அவர் அடிமட்டத் தொண்டர்களால் பொதுச்செயலாளர் பதவி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதைக் கொண்டு வந்தார்.

அதிமுக: ``இபிஎஸ் பதவியே செல்லாத போது, ஓபிஎஸ்-ஸை நீக்கியது எப்படி செல்லும்?" - சசிகலா பேட்டி

அந்த முறையில் இவர்கள் செயல்படவில்லை. பணம் அதிகாரத்தை வைத்து அடைந்த எந்த பதவியும் நிலைக்காது. அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது. எங்களுடைய கழக உடன் பிறப்புகள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள்தான் பொதுச்செயலாளராக முடியும். அதுதான் எங்கள் தலைவர் விட்டுச் சென்ற வழிமுறை. சட்ட திட்டங்கள் படிதான் இந்த இயக்கம் இயங்கும். அது விரைவிலேயே நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது. அ.தி.மு.க தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் என்னைத்தான் ஆதரிக்கின்றனர். நான் போகும் அனைத்து சுற்றுப்பயணங்களிலும் எனக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. ஓ.பன்னீர் செல்வம் என்னை நாடி வர தயாராக இருந்தாலும், காலம் வரும் சூழ்நிலையில்தான் அதனை முடிவு செய்ய முடியும். எங்களுடைய இயக்கங்களில், நான் இல்லாத மனஸ்தாபங்களில் சமயத்தில் சிலர் பிரிந்து இருந்திருக்கலாம். அனைவரையும் ஒன்று சேர்த்து, ஒரே அ.தி.மு.க-வாக நாங்கள் வருங்காலத்தில் வெற்றி பெறுவோம். ஆட்சியைப் பிடிப்போம்" என்றார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!