Published:Updated:

``சசிகலா இணைப்பு குறித்த ஓ.பி.எஸ் கருத்தில் என்ன தவறு இருக்கிறது?!" - செல்லூர் ராஜூ

``சசிகலா குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கருத்து சொன்ன பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் எந்தக் கருத்தும் சொல்லவில்லை. அனைவரும் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் ஒருங்கிணைப்பாளர் சொன்னார்” என்கிறார் செல்லூர் ராஜூ.

``சசிகலா விவகாரத்தில் அதிமுக-வில் சர்ச்சை ஏதுமில்லை" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருப்பது, அதிமுக தொண்டர்களை மேலும் குழப்பமடையவைத்திருக்கிறது.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவிக்க அனுமதி கோரி கலெக்டரிடம் மனு அளித்து விட்டுவந்த செல்லூர் ராஜூ, செய்தியாளர்களைச் சந்தித்தார்.

``சசிகலா விஷயத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் இடையே முரண்பாடு இருக்கிறதே?" என்று செய்தியாளர்களின் கேள்விக்கு

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ
க.சதீஸ்குமார்

``சசிகலா விவகாரத்தில் அதிமுக-வுக்குள் எந்தச் சர்ச்சையும் கிடையாது. ஊடகத்தினர், ஆளுங்கட்சியினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா என்பதைப் பற்றி விசாரிக்காமல் அதிமுக-வுக்குள் நடப்பது பற்றியே விசாரிக்கிறீர்கள். பழுத்த மரத்தில்தான் கல்லடிபடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எடப்பாடியை நீக்கச் சொன்னேன்... என்னை நீக்கிவிட்டனர்!’’ - பரிதவிப்பில் பஷீர்

சசிகலா குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கருத்து சொன்ன பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் எந்தக் கருத்தும் சொல்லவில்லை. அனைவரும் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் ஒருங்கிணைப்பாளர் சொன்னார். அதில் என்ன தவறு இருக்கிறது?

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்வோம் என்றுதான் ஓ.பி.எஸ் சொன்னார். அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட காரணத்தால், பிற நிர்வாகிகளும் அதற்கு எதிர்க்கருத்து தெரிவித்துள்ளனர். அந்தக் கருத்துகளை இப்போது சர்ச்சையாக மாற்ற விரும்பவில்லை" என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.

ஓ.பி.எஸ் பேசிய கருத்தே அதிமுக-வுக்குள் புயல் அடித்துக்கொண்டிருக்கும்போது, அதைச் சரி என்பதுபோல் பேசியிருக்கும் செல்லூர் ராஜூவின் கருத்து கட்சியினரை மேலும் குழப்பமடையவைத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு