Published:Updated:

``மன்னர் பரம்பரையைத்தான் ஒழித்துள்ளோம்; கலைஞர் பரம்பரை..." - வாரிசு அரசியல் குறித்து செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

`அமைச்சர் கே.என்.நேரு வாரிசு அரசியல் குறித்துப் பேசியிருக்கிறாரே...' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "மூத்த அமைச்சர் கே.என்.நேரு சொன்னது உண்மை" என்கிறார் செல்லூர் ராஜூ

``மன்னர் பரம்பரையைத்தான் ஒழித்துள்ளோம்; கலைஞர் பரம்பரை..." - வாரிசு அரசியல் குறித்து செல்லூர் ராஜூ

`அமைச்சர் கே.என்.நேரு வாரிசு அரசியல் குறித்துப் பேசியிருக்கிறாரே...' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "மூத்த அமைச்சர் கே.என்.நேரு சொன்னது உண்மை" என்கிறார் செல்லூர் ராஜூ

Published:Updated:
செல்லூர் ராஜூ

``தி.மு.க ஆட்சியில் கூட்டுறவுத்துறையைச் செம்மைப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் பொருள்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருக்கிறார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "ரேஷன் கடைகளில் பொருள்கள் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால், எங்கள் ஆட்சியில் தரமான பொருள்களை முறையாக விநியோகம் செய்தோம். மூத்த குடிமக்கள் கைரேகை பதிவாவதில் தாமதம் ஏற்படுவதால் பொருள்களைப் பிறகு தருவதாகக் கூறி திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.

தி.மு.க அரசு, சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை. தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் பொங்கல் விழாவுக்கு தி.மு.க-வினர் சொன்னதுபோல ஐயாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஆதார் கார்டை இணைத்தவர்களுக்கு மட்டும்தான் என்று சொல்லாமல் எல்லோருக்கும் பொங்கல் தொகுப்பை வழங்க வேண்டும். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதேபோல் கடத்தல் வண்டிகளை சீஸ் செய்ய வேண்டும். உணவுப்பொருள் கடத்தல் திடீர் என்று நடக்கவில்லை.

கே.என். நேரு
கே.என். நேரு

அதேபோல் போதைப்பொருள் சப்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு ஆணி வேராக இருப்பவர்களைக் கைதுசெய்ய வேண்டும்" என்றவரிடம், `அமைச்சர் கே.என்.நேரு வாரிசு அரசியல் குறித்துப் பேசியிருக்கிறாரே...' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "மூத்த அமைச்சர் கே.என்.நேரு சொன்னது உண்மை. மன்னர் பரம்பரையைத்தான் ஒழித்துள்ளோம். கலைஞர் பரம்பரையை ஒழிக்க முடியவில்லை. இனி கலைஞர் குடும்பத்திலிருந்து வாரிசு வரக் கூடாது என்றுதான் கட்சியினர் நினைப்பார்கள். வாரிசுகள் வந்தால் அவர்கள்தான் அமைச்சராவர்கள் என்பதால்தன் கே.என்.நேரு சொல்லியிருக்கிறார்.

இன்பநிதிக்குக் குழந்தை பிறந்தாலும் கொடிபிடிப்பார்கள். அதை அமைச்சர் மறைமுகமாக வெளிப்படுத்தியிருக்கிறா” என்றார்.

தொடர்ந்து, `நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் நிலை' குறித்துக் கேட்டதற்கு, "முனைப்பாக இருக்கிறோம், தொண்டர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். எங்களுக்குப் பொதுமக்கள் ஆதரவு கொடுக்கின்றனர். எங்கள் ஆட்சியை எண்ணிப் பார்க்கின்றனர்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

கடந்த இரண்டு ஆண்டுகளாக தி.மு.க ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. பெண்கள் பாதுகாப்பின்மை, போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இந்த ஆட்சியில் இருக்கின்றன. தி.மு.க அரசு செயலற்ற அரசாக இருப்பதால், நாங்கள் நிச்சயமாக வெற்றிபெறுவோம். எந்தக் கட்சி எங்களுடன் இருந்தாலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம்" என்றார்.