Published:Updated:

``அதிமுக தொண்டர்களின் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் நிச்சயம் நிறைவேறும்" - சசிகலா

சசிகலா

அ.தி.மு.க தொண்டர்களைச் சந்திப்பதற்காக, தென்மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா, ``கழகத் தொண்டர்களின் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் நிச்சயம் நிறைவேறும்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க மிகப்பெரும் தோல்வியைத் தழுவியது. அதையடுத்து, தற்போது அ.தி.மு.க-வில் சசிகலா, தினகரன் ஆகியோரை மீண்டும் சேர்ப்பது தொடர்பான விவாதங்கள் மறைமுகமாகப் பரபரத்துக் கொண்டிருக்கின்றன. இதன் நீட்சியாக, ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா அண்மையில் சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசினார். அதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், சசிகலா `கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்’ என இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி

சசிகலா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``உங்களுடைய எதிர்பார்ப்புகளையும் ஏக்கங்களையும் அறிந்துகொள்ள முடிந்தது. அனைத்துப் பகுதிகளிலுமுள்ள உள்ள ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைவரும் ஒருசேர `நம் கழகத்தைக் காப்பாற்றிட வேண்டும்' என்ற முழக்கத்தை எழுப்புகிறீர்கள். நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாத வகையில் அனைத்தையும் நிறைவேற்றுவேன். எத்தகைய சோதனைகள் வந்தாலும் அவற்றை முறியடித்து கழகத்தைக் காப்போம், கவலை வேண்டாம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முன்னதாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் புறப்படுகையில் சென்னை விமான நிலையத்தில், ``அ.தி.மு.க ஒரு குடுமபம், பிள்ளைகளை நிச்சயம் சந்திப்பேன்" என்று பத்திரிகையாளர்களிடம் சசிகலா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism