Published:Updated:

`ஐ.சி.யூ- வில் திவாகரன்; நலம் விசாரிக்காத சசிகலா?!' கலக்கத்தில் ஆதரவாளர்கள்!

சசிகலா

என்னமோ சதித் திட்டம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த திவாகரன், சசிகலா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மீடியா முன் பரபரப்பைப் பற்றவைத்தார்.அதன் பிறகே அனைவரது கவனமும் சசிகலா பக்கம் திரும்பியது.

`ஐ.சி.யூ- வில் திவாகரன்; நலம் விசாரிக்காத சசிகலா?!' கலக்கத்தில் ஆதரவாளர்கள்!

என்னமோ சதித் திட்டம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த திவாகரன், சசிகலா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மீடியா முன் பரபரப்பைப் பற்றவைத்தார்.அதன் பிறகே அனைவரது கவனமும் சசிகலா பக்கம் திரும்பியது.

Published:Updated:
சசிகலா

அ.தி.மு.க தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு போன் செய்துவரும் சசிகலா, அவர்களிடம் ``கொரோனா பரவல் வேகமாக இருக்கிறது. எல்லோரும் பத்திரமாக இருங்க. குடும்பத்தையும் பாதுகாப்பாக கவனிச்சுங்கங்க’’ என அக்கறையோடு நலம் விசாரித்த பிறகே அரசியல் குறித்துப் பேசிவருகிறார். ஆனால், தன் சொந்தத் தம்பி திவாகரன் கொரோனா தொற்று ஏற்பட்டு, சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர் உடல்நிலை குறித்து சசிகலா இதுவரை நலம் விசாரிக்கவில்லை. அவரைத் தடுக்கும் சக்தி எதுவென திவாகரன் தரப்பினர் வேதனையுடன் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

திவாகரன்
திவாகரன்

சசிகலா தம்பி திவாகரன், மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக் கோட்டை பண்ணை வீட்டில் வசித்துவருகிறார். கொரோனா இரண்டாவது பரவல் காரணமாக வெளியே செல்வதையும் தவிர்த்துவந்தார். பண்ணை வீட்டிலுள்ள மெயின் கேட் நுழைவு வாயிலில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என போர்டு எழுதிவைத்து, யாரையும் சந்திக்காமல் தவிர்த்துவந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சில தினங்களாக திவாகரனுக்கு உடல்நிலையில் குறைபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு நேற்று இரவு மூச்சுத்திணறல் ஏற்பட, உடனடியாக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதிகாலை சுமார் 4 மணியளவில் சென்னை போரூரிலுள்ள ராமசந்திரா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரின் மகன் ஜெய் ஆனந்த் உடனிருந்து திவாகரனை கவனித்துவருகிறார்.

சசிகலா-திவாகரன்
சசிகலா-திவாகரன்

இந்தநிலையில், இதுவரை திவாகரனின் உடல்நிலை குறித்து சசிகலா போன் மூலம்கூட யாரிடமும் விசாரிக்கவில்லை. தன் அக்கா சசிகலாவுக்கு ஏதாவது என்றால் திவாகரன் துடிதுடித்துவிடுவார். ஆனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும் சசிகலா அது குறித்து எதுவும் பேசாமல் இருப்பதாக திவாகரன் தரப்பில் கலங்கிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து திவாகரன் தரப்பைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம்,``கடந்த சில வாரங்களாக அ.தி.மு.க நிர்வாகிகளிடம் போனில் பேசும் சசிகலா, `கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. எல்லோரும் பத்திரமாக இருங்க. குடும்பத்தையும் பாதுகாப்பாக கவனிச்சுக்கங்க. கொரோனா பிரச்னை தீர்ந்ததும் எல்லோரையும் சந்திக்கிறேன். தைரியமாக இருங்க’’ என அக்கறையோடு பேசி நலம் விசாரித்துவருகிறார். வரவேற்கக்கூடிய ஒன்றாகவே நாங்கள் இதைப் பார்க்கிறோம். இது குறித்து ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவியது.

திவாகரன் ஏற்கெனவே உடலில் சில ஆபரேஷன்கள் செய்துகொண்டவர். அவர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மன்னார்குடியிலிருந்து சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது குடும்பத்தினர் கலங்கி நிற்கின்றனர். இப்போதும்கூட சசிகலா, திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் உள்ளிட்ட யாரையும் தொடர்புகொண்டு உடல்நிலை குறித்து, நலம் விசாரிக்கவில்லை.

சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாவதற்கு முதல் நாள் கொரோனா தொற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறி, சிறைத்துறையினர் சார்பில் எந்த வசதியும் இல்லாத சாதாரண மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனால் எந்தச் சிகிச்சையும் கொடுக்கப்படவில்லை. பதறித் துடித்த திவாகரன், இரவோடு இரவாக பெங்களூரு சென்று மருத்துவமனை நிர்வாகத்திடம், "ஏன் எந்தச் சிகிச்சையும் கொடுக்காம இருக்கீங்க... உடனடியாக சிடி ஸ்கேன் எடுங்க" எனக் கூற, அதன் பிறகும் சசிகலாவுக்குச் சிகிச்சை கொடுப்பதில் மெத்தனம் காட்டப்பட்டது.

சசிகலா
சசிகலா

இதையடுத்து என்னமோ சதித் திட்டம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த திவாகரன், சசிகலா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மீடியா முன் பரபரப்பைப் பற்றவைத்தார். அதன் பிறகே அனைவரது கவனமும் சசிகலா பக்கம் திரும்பியது. சொல்லப்போனால் இக்கட்டான அந்தச் சூழ்நிலையிலிருந்து சசிகலாவைக் காப்பாற்றியது திவகாரன்தான். ஆனால், சிறையிலிருந்து வந்த பிறகு சசிகலாவை திவாகரன் சந்திக்கவிடாமல் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த சிலர் சதி செய்தனர். சசிகலா சிறைலிருந்து அழைத்து வரப்பட்டபோது, சசிகலாவின் காரைப் பின்தொடர்ந்து வந்த திவகாரன் மகன் ஜெய் ஆனந்த் மற்றும் அவரது மருமகன் டாக்டர் விக்ரம் வந்த கார் விபத்துக்குள்ளானது. அந்தத் தகவலைக்கூட சசிகலாவிடம் அருகிலிருப்பவர்கள் தெரியப்படுத்தவில்லை. சிறையிலிருந்தவரை விக்ரமிடம் சசிகலா பேசிக்கொண்டுதான் இருந்தார். ஆனால் வெளியே வந்த பிறகு பேசவே இல்லை.

அரசியல்ரீதியான மனக் குமுறல்கள் தீர்ந்து, மனக்கசப்புகள் நீங்கி சசிகலா, திவாகரன் இணைவதை குடும்பத்தைச் சேர்ந்த சிலர் விரும்பவில்லை. அன்றைக்கு பெங்களூரு மருத்துவமனையில் இருந்தபோது தங்களுக்கு எதிராக அரசியல் சூழ்ச்சிகள் பின்னப்பட்டிருப்பதை உணர்ந்து, ``எங்களை ஏன் முதுகில் குத்துகிறீர்கள்... நாங்கள் எவ்வளவுதான் தாங்குவது..." என திவாகரன் பேசினார். அதையே தற்போது சசிகலா பேசிவருகிறார்.

சசிகலாவைச் சுற்றியிருக்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரே சசிகலாவின் இந்தநிலைக்குக் காரணம் என திவாகரன் வெளிப்படையாகக் கூறினார். யதார்த்தைச் சொன்னாலும், அதை ஏற்க மறுத்து, பதவி மோகத்தில் இருந்த சிலர், அதைக் கேட்டுக்கொள்ளவில்லை. இதைக் காரணமாகவைத்து திவாகரன், சசிகலாவைச் சந்திக்கவிடாமல் சிலந்தி வலை அமைத்தனர். இந்தநிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கும் திவாகரன் உடல்நிலை குறித்து சசிகலா போனில்கூட யாரிடமும் விசாரிக்கவில்லை. கிட்டத்தட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 12 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை திவாகரன் குறித்த அறிக்கைகூட வெளியிடவில்லை. இதைச் செய்ய விடாமல் தடுக்கும் சக்திகளை சசிகலா உணர்ந்துகொள்ள வேண்டும். இது தான் பலரது விருப்பம்" எனத் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism