Published:Updated:

`கேரள மக்களின் புரிதல்கூட, தமிழர்களுக்கு இல்லை!' -மதுரையில் ஆவேசப்பட்ட சீமான்

திரைப்பட நடிகர்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. திரைத்துறையினருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தமிழகத்தில் மட்டும்தான்.

சீமான்
சீமான்

``தமிழகத்தில் ஆட்சி அமைத்து மக்களுக்காக வாழ வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை. தமிழகத்தைத் தமிழர்கள்தாம் ஆள வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழர்களையும் தமிழகத்தையும் நம்மைத் தவிர வேறு யாரும் காப்பற்ற முடியாது'' என்று மதுரையில் நடந்த மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் சீமான் பேசினார்.

சீமான்
சீமான்

மதுரை ஒத்தக்கடையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சீமான் பேசினார். அப்போது, ''தமிழக மக்கள் அரசியல் கட்சிகளின் போலியான பேச்சுகளைக் கேட்டு அவர்களுக்கு அடிமையாக உள்ளனர். அதுமட்டுமல்லாமல் திரைப்பட நடிகர்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. திரைத்துறையினருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தமிழகத்தில் மட்டும்தான்.

கேரளாவைப் பாருங்கள்... அந்த மாநிலத்தில் நடிகர்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். மம்முட்டி, மோகன்லால் போன்ற திறமையான நடிகர்கள் இருந்தாலும் அவர்களைத் தலைவர்களாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கேரள மக்களின் புரிதல் தமிழர்களுக்கு இல்லை.

சீமான்
சீமான்
என்.ஜி.மணிகண்டன்

ராணுவ வீரர் ஓய்வு பெற்றால் ஏதாவதொரு நிறுவனத்துக்கு காவலாளி வேலைக்குச் செல்கிறார். ஆனால், நடிகர்கள் மட்டும் ஓய்வு பெற்றால் நேரடியாக முதலமைச்சராக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ரஜினி, கமல், விஜய் போன்றோர் ரசிகர்களைச் சந்திக்கிறார்கள். நாங்களோ மக்களைச் சந்திக்கிறோம். நடிகர்கள் தாங்கள் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி, மக்கள் வாழ வேண்டும் என்று நினைக்கிறது. தமிழினத்துக்குத் துரோகம் செய்த தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களின் லட்சியமாகும்.

சீமான்
சீமான்

பிரபாகரன் படம் வைப்பதைத் தவிர்த்தால் நாம் தமிழர் கட்சி இன்னும் அதிகமாக வாக்குகள் வாங்கலாம் என்று பலர் கூறுகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. கடந்த தேர்தலில் 17 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. எங்கள் கொள்கை நிச்சயமாக ஒருநாள் வெல்லும்'' என்றார் ஆவேசத்துடன்.