Published:Updated:

``மேயர் பதவியைப் பிடித்தால்தான் நாம் கொண்டுவந்த திட்டங்களைத் தொடங்க முடியும்!’’ - செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

``முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் குடிநீர் திட்டம் நிறைவேறும்போது நாம்தான் மாநகராட்சியின் ஆட்சியில் இருக்க வேண்டும். ஏனென்றால் மாநகராட்சி தலைமையில்தான் அந்த விழா நடைபெறும்.’’

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மதுரை மாநகர அதிமுக சார்பில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

``சட்டமன்றத் தேர்தலில் மற்ற தொகுதிகளில் வெற்றியை இழந்ததுகூட கவலையளிக்கவில்லை. ஆனால், தெற்குத் தொகுதியில் தோல்வியடைந்தது கவலையளிக்கிறது.

மக்களுக்கு உண்மையாக உழைத்தோம். கொரோனா காலத்தில் வீட்டில் இல்லாமல் களத்தில் பணியாற்றினோம். அதனால்தான் தேர்தலில் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படாமல் வேலை செய்தோம்.

மக்கள் வெற்றியைத் தந்தார்கள். இதை எனது வெற்றியாகப் பார்க்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலைக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அதிமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கிவிடவில்லை. 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில்தான் பின்தங்கியது. அதில் நமது கூட்டணிக் கட்சிகள் நின்ற இடத்தில் எட்டு லட்சம் வாக்குகள் பின்தங்கியிருக்கிறோம். திமுக ஆட்சியில் ஐந்து முறை மதுரை மாநகராட்சிப் பொறுப்பில் இருந்துள்ளனர். ஆனால், மதுரைக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிக் கொடுக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் மதுரைக்கு பத்தாயிரம் கோடிகளை அள்ளிக்கொடுத்தவர் ஜெயலலிதா. நாம் தொடங்கிவைத்த முல்லைப்பெரியாறு அணை லோயர் கேம்ப் குடிநீர் திட்டம் மூலம் மதுரையிலுள்ள அனைவருக்கும் குடிநீர் கிடைக்கவிருக்கிறது. மதுரையில் 35 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள்தொகை பெருகினாலும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கவிருக்கிறது.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் குடிநீர் திட்டம் நிறைவேறும்போது நாம்தான் மாநகராட்சியின் ஆட்சியில் இருக்க வேண்டும். ஏனென்றால், மாநகராட்சித் தலைமையில்தான் அந்த விழா நடைபெறும்.

வளர்ந்த நகரங்களுக்கு இணையாக மதுரையில் மேம்பாலங்களையும், பறக்கும் பாலங்களையும் கட்ட நடவடிக்கை எடுத்தோம். வைகை ஆற்றின் இருபுறமும் கரைகளை எழுப்பி கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுத்தோம். அதன் விளைவால் இன்னும் ஒரு வருடத்தில் வைகைக் கரையோரத்தில் பூங்காங்கள், ஜிம்கள் வரப்போகின்றன.

`அன்வர் ராஜா கூறியது தவறான கருத்து!’ - சொல்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

ஆகவே, மதுரை மாநகராட்சி மேயர் பதவியை நாம் பிடித்தால்தான் அனைத்தையும் தொடங்கிவைக்க முடியும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன், சிறப்பாகச் செயல்பட வேண்டும்" என்றார்.

மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்குத் தன் குடும்பத்திலிருந்தே ஆளை இறக்க திட்டமிட்டிருப்பதால் கட்சியினருக்கு இப்போதே மோட்டிவேஷன் கிளாஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டார் செல்லூரார் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

அடுத்த கட்டுரைக்கு