Published:Updated:

`அடிக்கடி பேட்டி கொடுத்தார்கள்; இப்போ பேச்சு மூச்சு இல்லை!'- அமைச்சர் செல்லூர் ராஜு

`அ.தி.மு.க அரசுக்கு எதிராக ஸ்டாலின் என்னென்னமோ திட்டம் போட்டுப் பார்த்தார். எதுவும் பலிக்கவில்லை’ - அமைச்சர் செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

``உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என அடிக்கடி பேசிய தி.மு.க-வினர் இப்போது பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார்கள்...'' என அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டலடித்துப் பேசினார்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

மதுரை மாநகரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க-வினரிடம் மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ``மதுரையில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க அரசுக்கு எதிராக ஸ்டாலின் என்னென்னமோ திட்டம் போட்டுப் பார்த்தார். எதுவும் பலிக்கவில்லை. அதனால் கோபத்தின் உச்சத்துக்குச் சென்றுவிட்டார். உள்ளாட்சித் துறையில் நிர்வாக ரீதியாகதான் செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேறு எந்தக் காரணமும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, அ.தி.மு.க வெற்றிடத்தை நிரப்பிவிட்டது.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

ரஜினி பற்றி மு.க.அழகிரி சொல்லியிருப்பது அவரது சொந்தக் கருத்தாக இருக்கலாம். தி.மு.க ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை. நல்லாட்சி செய்துவரும் அ.தி.மு.கவை மக்கள் விரும்புகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று அடிக்கடி பேட்டி கொடுத்தார்கள்.

ஆனால், தற்போது பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார்கள். தென்பெண்ணை ஆற்றின் தீர்ப்பு விவரம் முழுவதுமாக வெளிவந்த பின்பு முதல்வர் அது குறித்துப் பேசுவார். அ.தி.மு.க ஆட்சியில்தான் நதிநீர்ப் பிரச்னைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.