இரண்டாவது கட்ட ஆன்மிக பயணத்தை நேற்றுத் தொடங்கிய வி.கே.சசிகலா, திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றுவிட்டு மதுரை மீனாட்சியம்மனையும், குலசாமியையும் வழிபட்டு உற்சாகமாக சென்னை கிளம்பினார்.

தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, ஆன்மிகச் சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்த வகையில், நேற்று இரவு திருச்செந்தூர் வந்தவர், இன்று காலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் விஸ்வரூப தரிசனம் செய்தார். சாமிக்கு வெங்கல வேல் காணிக்கையாக சாத்தினார்.

அதைத்தொடர்ந்து மதுரை வந்தவர், மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அருகிலுள்ள அவரின் குலசாமியான மதுரைவீரனை வழிபட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
குலசாமி கோயிலில் வழிபட்டபின்பு அவர் உற்சாகமாக காணப்பட்டார். தகவல் தெரிந்து அ.தி.மு.க, அ.ம.மு.க-வினர் அவரைக் காண குவிந்தனர்.

மிகவும் உற்சாகமாக கோயிலுக்கு வந்த சசிகலா, தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்தவர்களுடன் மகிச்சியாக போஸ் கொடுத்தார். குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தார். பின்னர், அங்கிருந்து விமானம் மெல்லாம் சென்னை கிளம்பினார்.