Published:Updated:

``உதயநிதியை அமைச்சராக்க நினைப்பது ஃபாஸ்ட் ஃபுட் அரசியல்!’’ - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை மாநகர் அதிமுக ஆர்ப்பாட்டம்
News
மதுரை மாநகர் அதிமுக ஆர்ப்பாட்டம்

``மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள். எங்களை அடிக்கடி போராடத் தூண்டாதீர்கள். அதிமுக மக்களுக்கான கட்சி. மக்கள் பிரச்னைகளுக்காக எப்போதும் போராடும்” என்கிறார் செல்லூர் ராஜூ.

``மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள். எங்களை அடிக்கடி போராடத் தூண்டாதீர்கள்" என்று மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக-வைக் கிண்டலடித்துப் பேசி கட்சியினரைக் கலகலப்பாக்கினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

அதிமுக ஆர்ப்பாட்டம்
அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் செல்லூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜூ பேசும்போது, ``அதிமுக-வை வென்றவரும் இல்லை. கடவுளைக் கண்டவரும் இல்லை. தமிழக மக்களுக்கு 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியைத் தந்த அதிமுக, கடந்த தேர்தலில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது. உங்களுக்குத்தான் வாக்களித்தோம் என்று மக்கள் எல்லோரும் கூறுகிறார்கள்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. காவல்துறைக்கும் பாதுகாப்பில்லை. ரெளடிகள் ராஜ்ஜியம் தலைதூக்கிவிட்டது. பெண்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை, கியாஸ் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து எனக் கொடுத்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சிமீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரையில் அனைத்துச் சாலைகளும் குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கின்றன. மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவரும் அரசிடம் நிதியைப் பெற்று உடனே சாலைகளை அமைக்க வேண்டும்.

உதயநிதியை அமைச்சராக்க மக்கள் விரும்புகிறார்கள் என்று திமுக அமைச்சர்கள் அவர்களே கூறிவருகிறார்கள். கலைஞர், மு.க.ஸ்டாலினை நிதானமாக, பக்குவமாக அரசியலில் வளர்த்தார். ஆனால், உதயநிதியை அமைச்சராக்க விரும்புவது ஃபாஸ்ட் ஃபுட் அரசியலாகும்.

மதுரை மாநகர் அதிமுக ஆர்ப்பாட்டம்
மதுரை மாநகர் அதிமுக ஆர்ப்பாட்டம்

கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் திருநாளை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட 1,000 ரூபாயில் தொடங்கி 2,500 வரை கொடுத்தோம். ஆனால், பொங்கல் பரிசு பற்றி திமுக அரசு ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது.

வருகின்ற பொங்கலுக்கு மக்களுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று மதுரை மக்களின் சார்பாக வலியுறுத்துகிறேன். மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள். எங்களை அடிக்கடி போராடத் தூண்டாதீர்கள். அதிமுக மக்களுக்கான கட்சி. மக்கள் பிரச்னைகளுக்காக எப்போதும் போராடும்" என்று திமுக அரசைக் கிண்டலாகப் பேசி, வந்திருந்த தொண்டர்களைக் கலகலக்க வைத்தார்.