Published:Updated:

`சசிகலா விடுதலை நாள் தள்ளிப்போகலாம்!' - உறவினர் வெங்கடேஷ்

சசிகலா
சசிகலா

``சசிகலா 27-ம் தேதி விடுதலையாகி வெளியில் வருவார் என்று சொல்லிவிட முடியாது. முதலில் நல்லபடியாக குணமடைந்து வரட்டும்" என்கிறார் சசிகலாவின் உறவினர் டாக்டர் வெங்கடேஷ்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 21-ம் தேதி அவருக்குத் திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறலால் அவர், பெங்களூரு பவ்ரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆதரவாளர்களை நோக்கிக் கையசைக்கும் சசிகலா
ஆதரவாளர்களை நோக்கிக் கையசைக்கும் சசிகலா

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு அரசு விக்டோரியா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, விக்டோரியா மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.

சசிகலா சிகிச்சை பெற்றுவரும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு இன்று வந்த சசிகலாவின் குடும்ப உறவினர் டாக்டர் வெங்கடேஷை சந்தித்துப் பேசினோம். நம்மிடம் அவர், ``அம்மா நல்லா இருக்காங்க. அவர் அனுமதிக்கப்பட்ட ஆரம்பக் கட்ட நேரத்தில் நான் பிபி கிட் அணிந்துச்சென்று அவரை நேரில் பார்த்தேன். பரிசோதனை குறித்து டாக்டர்களிடம் பேசிகிட்டுதான் இருக்கிறேன்.

டாக்டர் வெங்கடேஷ்
டாக்டர் வெங்கடேஷ்

மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். ஆரம்பத்தில் சிறு பதட்டத்தில் இருந்தார். இப்போது அதிலிருந்து மீண்டுவிட்டார். எனக்கு வேண்டப்பட்ட மருத்துவர்களும் இங்கு இருக்கிறார்கள். நானும் டாக்டர் என்பதால் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். இதற்காகவே நான் பெங்களூருவில் தங்கியுள்ளேன்.

சசிகலாவை அடுத்து பெங்களூரு மருத்துவமனை அழைத்து வரப்பட்ட இளவரசி!

காலை, மதியம், இரவு என நாளொன்றுக்கு மூன்று முறை மருத்துவர்களிடம் பேசுகிறேன். உடல்நிலையைப் பொறுத்துதான் விடுதலையாகி வெளியில் வரும் முடிவை சொல்ல முடியும்.

டாக்டர் வெங்கடேஷ்
டாக்டர் வெங்கடேஷ்

வரும் 27-ம் தேதி விடுதலையாகி வெளியில் வருவார் என்று சொல்லிவிட முடியாது. முதலில் நல்லபடியாக குணமடைந்து வரட்டும். எப்போது குணமடைவார் என்று உடனே சொல்லிவிட முடியாது. மருத்துவர்கள்தான் சொல்ல வேண்டும். டி.டி.வி.தினகரன் இங்குதான் இருந்தார். இப்போது சென்னை சென்றிருப்பார் என்று நினைக்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு