Published:Updated:

ஓ.பி.எஸ்-ஸுக்கு சசிகலா சொன்ன மூவ்ஸ்... தொண்டர்களைச் சந்திக்கவும் திட்டம்? - உற்சாகத்தில் ஆதரவாளர்கள்

அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ் - சசிகலா

எடப்பாடி பழனிசாமியின் நகர்வுகளைச் சமாளிக்க ஓ.பி.எஸ் தரப்புக்கு சசிகலாவிடமிருந்து சில டிப்ஸ் வந்திருக்கின்றன.

ஓ.பி.எஸ்-ஸுக்கு சசிகலா சொன்ன மூவ்ஸ்... தொண்டர்களைச் சந்திக்கவும் திட்டம்? - உற்சாகத்தில் ஆதரவாளர்கள்

எடப்பாடி பழனிசாமியின் நகர்வுகளைச் சமாளிக்க ஓ.பி.எஸ் தரப்புக்கு சசிகலாவிடமிருந்து சில டிப்ஸ் வந்திருக்கின்றன.

Published:Updated:
அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ் - சசிகலா

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமைக்கான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் நகர்வுகளைச் சமாளிக்க ஓ.பி.எஸ் தரப்புக்கு சசிகலாவிடமிருந்து சில டிப்ஸ் வந்திருக்கின்றன. இந்தச் சூழலில் அ.தி.மு.க-வை மீட்க அந்தக் கட்சியின் முதுகெலும்பான தொண்டர்களைச் சந்திக்கும் பயணத்தை தொடங்க சசிகலா தயாராகிவிட்டதாக விவரமறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சசிகலா
சசிகலா

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இடையே மோதல்கள் எழுந்த நிலையில், இன்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. இதில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கூட்டத்திலிருந்து பாதியில் கிளம்பினர். எடப்பாடி பழனிசாமி தரப்பு அடுத்த மாதம் மீண்டும் பொதுக்குழு நடத்துவதற்கான தேதியை அறிவித்தது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க-வை அழிவுப் பாதைக்கு சதிகாரர்கள் கொண்டு செல்வதாக வைத்திலிங்கம் காட்டமாகத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் இருவரும் சில மாதங்களாகவே சசிகலாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதுடன், கட்சிக்குள் அவரை கொண்டுவருவதற்கான வேலைகளை மறைமுகமாக செய்து வந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதையறிந்த எடப்பாடி தரப்பு தன் ஆட்டத்தை முந்திக்கொண்டு தொடங்கி விட்டதாகவும் அவர் தரப்பினர் பரபரத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.க-வில் நடப்பதையெல்லாம் உன்னிப்பாக கவனித்துவந்த சசிகலா, ``இது எதிர்பார்த்ததுதான்!" என தன் ஆதரவாளர்களிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

அ.தி.மு.க-வில் நிலவும் ஒற்றைத் தலைமைக்கான மோதலை சசிகலா எப்படி பார்க்கிறார்... அவருடைய அடுத்த மூவ் என்ன என்பது குறித்து சசிகலா வட்டாரத்தில் விசாரித்தோம். `` `ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே ஒற்றுமை இல்லை, அவர்களுடைய இரட்டைத் தலைமை நீண்டகாலம் நீடிக்காது' என பத்து மாதங்களுக்கு முன்பே சசிகலா கூறிவிட்டார். `தொண்டர்கள்தான் அ.தி.மு.க-வின் அடித்தளம் என்பதை இருவருமே மறந்து விட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

33 முன்னாள் அமைச்சர்கள், அவர்களின் ஆதரவாளர்களான நிர்வாகிகள் என 150 பேர்தான் அ.தி.மு.க-வை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். தொண்டர்கள் நினைத்தால் இவர்களின் தலைமையைத் தூக்கியெறிந்து விடுவார்கள். ஆனால், அவர்கள் பொறுமை காப்பது போலவே நாமும் அமைதியாக இருப்போம் நடக்க வேண்டியது தானாக நடக்கும்' என சசிகலா கூறி வந்தார்.

இந்த நிலையில்தான் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. எடப்பாடி தரப்புக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை சசிகலா கவனிக்கத் தவறவில்லை. கட்சியில் ஒற்றைத் தலைமைக்கு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி செய்திருக்கிறார். அது நிறைவேறினாலும் நீண்டகாலம் நிலைக்காது. அ.தி.மு.க ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் சசிகலா அமைதியாக இருந்து வந்தார்.

இப்போது இருவரும் மோதிக்கொள்வதால் அ.தி.மு.க பெரும் சரிவை சந்திக்கக் கூடிய நிலைக்கு தள்ளப்படும் என்பதை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு முழுவதும் சென்று கட்சியின் உண்மை தொண்டர்களைச் சந்தித்து நியாயம் கேட்க முடிவு செய்திருக்கிறார். இது ஏற்கெனவே சசிகலா கூறிவந்த ஒன்றுதான். ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப்போனது. தற்போது சசிகலா கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான சில முன்னெடுப்புகளை தொடங்கியிருக்கிறார்.

ஓ.பி.எஸ், சசிகலா
ஓ.பி.எஸ், சசிகலா

பொதுக்குழு முடிவை தெரிந்துகொண்டே தன் புரட்சி பயணத்தை தொடங்கலாம் என்றே சசிகலா காத்திருந்தார். எடப்பாடி தரப்பு கொடுத்த நெருக்கடியில் கடந்த சில தினங்களாக ஓ.பி.எஸ் திக்குமுக்காடிப் போனார். அவருக்கு சசிகலா தரப்பிலிருந்து சில டிப்ஸ் சென்றதாகவும், வைத்திலிங்கத்தின் நெருங்கிய உறவினர் மூலம் சசிகலா சில தகவல்களை சொல்லி அனுப்பி அதற்கேற்றார் போல் செயல்பட அறிவுறுத்தியதாகவும் சொல்லப் படுகிறது. அதை வைத்தே கடைசி நேரத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுவதற்கான தடையை ஓ.பி.எஸ் தரப்பினர் பெற்றனர்.

எல்லாம் எல்லை மீறி போகும் சமயத்தில் வெளிப்படையாக சசிகலாவை சந்திக்கலாம் எனக்கருதி ஓ.பி.எஸ் அதற்கான லைன் எடுத்ததாகவும் தெரிகிறது. ஏற்கெனவே சசிகலாவிடம் பேசியவர்கள், `சசிகலாவைச் சந்தித்த ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா போன்றவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்கள். அதற்கு ஓ.பி.எஸ்-ஸே கையெழுத்திட்டார். இப்போது அவரே சசிகலாவைச் சந்தித்தால் ஓ.பி.எஸ்-ஸுக்கு நிச்சயம் பிரச்னை ஏற்படும்' என சசிகலா தரப்பினர் ஓ.பி.எஸ் தரப்புக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

சசிகலா
சசிகலா

இந்த நிலையில், ஆன்மிக நகரமான கும்பகோணத்திலிருந்து தொண்டர்கள் சந்திப்பு பயணத்தை தொடங்குவதற்கு சசிகலா திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. தொண்டர்கள் கையில்தான் அ.தி.மு.க-வின் லகான் இருக்கிறது என உறுதியாக நம்பும் சசிகலா, அவர்கள் அந்த லகானை தனக்கு தருவார்கள் என்ற நம்பிக்கையோடு பயணத்துக்கு திட்டமிட்டு தயாராகி விட்டார்" என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism