Published:Updated:

"வைகோ பேச்சைக் கேட்க, வாடகை சைக்கிள் பயணம்!" - சீமான் ஃப்ளாஷ்பேக் பகிர்வு

சீமான்
சீமான்

நான் பேசியதில், 2009-ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில், ஈழப் படுகொலையைக் கண்டித்துத் திரைத்துறை சார்பில் நடந்த கூட்டத்தில் பேசியதைச் சொல்லலாம். அந்தப் பத்து நிமிட உரைதான் என்னுடைய இந்தப் பயணத்தின் தொடக்கம்

உங்களுக்கு மனநிறைவைத் தந்த உரையைச் சொல்லுங்கள் எனக் கேட்க, வெகு உற்சாகமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்த பதில்:

''அரசியலில் அண்ணன்கள் வைகோ, திருமாவளவன் ஆகிய இருவரின் பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு, வைகோவின் பேச்சை, பல கிலோமீட்டர் போய்க் கேட்ட காலங்கள் உண்டு. அதேபோல, திருமா அண்ணனின் பேச்சை பக்கத்தில் இருந்து கேட்டு வளர்ந்தவன் நான்.

இலக்கியத்தில், என் மாமா காளிமுத்தின் பேச்சையும், அப்பா வைரமுத்துவின் பேச்சையும் சொல்லலாம். நான் பார்த்ததிலேயே, தேவையற்ற வார்த்தைகளைத் தன் பேச்சில் பயன்படுத்தாத இரண்டு பேச்சாளர்கள் இவர்கள் இருவரும்தான். அதீத நினைவாற்றலுடன் தாங்கள் படித்ததை, அச்சுக் கோத்ததைப்போல் பேச்சில் கொண்டு வரும் வல்லமை இவர்களுக்கு உண்டு.

வாணியம்பாடி கல்லூரி இலக்கியக் கழகத்தில், காளிமுத்து மாமா பேசிய பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்தது. வைரமுத்து அப்பா பேசியதில் தமிழாற்றுப்படையில் அவர் பேசிய அனைத்து உரைகளும் பிடிக்கும். இவர்களோடு, அப்பா நெல்லைக் கண்ணனின் பேச்சையும், வாணியம்பாடி அப்துல்காதர் ஐயாவின் பேச்சுகளையும் நான் வியந்து ரசித்திருக்கிறேன்.

சீமான்
சீமான்

நான் பேசியதில், 2009-ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில், ஈழப் படுகொலையைக் கண்டித்துத் திரைத்துறை சார்பில் நடந்த கூட்டத்தில் பேசியதைச் சொல்லலாம். அந்தப் பத்து நிமிட உரைதான் என்னுடைய இந்தப் பயணத்தின் தொடக்கம். அதற்கு முன்னால் பதினைந்து ஆண்டுகள், மார்க்சிய, பெரியாரிய மேடைகளில் பேசியிருந்தாலும் அந்தப் பேச்சை என்னால் மறக்கவே முடியாது. என் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றிப்போட்டது அந்தப் பேச்சும் அதன் வீச்சும்தான்'' என்றார் சீமான்.

- பிரிக்கவே முடியாதது அரசியல்வாதிகளும் மைக்கும்தான். ஆனால், அவர்களுக்கே மிகவும் பிடித்த பேச்சுக்குச் சொந்தக்காரர்கள் யார் என, தமிழகத்தின் சில முக்கிய அரசியல் தலைவர்களிடம் கேட்டோம்.

''உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது'' என்ற கண்டிஷனுடன், அதேவேளை, அரசியல் மட்டுமல்லாது இலக்கியம், ஆன்மிகம் இப்படி எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பகிர்ந்துகொள்ளலாம்.

அவர் பேச்சு பிடிக்கும்!
அவர் பேச்சு பிடிக்கும்!

அதேபோல, நீங்கள் பேசியதிலேயே, உங்களுக்கு மனநிறைவைத் தந்த உரையையும் சொல்லுங்கள் எனக் கேட்க, வெகு உற்சாகமாக அவர்கள் தந்த பதில்கள் இங்கே ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/39ZypIZ > அவர் பேச்சு பிடிக்கும்! https://bit.ly/39ZypIZ

சிறப்புச் சலுகை

விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு