Published:Updated:

``கரன்சி நெருக்கடி... சைலன்ட் தினகரன்... ஒருங்கிணைப்பில் ஓட்டை” - எப்படிச் சமாளிப்பார் சசிகலா?

சசிகலா

தினகரனின் மௌனம் காரணமாக அமமுக-வின் நிர்வாகிகள் குழப்பான மனநிலையில் இருக்கிறார்கள்.

``கரன்சி நெருக்கடி... சைலன்ட் தினகரன்... ஒருங்கிணைப்பில் ஓட்டை” - எப்படிச் சமாளிப்பார் சசிகலா?

தினகரனின் மௌனம் காரணமாக அமமுக-வின் நிர்வாகிகள் குழப்பான மனநிலையில் இருக்கிறார்கள்.

Published:Updated:
சசிகலா

``சசிகலாவைச் சுற்றி மீண்டும் அ.தி.மு.க அரசியல் இயங்க ஆரம்பித்திருக்கிறது. அ.தி.மு.க-வின் பொன்விழா கொண்டாட்டத்துக்குத் தனது ஆதரவாளர்களை சசிகலா தரப்பு அழைத்திருப்பதால் அடுத்து என்ன நடக்கும் அ.தி.மு.க-வில் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

அக்டோபர் 17-ம் தேதி அன்று, அ.தி.மு.க தொடங்கப்பட்ட பொன்விழா ஆண்டு. ஐம்பது ஆண்டுகளில் இரண்டு முறை கட்சியின் சின்னம் முடக்கப்பட்டு, மீண்டும் வழங்கப்பட்ட வரலாறும் அ.தி.மு.க கட்சிக்கே உண்டு.கட்டுக்கோப்புடனும், தொண்டர்களின் பலத்துடனும் பவனிவந்த அ.தி.மு.க கட்சிக்கு பொன்விழா ஆண்டு சோதனைக் காலமாகவே மாறியுள்ளது. அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியிலுள்ள பன்னீர், பழனிசாமி இடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதால் கட்சியின் தொண்டர்கள் தொங்கலில் நிற்கிறார்கள்.

மற்றொருபுறம் அ.தி.மு.க-வின் மறைமுகமான தலைமையாக கால் நூற்றாண்டுகள் பவனிவந்த சசிகலா, அந்தக் கட்சிக்குள் இணைவதற்கே இப்போது போராடவேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில்தான் பொன்விழாவைவைத்து அ.தி.மு.க-வுக்குள் தனது என்ட்ரிக்கு வாய்ப்பை உருவாக்கத் திட்டமிட்டுவருகிறார் சசிகலா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த ஒரு வாரமாக சசிகலா தரப்பிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கு தொலைபேசி மூலம் சென்னைக்கு வர அழைப்பு சென்றிருக்கிறது.மேலும், சிறைக்குச் செல்லும் முன்பாக ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற சசிகலா, சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு இதுவரை ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்லவில்லை. இந்தப் பொன்விழாவைக் காரணமாக வைத்து ஜெயலலிதா சமாதிக்கும் செல்ல முடிவெடுத்திருக்கிறார் சசிகலா. எனினும், சசிகலாவின் இந்த அரசியல் மூவ் குறித்து சசிகலாவுக்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது அவர்கள் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

சசிகலாவுக்கு வரவேற்பு
சசிகலாவுக்கு வரவேற்பு

``பொன்விழாவுக்கு நிர்வாகிகளுக்கு அழைப்பு சென்றதே சசிகலாவின் ஆலோசனையின்படிதான். ஆனால் பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தபோது அவரை வழிநெடுகிலும் நின்று தொண்டர்கள் வரவேற்றனர். அது போன்ற பிரமாண்டமான கூட்டம் இப்போது கூடுமா என்பது சந்தேகம். காரணம், அப்போது தினகரன் வரவேற்புக்கு பொறுப்பேற்று மாவட்டவாரியாக அதற்கான வேலைகள் நடந்தன. ஆனால் இந்த முறை தனித்தனியாக முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு போனில் தகவல் சொல்லியிருக்கிறார்கள். அவர் வருவதற்கான ஏற்பாடுகளைப் பற்றியோ, அதற்கான கரன்சியைப் பற்றியோ ஏதும் சொல்லவில்லை. எனவே பலரும் யோசனையில் இருக்கிறார்கள்.

அதேபோல் தினகரனின் மௌனம் காரணமாக அமமுக-வின் நிர்வாகிகள் குழப்பான மனநிலையில் இருக்கிறார்கள். சென்னையில் ஏற்கெனவே பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க பக்கம் போய்விட்டதால், சென்னையில் ஆட்களை ஒருங்கிணைப்பதே இப்போது சவால்தான். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஆட்களை அழைத்து வர வேண்டுமென்றால் வாகனச் செலவு, சாப்பாட்டுச் செலவு போன்றவை உள்ளன. அதைப் பற்றி சசிகலா தரப்பு என்ன முடிவெடுத்திருக்கிறது என்று தெரியவில்லை. குறிப்பாக இரண்டு நாள்கள் நிகழ்ச்சிகள் இருக்கப்போவதாக சொல்லியிருக்கிறார்கள். வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்தால் தங்கும் வசதியும் தேவைப்படுகிறது.

சசிகலா - தினகரன்
சசிகலா - தினகரன்

இந்த முறை சசிகலா சரியாகக் காய்களை நகர்த்த வேண்டும். சமாதிக்குச் செல்லும் முன்பாக ஒரு பிரமாண்ட கூட்டத்தை அவர் காட்ட வேண்டும். அதேபோல் ராமவரம் தோட்டத்தில் தொண்டர்களுக்கு மத்தியில் அவர் உரையாற்ற வேண்டும். அந்த உரை அ.தி.மு.க-வில் உள்ளவர்களையும் இவர் பக்கம் கொண்டுவரும் வகையில் இருக்க வேண்டும். இதையெல்லாம் சசிகலா தரப்பு திட்டமிட்டுச் செய்தால் அ.தி.மு.க தலைமைக்கு ஓர் அச்சத்தை உண்டு பண்ணலாம்.ஆனால், சசிகலா தரப்பில் ஏற்பாடுகளை யார் செய்கிறார்கள், யாரிடம் நிர்வாகிகள் தொடர்புகொள்வது என்கிற குழப்பம் இப்போது வரை அமமுக-வில் இருப்பவர்களிடம் இருக்கிறது.

இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்.
இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்.

அதேபோல் தினகரன் பின்னால் சென்று பலரும் கரன்சிகளைக் கரைத்துவிட்டதால், இப்போது பொருளாதாரரீதியாகவும் பலரும் பின்னடைவில் இருக்கிறார்கள். சசிகலாவுக்கும் பொருளாதாரச் சிக்கல் இருக்கிறது. அவரது வங்கிக் கணக்குகளை தொடர்ந்து முடக்கிவருகிறது மத்திய அரசு. இப்போது அ.தி.மு.க-வுக்கு அச்சத்தை ஏற்படுத்தவே அவர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவிருக்கிறார். அ.தி.மு.க தலைமைக்கு அச்சம் கொடுப்பதைவிட, டெல்லி ஆளும் தரப்பை அவர் சரிக்கட்டினாலே அ.தி.மு.க-ுவை இவர் ஆளுமை செய்வது எளிதாகிவிடும்” என்கிறார்கள்.