Published:Updated:

``தம்பி உதயநிதி கொடுத்த வாக்குறுதியெல்லாம் என்னாச்சு?” - ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜூ அதிரடி

செல்லூர் ராஜூ

``நினைவுச்சின்னம் கட்ட பணம் இருக்கிறது. வாக்களித்த மக்களுக்குப் பணம் இல்லையா... ஸ்டாலின் அவர்களே இது நியாயமா?” - செல்லூர் ராஜூ

``தம்பி உதயநிதி கொடுத்த வாக்குறுதியெல்லாம் என்னாச்சு?” - ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜூ அதிரடி

``நினைவுச்சின்னம் கட்ட பணம் இருக்கிறது. வாக்களித்த மக்களுக்குப் பணம் இல்லையா... ஸ்டாலின் அவர்களே இது நியாயமா?” - செல்லூர் ராஜூ

Published:Updated:
செல்லூர் ராஜூ

மின்கட்டண உயர்வை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை மாநகர கழகம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ``அ.தி.மு.க என்ற இயக்கத்தைக் கட்டிக் காக்க தலைமையேற்று, தி.மு.க-வின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக எடப்பாடியார் போராட்டம் அறிவித்திருக்கிறார்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

இந்தப் போராட்டம் மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க., எடப்பாடி தலைமையில் ஒன்றிணைந்து செயல்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான் இந்தக் கூட்டம். பணத்துக்காக அழைத்துவரப்பட்ட கூட்டம் அல்ல. தானா சேர்ந்த கூட்டம். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஒன்றரை வருடத்தில் தி.மு.க ஒன்றுமே செய்யவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்டாலின் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பொய்தான் சொல்கின்றனர். வாய்ச்சவடால்தான் பேசுகின்றனர். தமிழ்நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மக்கள் கடனில் தத்தளிக்கும்போது 39 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து கலைஞர் நினைவிடம் கட்டுகிறார்கள்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

கலைஞர் பயன்படுத்திய உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதிய பேனாவை கடலில் அமைக்கப்போகிறார்களாம். சிமென்ட் விலை, அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு , வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கும்போது 81 கோடி ரூபாயில் பேனாவுக்கு சிலையா?

நினைவுச்சின்னம் கட்ட பணம் இருக்கிறது. வாக்களித்த மக்களுக்குப் பணம் இல்லையா... ஸ்டாலின் அவர்களே, இது நியாயமா?

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கேலிக்கூத்தாக இருக்கிறது. இந்தியாவில் சட்டம்-ஒழுங்கில் மோசமான மாநிலம் என்று சர்வே சொல்வது வேதனையாக இருக்கிறது. நீட் தேர்வு விலக்குல், ஏழு பேர் விடுதலை உள்ளிட்டவை என்ன ஆச்சு?

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

நீட் தேர்வை தி.மு.க அரசு ரத்துசெய்துவிடும் என மாணவர்கள் நம்பினார்கள். தம்பி உதயநிதி கொடுத்த வாக்குறுதியெல்லாம் என்னாச்சு... அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது, பொங்கலுக்கு ஐயாயிரம் கொடுக்கச் சொன்னீங்க. ஆனால் தி.மு.க ஆட்சியில் பொங்கலுக்கு அஞ்சு பைசாகூட கொடுக்கவில்லை.

லெஜண்ட் சரவணன் மாதிரி செஸ் போட்டி விளம்பரத்தில் மு.க.ஸ்டாலின் வருகிறார். ஆனால், செஸ் சாம்பியன்களை அதில் காணோம். பிரதமர் மகாபலிபுரம் வந்தபோது பாரம்பர்ய உடையில் வரவேற்றார். ஆனால் அவரின் படங்கள் செஸ் போட்டி விளம்பரத்தில் பயன்படுத்தப்படவில்லை.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

மதுரையில் 40 ஆண்டுகளாக நிறையாத தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பி அதில் படகு சவாரி விட்டது எங்களது எடப்பாடி ஆட்சி. மதுரைக்கு தி.மு.க அரசு என்ன செய்தது?

ஒரு அனிதா செத்ததுக்கு பயங்கரமாகப் போராடினாங்க. இப்ப கள்ளக்குறிச்சி பிரச்னையில் ஆளுங்கட்சியும், அதன் தோழமைக் கட்சிகளும் எங்கே போனார்கள்... திருமாவளவன், வைகோவெல்லாம் எங்கே போனார்கள்?

முல்லைப்பெரியாறு அணையைக் காப்பாற்ற வக்கு இல்லையா என முதல்வரிடம் கேட்கிறேன்" என்று அதிரடியாகப் பேசினார்.