Published:Updated:

``கிண்டல் செய்பவர்களைப் பற்றிக் கவலையில்லை!" - செல்லூர் ராஜூ பேட்டி

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ 'இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும்' என்ற எண்ணம் அவர்களைப் போல் எனக்கும் ரத்தத்தில் ஊறியிருக்கிறது' என்றார்

''தி.மு.கழக எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன் மரணம் அடைந்தது பற்றி?''

''திராவிட இயக்கப் பாரம்பர்யத்தில் வந்த அன்பழகனின் மறைவு வருத்தம் அளிக்கிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவருக்கு எதிராகப் பேசினாலும், தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர் அன்பு. தன் கட்சிக் கொள்கைப்படி வாழ்ந்தவர்.

அவருடைய மரணம் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு பாடம். கொரோனா காலத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். விலகியிருந்து மக்களுக்கு உதவ வேண்டும்.''

'ரேஷன் கடைக்கு டூவீலரில் சென்று நீங்கள் நடவடிக்கை எடுத்ததை, 'பொலிட்டிக்கல் ஸ்டன்ட்' என்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனரே?''

''நான் எம்.ஜி.ஆர் வழியில் வந்தவன். அவர் எப்படி அநியாயத்தைத் தட்டிக் கேட்பாரோ அதேபோல், எங்கள் ஆட்சியில் யாராவது முறைகேடு செய்தால் நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். இதேபோல் திருச்சியில் புகார் வந்தபோது சர்ப்ரைஸாகச் சென்று நடவடிக்கை எடுத்தேன்.

மக்கள் ரேஷன் பொருள்களை நம்பியிருக்கும் சூழலில், இதில் முறைகேடு நடப்பதை அனுமதிக்க முடியாது. இதைக் கிண்டல் செய்பவர்கள் செய்யட்டும். அவர்களைப் பற்றிக் கவலையில்லை.''

" `ரேஷன் கார்டு உள்ளவர்களுக்குக் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்படும்' என்று அறிவித்தீர்கள். ஆனால், வங்கிக்கு மக்கள் சென்றால் அதிகாரிகள் திருப்பி அனுப்புகிறார்களே?''

''கண்டிப்பாகக் கடன் வழங்கப்படும். அதற்கு அவர்கள் ஏதாவதொரு தொழில் செய்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், சிலர் எந்தத் தொழிலும் செய்யாமல் கடன் கேட்டுச் செல்கிறார்கள். இன்னும் பலர் தொடக்க வேளாண்மை வங்கிகளிலெல்லாம் இந்தக் கடனைக் கேட்டுச் செல்கிறார்கள். இது கூட்டுறவு வங்கியில் மட்டுமே கொடுக்கப்படும். அப்படிக் கொடுக்கவில்லை யென்றால், என்னிடம் புகார் செய்யலாம்.''

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

"நீங்கள், 'என் வீட்டை விற்றும் மக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்குவேன்' என்று கூறியிருக்கிறீர்களே..?"

"வரும்போது என்ன கொண்டு வந்தேன் நான்? இந்தப் பதவியும் அங்கீகாரமும் மக்கள் கொடுத்தது. அப்படிப்பட்ட மக்கள் கஷ்டப்படும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.

எம்.ஜி.ஆரையும், அதன் பிறகு ஜெயலலிதாவையும் பார்த்து வளர்ந்தவன் நான். `இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும்' என்ற எண்ணம் அவர்களைப் போல் எனக்கும் ரத்தத்தில் ஊறியிருக்கிறது."

- ஜூனியர் விகடன் இதழில் முழுமையான பேட்டியை வாசிக்க க்ளிக் செய்க... > ''சசிகலா தலைமையா? - அப்படியோர் எண்ணமே இல்லை!'' - செல்லூர் ராஜூ தடாலடி https://bit.ly/3hA7QgP

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு