Election bannerElection banner
Published:Updated:

மதுரை: `ஃபாஸ்ட் ஃபுட்போல முதல்வர் ஆக நினைக்கிறார்கள்!’ - செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

``மதுரைன்னாலே ஒரு திமிர் இருக்கும். மதுரைக்காரன்னாலே ஒரு மாதிரியாத்தான் பார்ப்பான். காரணம், மதுரைக்காரன் நட்புக்கு உயிரையும் கொடுப்பான்... அதே நேரம் துரோகம் செஞ்சா...’’ - செல்லூர் ராஜூ

``நீண்டநாள் பசியோடிருக்கும் யானையை கரும்புக் காட்டுக்குள் விட்டால் என்ன நடக்குமோ அதே நிலைதான் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நடக்கும்’’ என்று செல்லூர் ராஜூ தி.மு.க-வை விமர்சித்து கடுமையாகப் பேசியவர், மதுரையைப் பற்றிப் பெருமையாக நினைத்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை பேச்சியம்மன் படித்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசினார், ``எம்.ஜி.ஆர் தனது பிறந்தநாளைக் கொண்டாட விரும்ப மாட்டார். வரலாற்றில் இடம்பெற்றவர்கள் பலர் உண்டு. ஆனால், வரலாற்றைப் படைத்தவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் புகழைப் பாடாமல் எந்தக் கட்சியில் உள்ளவர்களும் இருக்க முடியாது, தமிழக மாணவர்கள் பசியால் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்.

தமிழகத்தில் அவர் கொண்டுவந்த திட்டங்களைத்தான் பிற மாநிலங்கள் பின்பற்றிவருகின்றன.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அவர் திரைப்படத்தில் நடித்தபோதுகூட பணத்துக்காக கொள்கையில் சமரசம் செய்துகொண்டதில்லை. மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லும் வகையில்தான் படங்களைத் தேர்வு செய்தார்.

`மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்...’ எனப் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்காக அப்போதே எம்.ஜி.ஆர் தனது படத்தின் மூலம் வழிகாட்டினார். `ஓடி ஓடி உழைக்கணும்... ஊருக்கெல்லாம் கொடுக்கணும்...’ என்று பாடுவார்.

இப்போதுள்ள நடிகர்கள் ஃபாஸ்ட் ஃபுட்போல முதல்வர் ஆக நினைக்கிறார்கள். யாருக்கும் பயப்படாமல், உதயசூரியன் சின்னத்தைத் தன்னுடைய படங்களில் காண்பித்தவர் எம்.ஜி.ஆர்.

ஆனால், இப்போது நான்கு படங்கள் ஓடிவிட்டால், தான் முதல்வர் என நினைக்கிறார்கள். மக்கள் முடிவு செய்தால் மட்டுமே முதல்வர் ஆக முடியும். எம்.ஜி.ஆர் ஏழரைக் கோடி தமிழர்களையும் தனது வாரிசாக விட்டுச் சென்றிருக்கிறார்,

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அதனால்தான் 33 ஆண்டுகள் கழிந்தும் எம்.ஜி.ஆரின் புகழ் ஓங்கி ஒலிக்கிறது. தி.மு.க., அண்ணா தொடங்கிய கட்சி என்பதால் கட்சியைச் சிதைக்காமல், அண்ணாவின் கொள்கையை மட்டும் எடுத்துக்கொண்டு கட்சி தொடங்கியவர் எம்.ஜி.ஆர்.

தமிழகத்தில் யார் யாரோ கட்சி தொடங்கி முதல்வர் ஆக நினைக்கிறார்கள். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியதால்தான் சாமானியர்கள்கூட எம்.ஏல்.ஏ-க்கள் ஆனார்கள்.

கிராமங்களில் நியாய விலைக்கடைகளைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். 1978-ம் ஆண்டில் 4,444 நியாய விலைக்கடைகள் இருந்த நிலையில், தற்போது 32,993 நியாய விலைக்கடைகள் இருக்கின்றன்றன.

தமிழகத்தில் தற்போது 90 சதவிகிதம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது, இன்னும் மூன்று லட்சம் மக்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும், `தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டத்தில் 6,000 கிலோ வழங்கப்பட்டிருக்கிறது.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அ.தி.மு.க ஆட்சியை ஏன் நிராகரிக்க வேண்டும் என தி.மு.க-வினர்தான் சொல்ல வேண்டும். பசியோடிருக்கும் யானையை கரும்புக் காட்டுக்குள்விட்டால் என்ன ஆகுமோ... அது போலத்தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நடக்கும்.

ஜெயலலிதா ஆட்சியில் தி.மு.க-விலிருந்த ரௌடிகள் அடக்கிவைக்கப்பட்டார்கள். ஆட்சிக்கு வந்துவிட்டால், பாம்புபோல் படமெடுத்து ஆடத் தொடங்கிவிடுவார்கள்.

மதுரை எப்போதும் அ.தி.மு.க-வின் கோட்டை என்பதை நிரூபிப்போம். ஏன்னா மதுரைன்னாலே ஒரு திமிர் இருக்கும். மதுரைக்காரன்னாலே ஒரு மாதிரியாத்தான் பார்ப்பான். காரணம் மதுரைக்காரன் நட்புக்கு உயிரையும் கொடுப்பான்... அதே நேரம் துரோகம் செஞ்சா ... டேஷ்... டேஷ்... ('மீடியாக்காரங்க எதையாவது போட்டுருவாங்க...' என்றார்)

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

``2ஜி -யில் தி.மு.க தவறு செய்யவில்லை என்றால் கைது நடவடிக்கை எடுத்த காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைத்திருக்கிறது? விரைவில் 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்குச் செல்வார்கள். மக்களை ஏமாற்ற நினைப்பவர்கள் மக்களிடம் எமாந்துபோவார்கள், மக்கள்தான் இறுதி எஜமானர்கள்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு