Published:Updated:

`இனி பூ பாதை இல்லை, சிங்கப்பாதை'.. ஓ.ராஜாவுக்கு ஆதரவாக போஸ்டர்! -பரபரப்பை பற்றவைக்கும் சசிகலா பயணம்

சசிகலா

``சசிகலா அதிமுக-வுக்குள் வர முடியாது அதற்கான வாசல்கள் மூடப்பட்டு விட்டன. இன்னும் சில மாதங்களில் ஓபிஎஸ்ஸையும் கட்சியிலிருந்து ஓரம் கட்டிடுவோம். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் ஒற்றை தலைமையாக இருப்பார்” - எடப்பாடி தரப்பு.

`இனி பூ பாதை இல்லை, சிங்கப்பாதை'.. ஓ.ராஜாவுக்கு ஆதரவாக போஸ்டர்! -பரபரப்பை பற்றவைக்கும் சசிகலா பயணம்

``சசிகலா அதிமுக-வுக்குள் வர முடியாது அதற்கான வாசல்கள் மூடப்பட்டு விட்டன. இன்னும் சில மாதங்களில் ஓபிஎஸ்ஸையும் கட்சியிலிருந்து ஓரம் கட்டிடுவோம். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் ஒற்றை தலைமையாக இருப்பார்” - எடப்பாடி தரப்பு.

Published:Updated:
சசிகலா

சசிகலா, சென்னையிலிருந்து நாளை இரவு தஞ்சாவூர் செல்வதுடன் அங்கேயே ஒரு வாரம் வரை தங்கியிருந்து சில முக்கிய கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்ய திட்டமிட்டிருக்கிறார். அத்துடன் தனது கணவர் ம. நடராசனின் 4-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த சூழலில், `வேலுநாச்சியாரின் தலைமையை ஏற்ற எங்களின் விஸ்வாசமே’ என குறிப்பிட்டு அதிமுக நிர்வாகி ஒருவர் ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா
சசிகலா

சசிகலா சமீபத்தில் தென்மாவட்டங்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்ட போது ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா சசிகலாவை சந்தித்து பேசியது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஓ.ராஜா உள்ளிட்ட சிலரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக கட்சி தலைமை அறிவித்தது. இந்நிலையில் சசிகலா ஒரு வார பயணமாக சென்னையிலிருந்து நாளை தஞ்சாவூர் செல்கிறார். சசிகலா தஞ்சாவூர் வர இருக்கும் சூழலில் பேராவூரணி பகுதியில் ஓ.ராஜாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டெல்டா மாவட்டங்களில், ஓ.ராஜா தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் பேசி சசிகலாவுக்கு ஆதரவு திரட்டி வருவதாக செய்திகள் எழுந்த நிலையில், ``வேலுநாச்சியாரின் தலைமையை ஏற்ற எங்களின் விஸ்வாசமே” என்ற வாசகத்துடன் அதிமுகவில் பேராவூரணி தெற்கு ஒன்றியத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணைத் தலைவராக இருக்கும் வினோத் என்பவர் சசிகலாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் இந்த போஸ்டரை ஒட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.

சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்
சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்

இது குறித்து விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம், ``சசிகலா சென்னையிலிருந்து நாளை தஞ்சாவூர் புறப்படுகிறார். செல்லும் வழியில் சில முக்கிய கோயில்களில் சாமி தரிசனம் செய்கிறார். ஓ.ராஜா சந்திப்பு பிறகு அதிமுகவில் மாற்றம் ஏற்படும், அவை தனக்கு சாதகமாக அமையும் என சசிகலா கருதினார். ஆனால் அவர் எதிர்பார்த்த வேகத்தில் மாற்றம் எதுவும் அமையவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சூழலில் சசிகலா ஆதரவாளர்கள் பலர் அதிமுகவில் இருந்தாலும், வெளிப்படையாக தன்னை ஆதரித்து வருகின்றனர். அவர்கள், `நீங்கள் அமைதியாக இருந்தது போதும் அதிரடி முடிவு எடுத்தால் மட்டுமே அதிமுகவை கைப்பற்ற முடியும்’ எனக் கூறியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சிலர் இது தொடர்பாக ஏற்கெனவே சசிகலாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி

மேலும், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுபவர்களிடம் பேசி வருகின்றனர். ``சசிகலா அதிமுகவுக்குள் வர முடியாது அதற்கான வாசல்கள் மூடப்பட்டு விட்டன. இன்னும் சில மாதங்களில் ஓபிஎஸ்ஸையும் கட்சியிலிருந்து ஓரம் கட்டிடுவோம். அதன் பிறகு எடப்பாடி தான் கட்சி தலைமை. எல்லோரும் எதிர்பார்க்குற மாதிரி அவர் தான் அதிமுகவின் ஒற்றை தலைமையாக இருப்பார்.

எனவே உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறோம். நீங்க சசிகலா பக்கத்திலிருந்து விலகி எங்க பக்கம் வந்துடுங்க. நிலமை சரியானதும் கட்சியில் நல்ல பதவியும் தருகிறோம்” என ஆசை வார்த்தைகளை கூறி வருகின்றனர். குறிப்பாக பேராவூரணி தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஒருவரின் ஆதரவாளர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக பலரிடம் பேசியுள்ளனர்.

ஓ.ராஜா - சசிகலா
ஓ.ராஜா - சசிகலா

இந்த தகவல் சசிகலா கவனத்திற்கு சென்றுள்ளது. எனவே இனிமே பொறுமையாக இருந்து பயனில்லை என்கிற முடிவுக்கு அவர் வந்து விட்டார். சசிகலா, 25 ஆண்டுகளாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாக இருந்து அதிமுகவின் வளர்ச்சிக்காக உழைத்திருக்கிறார். கட்சியை பிரித்து அதன் மூலம் ஆதாயம் அடைய அவர் நினைக்கவில்லை. அனைவரும் ஒருமித்த கருத்தாக தன்னை ஏற்றுக்கொண்டு பொதுச் செயலாளர் பதவியை தருவார்கள் என்ற எண்ணத்தில் தான் இத்தனை நாட்கள் அமைதி காத்து வந்தார்.

அதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டது. அத்துடன் எடப்பாடி ஆதரவாளர்கள் முன்பைவிட வேகமாக செயல்படத் தொடங்கி விட்டனர். இதனை மனதில் வைத்து சசிகலா அரசியல் ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மூடுக்கு வந்து விட்டார். தீபாவளி சமயத்தில் தஞ்சாவூர் வந்து தங்கியிருந்த போதே தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாக பயணம் மேற்கொள்ள போகிறேன் அப்போது பல விஷயங்களை வெளிப்படையாகவே பேச இருக்கிறேன் என கூறினார்.

பேராவூரணி பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்
பேராவூரணி பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்

ஆனால் சில காரணங்களால் அந்த பயணத்தினை மேற்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் சசிகலா நாளை தஞ்சாவூர் வருகிறார். வர இருக்கும் 20-ம் தேதி சசிகலா கணவர் ம. நடராசனின் நான்காம் ஆண்டு நினைவு நாள். அன்று அவரின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார். அப்போது பெரிய அளவிலான அன்னதான நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

கிட்டதட்ட ஒரு வாரம் வரை தஞ்சாவூரில் இருந்தபடி திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்ய இருக்கிறார். அதன் பின்னர் தஞ்சாவூரில் இருந்தபடியே தமிழகம் முழுவதும் தனது அதிரடி அரசியல் பயணத்திற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கான வாய்ப்புள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பூ பாதையில் பயணித்த சசிகலா, இனி சிங்கப்பாதையில் செல்ல முடிவெடுத்துள்ளார். அதற்கான முன்னோட்டமாகவே தஞ்சாவூர் பயணத்தை திட்டமிட்டுள்ளார்” எனத் தெரிவித்தனர்.

சசிகலா
சசிகலா

அதிமுக நிர்வாகியான பேராவூரணி வினோத்திடம் பேசினோம், ``சுமார் ஆறு மாதாங்களுக்கு முன்பு என்னை போன்ற பலரிடம் செல்போனில் பேசிய சின்னம்மா சசிகலா, `நான் சீக்கிரமே வெளியே வந்து உங்க எல்லோரையும் பார்க்கிறேன். நமக்கான காலம் வரும். அதுவரை அமைதியாக இருங்க. நீங்க எதிர்பார்க்குறது நடக்கும். கட்சி நம் கைக்கு வரும்’ என பேசி நம்பிக்கையூட்டினார்.

அதற்கான கால சூழல் ஏற்படாமல் அரசியல் ரீதியான செயல்கள் தள்ளிப்போனது. சின்னம்மா சசிகலாவும் அமைதியாகவே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தார். அம்மா ஜெயலலிதா வழி அதிரடி அரசியலை தான் சசிகலாவிடம் பலர் எதிர்பார்க்கின்றனர். சின்னம்மா பக்கம் நிற்கும் பலர் எந்த மாற்றமும் நிகழாததால் சோர்வடைந்து விட்டனர். மேலும் எடப்பாடி தரப்பில் தொடர்பு கொண்டு தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியினையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பேராவூரணி அதிமுக நிர்வாகி வினோத்
பேராவூரணி அதிமுக நிர்வாகி வினோத்

என்னிடம் கூட பலர் ஆசைவார்த்தைகளை கூறினர். ஆனால் நான் கூடவோ குறைச்சலோ கடைசி வரை என்னுடைய பொதுச் செயலாளர் சசிகலா தான் என கூறிவிட்டேன். அதிரடி முடிவை எடுத்து அதிமுகவை மீட்டு வழி நடத்துங்கம்மானு அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். சசிகலாவின் தலைமையை ஏற்ற ஓ.ராஜாவின் விஸ்வாசத்தை வரவேற்று போஸ்டர் ஒட்டியிருக்கேன். சின்னம்மா சசிகலாவின் தஞ்சாவூர் பயணம் நிச்சயம் அவருக்கு அரசியல் மாற்றத்திற்கு வித்திடுவதாக அமையும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism