``பிரதமர் மோடியின் பேச்சுகள், எழுத்துகள், உரைகளை பார்க்கும் போது, இதுவரை எந்தவொரு பிரதமரும் பேசாததை அவர் பேசி வருகிறார்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை கே.கே நகரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், ``இன்றைக்கு நாங்கள் கடவுளாக வணங்கும் எம்.ஜி.ஆருக்கு பாரதப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது

அவரை போற்றி வணங்குகிறேன். என்றைக்கும் அவர் இந்திய நாட்டின் பிரதமராக இருக்க வாழ்த்துகிறேன். பாரதப் பிரதமர் தமிழராக மாறி வருகிறார். அவருடைய பேச்சுகள், எழுத்துகள், உரைகளை பார்க்கும்போது எந்தவொரு தலைவரும் பிரதமரும் பேசாததை அவர் பேசிவருகிறார்" என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொடர்ந்து தி.மு.க அரசின் செயல்பாடு குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ``கொரோனாவை கட்டுப்படுத்த கட்டமைப்பை உருவாக்கியது அ.தி.மு.க அரசுதான். கடந்த 8 மாதங்களாக தி.மு.க அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. இது விடியல் அரசு அல்ல, விளம்பர அரசு" என்றார்.

தொடர்ந்து அவரிடம், "பொங்கல் பரிசு தொகுப்பில் ஏற்பட்ட குழப்பம்?" குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ``கடந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கிய அ.தி.மு.க-வை ஐயாயிரம் ரூபாய் வழங்க தி.மு.க-வினர் சொன்னார்கள். இந்தாண்டு தி.மு.க அரசு தரும் தரமற்ற பொங்கல் பரிசை மக்கள் குப்பையில் வீசி செல்கின்றனர். பத்தாயிரம் ரூபாய் தருவார்கள் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது." என்றவர், ``ஜல்லிக்கட்டை பொறுத்தவரையில் அதனை மீட்டெடுத்தது அ.தி.மு.க அரசு. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் செயல்பட்டது. இன்று ஜல்லிக்கட்டை பார்க்க பாதுகாப்பான வசதியோடு பொதுமக்களை பார்வையிட அனுமதியளித்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை" என்றார்.