Published:Updated:

`நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தான் செய்வோம்!'- தெலங்கானா என்கவுன்டர் குறித்து சீமான்

சீமான்
சீமான்

மரணம் எந்தக் குற்றத்துக்கும் தண்டனையாக இருக்கக் கூடாது என்பதற்காகப் போராடுபவர்கள் நாங்கள். ஆனால், பெண்களை ஒரு போகப்பொருளாக நினைத்த சிலர் செயலுக்கு மரணத்தைத் தவிர வேறு தண்டனை இருக்க முடியாது.

தெலங்கானாவில் பெண் மருத்துவர் திஷா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று காலை என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டருக்குப் பொதுமக்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் தெலங்கானா மக்கள் அப்பகுதி போலீஸாருக்கு என்கவுன்டர் செய்ததற்காகப் பாராட்டுகள் தெரிவித்ததுடன் பூக்களைத் தூவி அவர்களை வரவேற்றுவருகின்றனர்.

அதேநேரம் சமூக ஆர்வலர்கள் உட்பட ஒரு சிலர் என்கவுன்டருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். `குற்றத்துக்கு மரணம் தண்டனை கிடையாது' என அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அரசியல்வாதிகள் மத்தியிலும் இருவிதமான கருத்துகள் நிலவி வருகின்றன.

என்கவுன்டர் நடந்த இடம்
என்கவுன்டர் நடந்த இடம்
ANI

இதற்கிடையே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவரிடம் தெலங்கானா சம்பவம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ``இந்த என்கவுன்டரை நான் வரவேற்கிறேன். மரணம் எந்தக் குற்றத்துக்கும் தண்டனையாக இருக்கக்கூடாது என்பதற்காகப் போராடுபவர்கள் நாங்கள். ஆனால், பெண்களை ஒரு போகப்பொருளாக நினைத்த சிலர் செயலுக்கு மரணத்தைத் தவிர வேறு தண்டனை இருக்க முடியாது.

`நீங்கள் சொல்லித்தான் என்கவுன்டர் நடந்ததே தெரியும்!'-போலீஸ் நடவடிக்கையால் கலங்கும் நால்வர் குடும்பம்

பொள்ளாச்சியில் அவ்வளவு பெரிய பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களை 90 நாள்களில் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்து வெளியில்விட்டதெல்லாம் பெரிய கொடுமை. இது வரலாற்றுப் பெரும்பிழை. தெலங்கானா போலீஸ் செய்தது போல, இதுமாதிரி எந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை நடக்கிறதோ அதே இடத்தில் வைத்து மக்கள் முன்னிலையில் நான்கு பேரைச் சுட்டால்தான் அச்சம் பரவும். மரணம் ஒன்றுதான் இவர்களை போன்றவர்களை ஒழுங்காக நடக்க அறிவுறுத்தும்.

Seeman
Seeman

இல்லையென்றால் 90 நாளில் வெளியே வந்துவிடலாம், எந்தக் குற்றமும் செய்யலாம், மக்கள் காசிலேயே சிறையில் சாப்பிடலாம் என நினைப்பார்கள். எந்தக் குற்றமும் தண்டிக்கப்படமாட்டாது என்றால் இங்கே குற்றங்கள் குறையாது. 6 வயதுச் சிறுமியை ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கிறான் என்றால் அவனைத் தண்டிக்காமல் ஜெயிலில் போட்டால் மட்டும் தீர்வு கிடைக்காது.

அதனால் தெலங்கானா போலீஸ் செயலை முழுவதுமாக வரவேற்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தான் செய்வோம். பாலியல் குற்றத்துக்கு இருக்கக்கூடிய ஒரே தண்டனை இது ஒன்றுதான்" என்று காட்டமாகப் பேசினார்.

12 மணி முதல் விசாரணை; 6 மணிக்கு தப்பி ஓட்டம்! - எப்படி நடந்தது ஹைதராபாத் என்கவுன்டர்? #DishaCase
அடுத்த கட்டுரைக்கு