Published:Updated:

ஹவாலா வழக்கு: ``சத்யேந்தர் ஜெயின் தேசபக்தர்; பத்ம விபூஷண் வழங்க வேண்டும்" - அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

``அமலாக்கப் பிரிவு மூலம் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும், வழக்கையும் தனிப்பட்ட முறையில் படித்தேன். அதில் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை." - அரவிந்த் கெஜ்ரிவால்

ஹவாலா வழக்கு: ``சத்யேந்தர் ஜெயின் தேசபக்தர்; பத்ம விபூஷண் வழங்க வேண்டும்" - அரவிந்த் கெஜ்ரிவால்

``அமலாக்கப் பிரிவு மூலம் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும், வழக்கையும் தனிப்பட்ட முறையில் படித்தேன். அதில் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை." - அரவிந்த் கெஜ்ரிவால்

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசில் சுகாதாரம், உள்துறை, மின்சாரம், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின், கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்புடைய ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரின் கைது தொடர்பாக ஸ்மிருதி இரானி டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசுகையில், ``2010-11 முதல் 2015-2016 வரை ஷெல் நிறுவனங்கள் மூலம் ஜெயின் ரூ.16.39 கோடி மோசடி செய்திருக்கிறார். ஊழல் தடுப்புச் சட்டத்தில் சத்யேந்திர ஜெயின் முதன்மைக் குற்றவாளி. ஊழல் துரோகத்துக்குச் சமம் என்று சொன்னீர்கள். 'தேஷ் கா கதர்' (தேசத் துரோகி) சத்யந்தர் ஜெயின் உங்கள் ஆதரவை இன்னும் எவ்வளவு காலம் பெறுவார்?" எனக் கேள்வி எழுப்பினார்.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

இதற்கு பதிலளிக்கும்விதமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``டெல்லியில் மொஹல்லா கிளினிக் எனும் திட்டத்தைக் கொடுத்த டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தேசபக்தர். அவரைப் பற்றி நாடு பெருமைகொள்ள வேண்டும், உலகெங்கிலுமிருந்து பல மக்கள் அந்தத் திட்டத்தைப் பார்க்க வந்துள்ளனர். எனவே, அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட வேண்டும். ஊழல் புகார் சம்பந்தமாக எல்லோரும் அவரை விசாரிக்கட்டும். சிபிஐ ஏற்கெனவே அவரை விசாரித்து குற்றத்தை நிரூபிக்காமல் விடுவித்துவிட்டது. தற்போது அமலாக்கத்துறையும் அதையேதான் செய்யும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சத்யேந்தர் ஜெயின்
சத்யேந்தர் ஜெயின்

சத்யேந்திர ஜெயின் மீது அமலாக்கப் பிரிவு மூலம் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும், வழக்கையும் தனிப்பட்ட முறையில் படித்தேன். அதில் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. நாங்கள் கடுமையான தேசபக்தர்கள். தலை துண்டிக்கப்பட்டாலும் நாட்டை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டோம். அவரின் கைது அரசியல் உள்நோக்கம்கொண்டது" எனக் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பண மோசடி வழக்கில் டெல்லியில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் டெல்லி சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை ஜூன் 9 வரை அமலாக்க இயக்குநரகக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism