Published:Updated:

``பிளவுகளைக் கடந்து அதிமுக நிச்சயம் ஒன்றிணையும்..!" - மதுரையில் சசிகலா

வி.கே.சசிகலா

``பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அ.தி.மு.க ஒன்றிணையும், அ.தி.மு.க வெற்றி வாகை சூடும். அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்." - சசிகலா

``பிளவுகளைக் கடந்து அதிமுக நிச்சயம் ஒன்றிணையும்..!" - மதுரையில் சசிகலா

``பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அ.தி.மு.க ஒன்றிணையும், அ.தி.மு.க வெற்றி வாகை சூடும். அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்." - சசிகலா

Published:Updated:
வி.கே.சசிகலா

"பிளவுகளைக் கடந்து நிச்சயம் அ.தி.மு.க ஒன்றிணைந்து, அம்மாவின் ஆட்சி உருவாகும்" என்று மதுரைக்கு வந்த வி.கே.சசிகலா தெரிவித்தார்.

வி.கே.சசிகலா
வி.கே.சசிகலா

அ.தி.மு.க-வின் முதல் வேட்பாளரும், முதல் எம்.பி-யுமான மாயத்தேவர் நேற்று காலமானார். அவருக்கு அஞ்சலில் செலுத்த சின்னாளப்பட்டிக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வி.கே.சசிகலா இன்று விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

வி.கே.சசிகலா
வி.கே.சசிகலா

``புரட்சித்தலைவர் அ.தி.மு.க-வைத் தொடங்கிய சிறிது காலத்திலேயே... திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவர் அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சுயேச்சைச் சின்னத்தில் வெற்றிபெற்றவர்.

கழகத்தின் முதல் வெற்றிக்குச் சொந்தக்காரர், அவருடைய இழப்பு ஈடுசெய்ய இயலாதது. அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் செல்கிறேன்" என்றார்.

வி.கே.சசிகலா
வி.கே.சசிகலா

அதையடுத்து அவரிடம், தற்போது அ.தி.மு.க பிளவுபட்டிருப்பது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்தவர், ``பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அ.தி.மு.க ஒன்றிணையும், அ.தி.மு.க வெற்றி வாகை சூடும். அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்" என்றார்.