Published:Updated:

``அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சர் ஆகிவிட்டார்" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

``மதுவை ஒழிக்க வழியில்லாமல் தற்போது தமிழகம் போதை மாநிலமாக மாறியிருக்கிறது. மடிக்கணினி, இரு சக்கர வாகனம், தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தியது தி.மு.க ஆட்சி.’’

``அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சர் ஆகிவிட்டார்" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

``மதுவை ஒழிக்க வழியில்லாமல் தற்போது தமிழகம் போதை மாநிலமாக மாறியிருக்கிறது. மடிக்கணினி, இரு சக்கர வாகனம், தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தியது தி.மு.க ஆட்சி.’’

Published:Updated:
செல்லூர் ராஜூ

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவுதினம் அடுத்த மாதம் வருகிறது. அதை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்டம் அ.தி.மு.க சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்துவது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ``அ.தி.மு.க முடங்கிவிட்டது, உடைந்துவிட்டது எனப் பலர் கூறிவருகிறார்கள். அ.தி.மு.க-வைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. அண்ணன், தம்பியாகப் பழகிவருகிறோம்.

நாங்கள் பனங்காட்டு நரிகள். எதற்கும் அஞ்ச மாட்டோம். எங்களை நம்பி வந்தால் கரை சேர்ப்போம். அ.தி.மு.க-வை நம்பியவர்கள் கெட்டுப்போனது இல்லை.

எந்தத் தலைவரையும் நம்பி அ.தி.மு.க இல்லை. புரட்சித்தலைவர் காலத்தில் இருந்த தலைவர்களின் வழிகாட்டுதலில் இயக்கம் இருக்கிறது.

எங்களைவிட்டுப் பிரிந்து போனவர்கள் பற்றிக் கவலை இல்லை. இரட்டை இலையும், அ.தி.மு.க கொடியும் எங்கு இருக்கிறதோ அங்கேதான் உண்மையான அ.தி.மு.க தொண்டன் இருப்பான்.

நடிகை குஷ்புவுக்குக் கோயில் கட்டிய தமிழ்நாட்டில் தி.மு.க-வைச் சேர்ந்த சைதை சாதிக் தரம் தாழ்ந்து பேசுகிறார். யாரும் அவரைக் கண்டிக்கவில்லை.

குஷ்பூ
குஷ்பூ

தி.மு.க-வினர் பெண்களைத் தரம் தாழ்த்திப் பேசிவருகிறார்கள். பெண்களுக்குச் சமத்துவமாக இடம் கொடுத்த ஒரு கட்சி என்றால் அது அ.தி.மு.க-தான். பெண்களுக்காகப் பல திட்டங்களை அ.தி.மு.க அரசு கொண்டுவந்தது.

முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கத்தான் தகுதியானவர். முதல்வராக இருக்கத் தகுதி இல்லை. அ.தி.மு.க-வின் பத்தாண்டுக்கால ஆட்சி சரியில்லை எனக் கூறும் அவர்களின் இந்த இரண்டு ஆண்டு ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா?

பொது விழாக்களில் அமைச்சர்களின் அவதூறுப் பேச்சுகளை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. அமைச்சர்களைக் கேள்வி கேட்க முதல்வருக்கு திறன் இருக்கிறதா?

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் மக்களுக்கு வரி விதித்து வாட்டி வதைத்துவருகிறது. விலைவாசியைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

அ.தி.மு.க ஆட்சியைப் பற்றிப் பேச முதல்வருக்குத் தகுதி இருக்கிறதா? தமிழக மக்களுக்குத் தடையற்ற மின்சாரம் கொடுத்தது அ.தி.மு.க. நிதியமைச்சருக்கு வெட்கம் இல்லையா... அ.தி.மு.க கொண்டுவந்த திட்டங்களைக் குறைகூறிவிட்டு அதே திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார்கள்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் இருப்பதாகச் சொன்னதை இன்றுவரை நிரூபிக்கவில்லை. தி.மு.க அரசு மதுரை மாநகராட்சிக்கு எந்தவொரு நிதியும் ஒதுக்கவில்லை.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க ஆட்சியில்தான் நாள் முழுவதும் டாஸ்மாக் செயல்படுகிறது. அ.தி.மு.க-வில் சீனியர், ஜூனியர் பாகுபாடு இல்லை. தி.மு.க அமைச்சர்களிடம் ஒற்றுமை இல்லை. ஆட்சிக்கு வந்ததும் மது ஒழிப்பு என்று சொன்ன கனிமொழி, இப்போது எங்கே சென்றார்... ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு வருந்தத்தக்கது. இப்படிப் பேசுவது தவறு.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை ஏன் இணைக்க வேண்டும் என்பது தொடர்பாக அறிக்கை இல்லை. அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சர் ஆகிவிட்டார்.

100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்துசெய்வதற்கு தி.மு.க அரசு வழிவகை செய்கிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

மதுவை ஒழிக்க வழியில்லாமல் தற்போது தமிழகம் போதை மாநிலமாக மாறியிருக்கிறது. மடிக்கணினி, இரு சக்கர வாகனம், தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது தி.மு.க ஆட்சி.

பாரபட்சம் இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களைக் கொடுத்தது அ.தி.மு.க ஆட்சி. மதுரை மக்களுக்கு தி.மு.க கொண்டுவந்த திட்டம் எதுவும் தெரியுமா... 100 கோடி ரூபாயில் கலைஞர் நூலகம். இங்கே குடிக்கவே கஞ்சி இல்லை, அவர் அப்பாவுக்கு 100 கோடி ரூபாயில் நூலகமாம். எழுதாத பேனாவுக்கு 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த ஆட்சிதான் தி.மு.க.

எதற்கெடுத்தாலும் கமிஷன்... மீண்டும் ரெளடி ராஜ்ஜியமாக மாறிவருகிறது மதுரை. தற்போது இருக்கும் நிதியமைச்சர் கமிஷன் கேட்கிறார். மாநகராட்சிக்குள் யாராவது வீடு கட்டினால் பைக்கில் போய் சிலர் மிரட்டுகிறார்கள்" என்று அவருக்கே உரிய பாணியில் பேசினார்.