Published:Updated:

சசிகலா: 3 நாள்கள் ஆதரவாளர்களுடன் சந்திப்பு; முக்கியஸ்தரின் மறைமுக ஆதரவு?! -பரபரக்கும் அதிமுக

வைத்திலிங்கம் தன் சம்பந்தி தவமணி மூலம் சசிகலாவுக்கு மறைமுகமாக ஆதரவு திரட்டிவருவதாக வெளியான தகவலால் சசிகலா உற்சாகம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சசிகலாவை முன்வைத்து அதிமுக-வுக்குள் நடைபெற்றுவரும் மோதல் உச்சகட்டத்தை எட்டியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தஞ்சாவூரில் தங்கியிருந்தபடி சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். மேலும் அவர் வீட்டிலிருந்தபடியே இன்று மதியத்திலிருந்து மூன்று நாள்கள் தன்னுடைய ஆதரவாளர்களைச் சந்திப்பதுடன், அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிமுக-வில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

சசிகலா தங்கியிருக்கும் வீட்டின் முன்பு திரண்டுள்ள ஆதரவாளர்கள்
சசிகலா தங்கியிருக்கும் வீட்டின் முன்பு திரண்டுள்ள ஆதரவாளர்கள்

தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டியில் நடைபெற்ற தினகரனின் மகள் ஜெயஹரிணி திருமண வரவேற்பில் கலந்துகொள்வதற்காக தஞ்சாவூர் வந்திருந்த சசிகலா, அருளானந்த நகர் அருகே பரிசுத்தம் நகரிலுள்ள தனக்குச் சொந்தமான இல்லத்தில் தங்கியிருந்தபடி தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவருகிறார்.

28-ம் தேதி தஞ்சாவூரிலிருந்து மதுரைக்குச் சென்றவர் அங்கிருந்தபடி 29-ம் தேதி கமுதி,பசும்பொன்னுக்குச் சென்று தேவர் சமாதியில் மரியாதை செய்துவிட்டு மீண்டும் தஞ்சாவூர் திரும்பினார்.

சுற்றுப்பயணத்தில் சசிகலா
சுற்றுப்பயணத்தில் சசிகலா

இது குறித்து சசிகலா தரப்பில் சிலரிடம் பேசினோம். ``அதிமுக-வில் தனக்கு ஆதரவான சூழல் ஏற்பட்டிருந்தாலும், நிதானமாகவே இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதா பயன்படுத்திய காரைத் தொடர்ந்து பிரசார வாகனத்தையும் தனது சுற்றுப்பயணத்தில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். ஓ.பி.எஸ் தனக்கு ஆதரவான கருத்தைக் கூறிய பிறகு முன்னாள் அமைச்சர்கள் சிலர் சசிகலாவிடம் போனில் பேசியதாகத் தெரிகிறது. `அவங்ககிட்ட எதையும் கொஞ்சம் பொறுமையாகவே செய்ய வேண்டும். நான் சொல்கிற வரை காத்திருங்க’ என்று கூறியதாகத் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`100 பவுன்சர்கள் முதல் ஓபிஎஸ் தம்பியின் எதிர்பாரா என்ட்ரி வரை!'- தினகரன் வீட்டு விசேஷ ஹைலைட்ஸ்.

அதிமுக-வில் `சோழ மண்டலத் தளபதி’ என அழைக்கப்படும் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையில் இருந்ததால், ஓ.பன்னீர்செல்வத்திடம் நெருக்கம் காட்டிவந்தார். இந்த நிலையில், தன்னுடைய சம்பந்தி தவமணி மூலம் சசிகலாவுக்கு மறைமுகமாக ஆதரவு திரட்டிவருவதாக வெளியான தகவல் சசிகலாவை உற்சாகம்கொள்ள வைத்திருக்கிறதாம். மதுரையிலிருந்து பசும்பொன் சென்றபோது மானாமதுரையில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை சாலை ஓரத்தில் நின்ற ஆதரவாளர்கள் சால்வை கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

தொண்டர் படை
தொண்டர் படை

அதேபோல் 132 இடங்களில் சசிகலாவின் வாகனத்தை மறித்து மரியாதை செய்ததும், சசிகலாவுக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இந்தச் சூழலில் தஞ்சாவூரில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சசிகலாவின் உதவியாளர் கார்த்தி பலருக்கு போன் செய்து `1-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது. நீங்கள் வர வேண்டும். இடத்தைப் பின்னர் சொல்கிறேன்’ எனச் சில தினங்களுக்கு முன்பே கூறியிருந்தார்.

``அதிமுக என்ற யானை மீது அமர்ந்திருந்த கொசு சசிகலா!" - போட்டுத்தாக்கும் ஜெயக்குமார்

ஆனால் தற்போது, `ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டாம்; ஆதரவாளர்களைச் சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாம். அதற்கான ஏற்பாட்டை மட்டும் செய்யுங்க’ என சசிகலா கூறியிருக்கிறார். சசிகலா ரொம்பவே நிதானமாக இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. மதியம் வீட்டிலிருந்தபடியே தனது ஆதரவாளர்களைச் சந்திக்கும் சசிகலா போட்டோவும் எடுத்துக்கொள்கிறார். இதையடுத்து 2, 5-ம் தேதிகளி தொண்டர்களைச் சந்திக்கிறார். இதற்கான ஏற்பாட்டை இளவரசி மகன் விவேக், சசிகலா கணவர் நடராஜனின் தம்பி ராமச்சந்திரன் மகன் டாக்டர் ராஜூ உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.

சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

இதற்காக ஜெயா டி.வி லைவ் வாகனமும், பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் தொண்டர் படையும் தயார்நிலையில் இருக்கின்றன. தீபாவளி அன்றும், அதற்கு முதல் நாளும் தொண்டர்களைச் சந்திக்கவில்லை. 5-ம் தேதிக்குப் பிறகு சென்னை புறப்படும் சசிகலா சில நாள்களுக்குப் பிறகு பயணங்களைத் திட்டமிட்டுக்கொண்டு மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். அப்போதிலிருந்து சசிகலா வேகம் காட்டுவார்” எனத் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு