Published:Updated:

``முடிவு எடுக்கும் முன்பே போராடுகிறார்கள்'' - மின் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி
News
செந்தில் பாலாஜி

``மின் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. முடிவுகள் எட்டப்படுவதற்குள் அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.'' - செந்தில் பாலாஜி

``முடிவு எடுக்கும் முன்பே போராடுகிறார்கள்'' - மின் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து செந்தில் பாலாஜி

``மின் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. முடிவுகள் எட்டப்படுவதற்குள் அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.'' - செந்தில் பாலாஜி

Published:Updated:
செந்தில் பாலாஜி
News
செந்தில் பாலாஜி

சென்னை அண்ணாசாலையில் இருக்கும் மின்வாரிய தலைமை செயலகத்தில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் செய்துவருகின்றனர். நிர்வாகப் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு என இரண்டு பிரிவாகப் பணி செய்துவரும் நிலையில், இரண்டையும் இணைக்க ஆணையை அரசு கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராடிவருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுவருகிறது. சென்னையில் 15 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடந்துவருகிறது. இதுவரை 1.3 கோடி மக்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்திருக்கிறார்கள். இன்னும் 31-ம் தேதி வரை இணைப்பு தொடரும். அதன் பிறகு முதல்வரின் ஆலோசனைக்கேற்ப அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும்.

ஆதார் எண்
ஆதார் எண்

மின் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. முடிவுகள் எட்டப்படுவதற்குள் அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஊழியர்களின் வேலைப்பளுவை குறைப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எல்லா முடிவையும் தொழிற்சங்கத்தைக் கேட்டுத்தான் எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படிச் சாத்தியமாகும் என்பது புரியவில்லை. மின்துறையில் ஒவ்வொரு பகுதியாக சீர்செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில்தான் மின்துறை ஊழியர்களுக்கான ஆணையும் வெளியிடப்பட்டது" எனத் தெரிவித்திருக்கிறார்.