Published:Updated:

``திமுக ஆட்சியில் டி.எஸ்.பி-யை டீ வாங்கி வரச்சொல்லி அராஜகம் செய்வார்கள்" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

``மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாகத்திறன் இருக்கா எனத் தெரியவில்லை. ஆனால், அவர் ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, ஊழல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது, போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது" என்று கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

``திமுக ஆட்சியில் டி.எஸ்.பி-யை டீ வாங்கி வரச்சொல்லி அராஜகம் செய்வார்கள்" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

``மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாகத்திறன் இருக்கா எனத் தெரியவில்லை. ஆனால், அவர் ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, ஊழல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது, போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது" என்று கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

Published:Updated:
செல்லூர் ராஜூ

தன் தொகுதியில் நடந்த திட்டப்பணி தொடக்கவிழாவில் கலந்துகொண்ட செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, "ராசா என்ற நல்ல பெயருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியிருக்கிறார் ஆ.ராசா. இது போன்ற பிள்ளையை பெற்றதற்கு அவரின் தாய் வருத்தப்படுவார்.

இவ்வளவு பிரச்னைகள் நடந்தபோதும் தி.மு.க தலைவர் பாராமுகமாக இருக்கிறார். ஏற்கெனவே சட்டம்-ஒழுங்கு மோசமாக இருக்கும் சூழலில் அது மேலும் பாதிக்கும் வகையில் பேசிவருகின்றனர்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆ.ராசா ஏற்கெனவே முன்னாள் முதல்வர் எடப்பாடியாரின் பிறப்பு குறித்துத் தவறாகப் பேசினார். தற்போது இப்படிப் பேசியிருக்கிறார். எனவே ஆ.ராசாவுக்கு தி.மு.க தலைவர் வாய்ப்பூட்டுப் போட வேண்டும். அப்போதுதான் தி.மு.க-வுக்கு கொஞ்ச நஞ்சம் இருக்கும் மதிப்பும் இருக்கும்.

ஆ.ராசா
ஆ.ராசா

விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்ளிட்டவற்றை மறைப்பதற்காக ஆ.ராசா பேசவைக்கப்படுகிறாரா என்ற சந்தேகமும் உள்ளது. அ.தி.மு.க-வில் இப்படி யாராவது பேசியிருந்தால் கடுமையான நடவடிக்கையை எங்கள் கட்சித் தலைமை எடுத்திருக்கும்.

2ஜி அலைக்கற்றை ஊழலில் பெரும் பகுதியை ஆ.ராசா கொடுத்திருப்பார்போல, அதனால்தான் அவரைக் கண்டிக்க பயப்படுகின்றனர்.

தி.மு.க எப்போது ஆட்சிக்கு வந்தாலும் வன்முறையைக் கையில் எடுக்கும். மதுரையில்கூட ஒரு தாசில்தாரை தி.மு.க நிர்வாகி அடித்தார். இது போன்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களை தி.மு.க-வினர் நடத்திவருகிறார்கள்.

எங்கள் ஆட்சியில் நாங்கள் சொல்வதை போலீஸ் ஏட்டுகூட கேட்க மாட்டார். ஆனால், தி.மு.க ஆட்சியில் டி.எஸ்.பி-யை டீ வாங்கி வரச்சொல்லி அராஜகம் செய்வார்கள். ஸ்டாலின் வந்தாலும், உதயநிதி ஆட்சிக்கு வந்தாலும் இது போன்ற சம்பவங்கள் எப்போதும் மாறாது” என்றார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

`அமைச்சர் அன்பில் மகேஷ் ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தமாடி சாமி தரிசனம் செய்தது’ குறித்த கேள்விக்கு,

"இதை ஆ.ராசாவிடம்தான் கேட்க வேண்டும். அதேபோல் ஆக்டிங் முதல்வராகச் செயல்பட்டுவரும் சபரீசன் ஊர் ஊராகக் கோயிலுக்குச் செல்கிறார். துர்கா ஸ்டாலின் செல்கிறார். இதற்கெல்லாம் ஆ.ராசா என்ன சொல்வார்... ` எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என அறிஞர் அண்ணா சொன்னார். ஆனால், இதையெல்லாம் தாங்கும் இதயம் ஸ்டாலினிடம் இருக்கிறதுபோல" என்றவர்,

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

"ஸ்டாலினுக்கு நிர்வாகத்திறன் இருக்கா எனத் தெரியவில்லை. ஆனால், அவர் ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, ஊழல், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது, போதை வஸ்துக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்த ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடு இருப்பதற்கு பள்ளிக் குழந்தைகளே சாட்சியாக இருக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கும் சீருடைகூட சரியில்லை.

தென்காசி பாஞ்சாகுளத்தில் நடந்தது, அருவருக்கத்தக்க சம்பவம். தமிழகம் மற்ற மாநிலங்களைப்போல் இல்லை. அண்ணன், தம்பிபோலப் பழகிவரும் நம்மிடம் இப்படியான சம்பவம் நடைபெறுகிறது. கே.பாலகிருஷ்ணன் திருமாவளன், முத்தரசன் உள்ளிட்டோர் அமைதியாக இருப்பது ஏன்... தேர்தல் சீட்டுக்காக தி.மு.க-விடம் அமைதியாக இருக்கின்றனர்"என்றார்.