Published:Updated:

``இனி எல்லாமே இனிப்பாக அமையும்..!" - வைத்திலிங்கத்துக்கு சாக்லேட் கொடுத்து வாழ்த்திய சசிகலா

சசிகலா - வைத்திலிங்கம்

சசிகலா, வைத்திலிங்கம் இருவரும் சந்தித்துக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

``இனி எல்லாமே இனிப்பாக அமையும்..!" - வைத்திலிங்கத்துக்கு சாக்லேட் கொடுத்து வாழ்த்திய சசிகலா

சசிகலா, வைத்திலிங்கம் இருவரும் சந்தித்துக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

Published:Updated:
சசிகலா - வைத்திலிங்கம்

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை தொடர்பாக பிரச்னை நிலவிவரும் நிலையில், தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே சசிகலா, வைத்திலிங்கம் இருவரும் சந்தித்துக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பி.எஸ் நீதிமன்றத்துக்குச் சென்றார். அத்துடன் சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் இணைய வேண்டும் என வெளிப்படையாகவே தெரிவித்தார். ஓ.பி.எஸ் கருத்தை தினகரன் வரவேற்றார். இந்த நிலையில், புரட்சிப் பயணத்தை மேற்கொள்வதற்காக கடந்த 7-ம் தேதி சசிகலா தஞ்சாவூர் சென்றார்.

சசிகலா
சசிகலா

சசிகலா நேற்று திருத்துறைபூண்டியில் நடைபெற்ற சாய் பாபா கோயில் குடமுழுக்கில் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து இன்று மன்னார்குடி சென்றவர், ஒரத்தநாடு வழியாக தஞ்சாவூர் திரும்பினார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் காவரப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பினார். சசிகலா, வைத்திலிங்கம் இருவரும் எதிர் எதிரே காரில் சென்றதால் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது. சசிகலா வந்திருப்பதை அறிந்த வைத்திலிங்கம், காரைவிட்டு இறங்கிச் செல்ல... சசிகலாவும் காரிலிருந்து இறங்கினார். இருவரும் நலம் விசாரித்துக்கொண்டனர். ``பார்த்து எவ்வளவு நாளாச்சு எப்படி இருக்கீங்க" என்று சசிகலா கேட்க, ``நல்லாயிருக்கம்மா" என வைத்திலிங்கம் கூறினார். இதைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள், ``இன்னைக்கு வைத்திலிங்கத்துக்கு பிறந்தநாள்" எனக் கூற, ``அப்படியா..." என உற்சாகமடைந்த சசிகலா காரிலிருந்து ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டை எடுத்து வந்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது சசிகலா, ``இது தற்தாலிகமான இனிப்புதான். நீங்க நினைக்குறது நடக்கும்... நிரந்தரமான இனிப்பு விரைவில் கிடைக்கப்போகுது" எனச் சொல்ல, வைத்திலிங்கம் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.

சசிகலா வைத்திலிங்கம்
சசிகலா வைத்திலிங்கம்

சசிகலா, வைத்திலிங்கம் இருவரும் சந்தித்துக்கொண்டது குறித்து, அரசியல் கட்சியினர் சிலரிடம் பேசினோம். ``சசிகலா உள்ளிட்டவர்கள் இணைய வேண்டும் என ஓ.பி.எஸ் கூறியதைத் தொடர்ந்து, வைத்திலிங்கமும் சசிகலா சேர வேண்டும் எனப் பேசிவந்தார். இந்த நிலையில், சசிகலா புரட்சிப் பயணம் மேற்கொள்வதற்காக தஞ்சாவூர் வந்திருக்கிறார். வைத்திலிங்கம் சசிகலாவைச் சந்திப்பார் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தரப்பில் பேசப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து இன்று இருவரும் சந்தித்துக்கொண்டனர். எடப்பாடி தரப்பினர் விமர்சனம் செய்வார்கள் என்பதற்காக யதேச்சையாக சந்தித்துக்கொண்டதுபோல் இதை ஒருங்கிணைத்துக் காட்டியிருக்கின்றனர்" எனத் தெரிவித்தனர்.