Published:Updated:

``அரசுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் அறிக்கை" - பெண் எம்.பி., கணவர்மீது தேசத்துரோக வழக்கு

சிறைக்குச் செல்லும் ராணா தம்பதி

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்தின் முன்பு ஹனுமான் பாடல்களைப் பாட முயன்ற பெண் எம்.பி., அவரின் கணவர்மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

``அரசுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் அறிக்கை" - பெண் எம்.பி., கணவர்மீது தேசத்துரோக வழக்கு

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்தின் முன்பு ஹனுமான் பாடல்களைப் பாட முயன்ற பெண் எம்.பி., அவரின் கணவர்மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
சிறைக்குச் செல்லும் ராணா தம்பதி

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக பாஜக ஏதாவது ஒரு வகையில் தொந்தரவு கொடுத்துக்கொண்டேயிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அமைதியாக இருந்த உத்தவ் தாக்கரேவின் சித்தப்பா மகன் ராஜ் தாக்கரேயிடம் சொல்லி, மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்ற பிரச்னையைக் கிளப்பியதாகச் சொல்கிறார்கள். இப்போது அது பூதாகரமாக வெடித்திருக்கிறது.

அமராவதியைச் சேர்ந்த பெண் எம்.பி நவ்நீத் ராணா, அவரின் கணவர் எம்.எல்.ஏ ரவி ராணா ஆகியோர் சனிக்கிழமை முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்துக்கு எதிரில் ஹனுமான் பாடல்களைப் பாடப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து சிவசேனாவினர் ராணா தம்பதியர் மும்பையில் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். சனிக்கிழமை இரவு ராணா தம்பதியர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை போலீஸ் நிலையத்தில் காணச் சென்ற பாஜக முன்னாள் எம்.பி கிரீத் சோமையா மீதும் சிவசேனாவினர் கற்களை வீசித் தாக்கினர். இதனால் சிவசேனா, பாஜக இடையே மோதல் அதிகரித்துள்ளது. ராணா தம்பதியர் நேற்று பாந்த்ரா விடுமுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது
மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது

அவர்களை போலீஸ் காவலுக்கு அனுப்ப வேண்டும் என்று மாநில அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இருவரின் இந்தச் செயலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டியிருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அதோடு பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை மாலையில் மும்பை வருவது தெரிந்திருந்தும் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இருவரும் செயல்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இருவர் மீதும் 124 ஏ பிரிவின் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் மனதில் வெறுப்புணர்வைத் தூண்டும்விதமாக அறிக்கைகளை வெளியிட்டதாகவும், அதனாலேயே இவ்வழக்கு பதிவுசெய்யப்பட்டதாகவும் கூறி இன்ஸ்பெக்டர் சைலேஷ் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனாலும் இருவரையும் போலீஸ் காவலுக்கு அனுப்ப மறுத்த நீதிமன்றம் இருவரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டது. இருவரின் ஜாமீன் மனு வரும் 29-ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. ஹனுமான் பாடல் பாட முயன்றதற்கு தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு பாஜக முன்னாள் எம்.பி கிரீத் சோமையா மீது சிவசேனா-வினர் தாக்குதல் நடத்தியதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மற்றொரு புறம் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கிரீத் சோமையா கோரிக்கை விடுத்துள்ளார்.

``அரசுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் அறிக்கை" - பெண் எம்.பி., கணவர்மீது தேசத்துரோக வழக்கு

இதற்கிடையே நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மும்பை வந்திருந்தார். அவரை வரவேற்க முதல்வர் உத்தவ் தாக்கரே செல்லவில்லை. அவருக்கு பதில் அவரின் மகன் ஆதித்ய தாக்கரேதான் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றார். அதோடு மறைந்த லதா மங்கேஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமருக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்பட்டது. இவ்விழாவிலும் உத்தவ் தாக்கரே கலந்துகொள்ளவில்லை. அரசுத் தரப்பில் அமைச்சர் சுபாஷ் தேசாய் கலந்துகொண்டார். உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் பழம்பெரும் தொண்டர் சந்திராவின் இல்லத்துக்குச் சென்று அவரைப் பார்த்து பாராட்டிவிட்டு வந்தார். 83 வயதாகும் சந்திரா மும்பையில் ஹனுமான் பாடல்களைப் பாட முயன்ற ராணா தம்பதிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவுக்கு வரும்படி உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக லதா மங்கேஷ்கர் குடும்பத்தினர் தெரிவித்தனர். பிரதமர் மோடி நிகழ்ச்சியை உத்தவ் தாக்கரே புறக்கணித்திருப்பது இரு கட்சிகளிடையேயான உறவில் விரிசலை அதிகரித்திருக்கிறது. பாஜக-வை முழு வேகத்தில் எதிர்க்க உத்தவ் தாக்கரே முடிவு செய்துவிட்டதை இது காட்டுவதாக அமைந்திருக்கிறது. எனவேதான் பாஜக இப்போது ராஜ் தாக்கரேவைத் தன் கையில் எடுத்திருக்கிறது. பாஜக-வால் மகாராஷ்டிராவில் தனித்து களம் காண முடியாது. எனவேதான் ராஜ்தாக்கரேவை இப்போது களத்தில் இறக்கியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism