Published:Updated:

`அ.தி.மு.க அமைச்சருக்கு உளவு பார்த்த தி.மு.க. புள்ளி!'- கொதிக்கும் செந்தில் பாலாஜி

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணுவதுபோல், தனக்கு அடையாளம் கொடுத்த தி.மு.க கட்சியின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட ரகசிய வியூகங்களை, `கோழி’ செந்தில் அப்படியே வீடியோவாக்கி, அ.தி.மு.க அமைச்சரிடம் கொடுத்து, உளவுவேலை பார்த்திருக்கிறார். காலம் கடந்துதான், அவரின் அந்த மோசடித்தனம் தெரியவந்தது.

ஸ்டாலினோடு செந்தில் பாலாஜி
ஸ்டாலினோடு செந்தில் பாலாஜி ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்டத் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த `கோழி’ செந்தில் என்பவர் மீது, கட்சிக் கட்டுப்பாட்டுக்கு விரோதமாகச் செயல்பட்டதாக, அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நடவடிக்கை எடுத்துள்ளார். கோழி செந்திலை பதவியிலிருந்து நீக்கியது கரூர் மாவட்ட தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்னியூர் ராஜேந்திரனோடு கோழி செந்தில்
நன்னியூர் ராஜேந்திரனோடு கோழி செந்தில்
நா.ராஜமுருகன்

'அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலின்போது தி.மு.க வகுத்த வியூகங்களை விடியோ பதிவுகளாக்கி, அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குக் கொடுத்து, உளவுவேலை பார்த்தார்' என்று தி.மு.க கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியதின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "செந்தில் பாலாஜி, தனக்கு எதிராக இருப்பவர்களை இப்படிப் பழிவாங்க ஆரம்பித்துள்ளார்" என்று கரூர் மாவட்ட தி.மு.க-வினர் கண்ணைக் கசக்குகிறார்கள்.

அ.ம.மு.க கட்சியின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக இருந்த செந்தில் பாலாஜி, சில மாதங்களுக்கு முன்புதான் தி.மு.க-வுக்குத் தாவினார். அவர் கட்சி தாவிய 41 நாள்களில் அவருக்கு கரூர் மாவட்டப் பொறுப்பாளராகப் பதவி வழங்கப்பட்டது. ஏற்கெனவே, நன்னியூர் ராஜேந்திரன் வசம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்துதான், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்
`இது டிரைலர்தான்.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்!'- எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊரில் 200 பேரை வளைத்த செந்தில்பாலாஜி

நன்னியூர் ராஜேந்திரன் மாவட்டச் செயலாளராக இருந்தபோது, அவருக்கு வலதுகரமாகவும் உதவியாளராகவும் இருந்தவர்தான், இந்தக் `கோழி’ செந்தில். அவருக்கு நன்னியூர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை வாங்கித் தந்தார். அந்தப் பதவிதான் தற்போது பறிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கரூர் மாவட்ட தி.மு.வி-னர் சிலரிடம் பேசினோம்.

"நன்னியூர் ராஜேந்திரனின் செயல்பாடுகள் சரியில்லை என்றுதான், செந்தில் பாலாஜி தி.மு.க-வுக்கு வந்ததும், ராஜேந்திரன் வகித்த மாவட்டச் செயலாளர் பதவி, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் சமயத்தில், 'நன்னியூர் ராஜேந்திரன் எனக்கு எதிராகச் செயல்படுகிறார். இவர் இப்படி இருந்தால், தேர்தலில் நான் ஜெயிப்பது கஷ்டம்' என்று ஸ்டாலின் வரை புகார் செய்தார் செந்தில்பாலாஜி. அதன் பிறகு, ஸ்டாலினே நன்னியூர் ராஜேந்திரனைக் கண்டித்தார். ஸ்டாலினின் அறிவுரைப்படி, செந்தில் பாலாஜிக்காக வேலைபார்த்தார் ராஜேந்திரன்.

இந்நிலையில், நன்னியூர் ராஜேந்திரனின் உதவியாளராக இருந்த `கோழி’ செந்தில், கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் தனக்கு எதிராகச் செயல்பட்டு, ஆளுங்கட்சி அமைச்சருக்கு உளவுபார்த்ததை செந்தில் பாலாஜி சமீபத்தில் கண்டுபிடித்தார். கடந்த 20 நாள்களுக்கு முன்பு கட்சியின் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அந்தக் கோபத்தை வெளிப்படுத்தினார்.

நடவடிக்கை அறிவுப்பு
நடவடிக்கை அறிவுப்பு

அந்தக் கூட்டத்தில், 'நாம் எதிரியைக்கூட களத்தில் நேருக்கு நேர் சந்தித்து சண்டை போடலாம். ஆனால், கூடவே இருந்து எதிரிக்கு உளவு சொல்லும் துரோகியை நாம் விட்டு வைக்கவே கூடாது. அவர்கள் இந்த வேலைக்குப் பதிலாக வேறு தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம். இடைத்தேர்தலில் நாம் நடத்திய அத்தனை ரகசியக் கூட்டத்தையும், நம்முடைய தேர்தல் வெற்றிக்கு வகுத்த திட்டங்கள் அத்தனையையும் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து அதை எதிரிகளுக்கு அப்படியே அனுப்பியிருக்கிறார் `கோழி’ செந்தில். இதைக் கண்டுபிடித்த நான், அவரைக் கட்சியை விட்டே நீக்கச் சொல்லி மேலிடத்துக்கு எழுதியிருக்கிறேன்' என்றார். அதன் வெளிப்பாடுதான் `கோழி’ செந்தில் நீக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டச் செயலாளராக இருந்த நன்னியூர் ராஜேந்திரனின் உதவியாளராக இருந்தார் கோழி செந்தில். அப்போது, கட்சியில் மாவட்டச் செயலாளர் தேர்தல் நடந்தபோது, கரூர் சின்னசாமி அதற்குப் போட்டியிட்டார். அப்போது, நன்னியூர் ராஜேந்திரன் என்ன என்ன திட்டம் வகுக்கிறார் என்பதை ரகசியமாக உளவு பார்த்து, கரூர் சின்னசாமிக்குத் தகவல் சொல்லியவர்தான் கோழி’ செந்தில்" என்றார்கள்.

இந்நிலையில், நன்னியூர் ராஜேந்திரன் ஆதரவாளர்களோ,

" ‘கோழி’ செந்தில் அ.தி.மு.க அமைச்சருக்காக உட்கட்சி ரகசிய கூட்டங்களில் உனவுபார்த்தாரா என்று தெரியவில்லை. ஆனால், செந்தில் பாலாஜி நன்னியூர் ராஜேந்திரனின் பதவியைப் பறித்து தனதாக்கிக் கொண்டதோடு, அவரைக் கட்சியைவிட்டே ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறார். கடந்த அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலின்போதே, 'நன்னியூர் ராஜேந்திரன் எனக்கு எதிராகச் செயல்படுகிறார்' என்று ஸ்டாலினிடம் வத்தி வைத்தார் செந்தில் பாலாஜி. ஆனால், தன் நண்பரான நன்னியூர் ராஜேந்திரன் மீது, ஸ்டாலின் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

நன்னியூர் ராஜேந்திரன்
நன்னியூர் ராஜேந்திரன்
நா.ராஜமுருகன்
பி.கே டீம்... திண்ணை பிரசாரம்... ஸ்டாலின் `மெயின்’ டார்கெட்! - எடப்பாடியின் உள்ளாட்சி வியூகம்

இந்நிலையில்தான், நன்னியூர் ராஜேந்திரனின் உதவியாளராக இருந்த, அவரின் தீவிர ஆதரவாளரான ‘கோழி’ செந்தில் மீது கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பி, நடவடிக்கை எடுக்க வைத்திருக்கிறார். இதன்மூலம், நன்னியூர் ராஜேந்திரனுக்கு செந்தில் பாலாஜி செக் வைத்திருக்கிறார்" என்றார்கள்.

இதுசம்பந்தமாக, செந்தில் பாலாஜியிடம் பேச முயன்றோம். நம் அழைப்பை அவர் ஏற்கவே இல்லை. இந்நிலையில், நம்மிடம் பேசிய அவரது ஆதரவாளர்கள் சிலர்,

"உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணுவதுபோல், தனக்கு அடையாளம் கொடுத்த தி.மு.க கட்சியின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட ரகசிய வியூகங்களை, `கோழி’ செந்தில் அப்படியே வீடியோவாக்கி, அ.தி.மு.க அமைச்சரிடம் கொடுத்து, உளவுவேலை பார்த்திருக்கிறார். காலம் கடந்துதான், அவரின் அந்த மோசடித்தனம் தெரியவந்தது. அதனால், கட்சித் தலைமைக்கும், அந்த அணியின் மாநிலப் பொறுப்பாளருக்கும் செந்தில் பாலாஜி புகார் அனுப்பினார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

மேலிடம் தீர விசாரித்து, ''கோழி’ செந்தில் ஆளுங்கட்சிக்கு உளவுவேலை பார்த்தது உண்மைதான்' என்பதை கண்டறிந்த பின்பே, அவர்மீது நடவடிக்கை எடுத்திருக்கு. மற்றபடி, 'நன்னியூர் ராஜேந்திரனை கட்சியைவிட்டே காலிபண்ணதான் இப்படிச் செயல்படுகிறார்'னு செந்தில் பாலாஜி மீது வைக்கும் அத்தனை குற்றச்சாடுகளும் பொய்க் குற்றச்சாட்டுகள்" என்றார்கள்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் பேசினோம்.

"அண்ணனோடு (எம்.ஆர்.விஜயபாஸ்கர்) நேரடியாக மோதிப்பார்த்து, செந்தில் பாலாஜியால் ஒண்ணும் பண்ணமுடியலை. கரூர் மாவட்டம் முழுக்க செந்தில் பாலாஜிமீது அதிருப்தியில் உள்ள தி.மு.க-வினர்களைக் கொத்துக்கொத்தாக அ.தி.மு.க-வில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர். எதனால் செந்தில் பாலாஜி மீது தி.மு.க-வினர் அதிருப்தியாகிறார்கள் என்பதை, ’கோழி’ செந்தில் மீதான நடவடிக்கையே உணர்த்துகிறது. ஆளும் அ.தி.மு.க-வுக்கு மக்கள் செல்வாக்கு ஏகபோகமாக உள்ளது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்
குடியுரிமை மசோதா... எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கொள்கைக்கு உலை... எடப்பாடி, பன்னீர் கொடுத்த விலை!

இதுல, அவங்க பண்ற வியூகங்களை உளவு பார்த்துதான், நாங்க கட்சி நடத்தணும்னு அவசியம் இல்லை. புலியைப் பார்த்து பூனை சூடுபோடுக்கொண்ட கதையாதான் செந்தில் பாலாஜி செயல்படுகிறார். அவருக்கும் கரூர் மாவட்ட தி.மு.க-வுக்கும் அழிவுகாலம் ஆரம்பம்" என்றார்கள்.

நடவடிகைக்கு ஆளான ‘கோழி’ செந்திலிடம் பேசினோம்.

"நான் 1994-லிருந்தே, தி.மு.க-வின் தீவிர தொண்டன். எதையும் எதிர்பார்க்காமல், கட்சியின் வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என்று செயல்பட்டவன். ஆனால், என்மீது மாவட்டப் பொறுப்பாளர் அபாண்டமான பொய்ப்புகாரைச் சுமத்தி, என்னைப் பதவியை விட்டுத் தூக்க வைத்திருக்கிறார். என்னிடம் அவர் ஒருவார்த்தை கேட்டிருக்கலாம். ஆனால், அவர் நோக்கம் அதுவல்ல. நன்னியூர் ராஜேந்திரன் பதவியை, 'செயல்பாடு சரியில்லை' என்று சொல்லி காலி பண்ணியதுபோல், என் பதவியையும் காலி பண்ணிட்டார்.

கோழி செந்தில்
கோழி செந்தில்
நா.ராஜமுருகன்

அவரோடு அ.ம.மு.க-வில் இருந்து வந்தவர்களை மட்டும் முன்னிலைப்படுத்துகிறார். கட்சிக்கு உண்மையாக உழைக்கும் என்போன்றவர்களை, பொய்ப்புகார் கிளப்பி காவு வாங்குகிறார். ஆனால், தலைமைக்கு ஒருகாலத்தில் நான் குற்றமற்றவன்கிற உண்மை தெரியவரும். அதுவரை ஒரு தொண்டனாகக் கரூர் மாவட்ட தி.மு.க-வில் என் பணியைத் தொடர்ந்துகிட்டுதான் இருப்பேன்" என்றார்.