Published:Updated:

`ரஜினியின் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் 2021-ல் நடக்கும்' - கொதித்த சீமான்

``நான் வாங்கிய விருதுக்குத் தமிழக மக்கள்தான் காரணம். விருதை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்'' என்றார் ரஜினி.

சீமான்
சீமான்

கோவாவில் நடந்த தேசிய திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. கோவா நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ரஜினி இன்று சென்னை திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், ``நான் வாங்கிய விருதுக்குத் தமிழக மக்கள்தான் காரணம். விருதை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்'' என்றார்.

ரஜினி
ரஜினி

திராவிட மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரஜினி. ``வரும் 2021-ல் தமிழக அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள்” என்றார்.

`அசுரன் படத்தின் வெற்றி மிக முக்கியமானது.. ஏனென்றால்..!’- காரணம் பகிரும் பா.இரஞ்சித்
சீமான் ட்விட்
சீமான் ட்விட்

ரஜினியின் இந்தக் கருத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,

'தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்' என்கிற நினைப்பிலும் மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021-ல் நடக்கும், நடந்தே தீரும்' என காட்டமாகப் பதிலளித்துள்ளார்.