Election bannerElection banner
Published:Updated:

`சசிகலா அட்வைஸ்; இணைந்த குடும்பங்கள்!’ - மகிழ்ச்சியில் உறவுகள்

சசிகலா
சசிகலா ( க.தனசேகரன் )

பிரிந்துகிடந்த சசிகலாவின் உறவினர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையிliருந்து ஜனவரி 27-ம் தேதியன்று அதிகாரபூர்வமாக விடுதலை ஆகிறார். அவர் வெளியே வருவதற்கு முன்பே, பிரிந்துகிடந்த சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அரசியல்ரீதியாக சசிகலா அட்வைஸின்பேரில் இவர்கள் ஒன்றுபட்டதாகச் சொல்லப்படுகிறது. கடந்த காலங்களில், சசிகலாவின் குடும்பத்தினர் மத்தியில் குடும்ப மோதல்கள் இருந்துவந்தன.

ஜெயானந்த் - ஜெயஸ்ரீ தம்பதியுடன் டி.டி.வி.தினகரன்
ஜெயானந்த் - ஜெயஸ்ரீ தம்பதியுடன் டி.டி.வி.தினகரன்

சசிகலா சிறைச்சாலைக்குப் போன பிறகு, அவரின் அக்காள் மகன் தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற பெயரில் கட்சி ஆரம்பித்தார். சசிகலாவின் சகோதரர் திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்கிற பெயரில் தனிக் கட்சி ஆரம்பித்தார். தினகரனும் திவாகரனும் அரசியல்ரீதியாக எதிரும் புதிருமாக மாறினர். ஒருவரை ஒருவர் விமர்சித்தவண்ணம் இருந்தனர். இந்தநிலையில், தினகரனின் தம்பி நீலாங்கரை பாஸ்கரன் - சுபஸ்ரீ தம்பதிகளின் மகள் ஜெயஸ்ரீயை திவாகரனின் மகன் ஜெயானந்த்துக்குக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்துவைத்தனர். இந்த திருமணத்துக்குக்கூட, தினகரன் வரவில்லை. சசிகலா பரோலில் வந்து கலந்துகொள்வார் என்ற பேச்சு இருந்தது. அவரும் வரவில்லை.

`நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா!’ - டி.டி.வி.தினகரன் ட்வீட்  #NowAtVikatan

கடந்த ஜனவரி 25-ம் தேதியன்று நீலாங்கரையிலுள்ள பாஸ்கரனின் வீட்டில் ஜெயஸ்ரீக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரிந்துகிடந்த குடும்பத்தினர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். தினகரனும் திவாகரனும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்களாம். உறவினர்கள்புடைசூழ இருவீட்டார்களும் விருந்து சாப்பிட்டிருக்கிறார்கள். இவர்கள் மீண்டும் இணைந்ததைப் பார்த்த உறவினர்கள் சந்தோஷப்பட்டனர். அரசியலில் இது ஒரு திருப்பம் என்றே வர்ணித்தனர்.

ஜெயானந்த் - ஜெயஸ்ரீ தம்பதிகளுடன் தினகரன், அவருடைய மனைவி அனுராதா புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதேபோல், தம்பதிகளுடன் திவாகரன், அவர் மனைவி லதா ஆகியோரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

ஜெயானந்த் - ஜெயஸ்ரீ தம்பதியுடன் திவாகரன்
ஜெயானந்த் - ஜெயஸ்ரீ தம்பதியுடன் திவாகரன்

சசிகலா விடுதலையாகி, அவரது மருத்துவ சிகிச்சை முடிந்ததும் நேராக சென்னை வருகிறார். சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீடு தி.நகரில் உள்ளது. அதற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில்தான் தற்காலிகமாக சசிகலா தங்குகிறார். இதேநேரம், போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்துக்கு எதிரிலிருக்கும் இடத்தில் புதிய வீடு கட்டும் பணி முடியும் தறுவாயில் இருக்கிறது. இந்த வீட்டின் காம்பவுண்ட்டில்தான் வருமான வரித்துறை தரப்பில் சொத்து முடக்கம் தொடர்பான நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

ஆனால், `அந்த வீடு சசிகலாவுக்குச் சொந்தமானது அல்ல... இளவரசியின் மருமகன் கார்த்திகேயனுக்குச் சொந்தமானது ' என்று சசிகலா தரப்பினர் சொல்லிவருகிறார்கள். கட்டடத்தின் இன்டீரியர் பணி முடிந்ததும், அங்கே சசிகலா போய் குடியேறுவார் என்கிறார்கள் அவரின் உறவினர்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு