Election bannerElection banner
Published:Updated:

கரூர்: `டெல்லி எஜமானர்கள் நினைத்தாலும் தி.மு.க வெற்றியைத் தடுக்க முடியாது!' - செந்தில் பாலாஜி

பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி
பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி ( நா.ராஜமுருகன் )

``கரூர் தொகுதியில் ஆளுங்கட்சி அமைச்சர், வீட்டுக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுக்க இருக்கிறதா சொல்றாங்க. 100 பவுன் கொடுத்தாலும், அ.தி.மு.க கரூரில் ஜெயிக்காது. தொகுதி மக்கள் ஆளுங்கட்சி வேட்பாளரை மண்ணைக் கவ்வ வைப்பார்கள்" என்கிறார் செந்தில் பாலாஜி.

``தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும், தி.மு.க தலைமையிலான மதசார்பற்றக் கூட்டணி, தளபதி தலைமையில் அமோகமாக வெற்றிபெறும். மொத்தமுள்ள 234 தொகுதிகளிலேயே, கரூர் தொகுதியில் தி.மு.க அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். கரூர் தொகுதியில் ஆளுங்கட்சி அமைச்சர், வீட்டுக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுக்க இருக்கிறதாக சொல்றாங்க. 100 பவுன் கொடுத்தாலும், அ.தி.மு.க கரூரில் ஜெயிக்காது" என்று செந்தில் பாலாஜி அதிரடியாகப் பேசியிருக்கிறார்.

தி.மு.க அலுவலக திறப்புவிழாவில் செந்தில் பாலாஜி
தி.மு.க அலுவலக திறப்புவிழாவில் செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்
கரூர்: `அடுத்தவர் உழைப்பில் வளர்ந்த ஜெராக்ஸ் முதல்வர்!’ -  செந்தில் பாலாஜி விமர்சனம்

கரூர் மண்மங்கலத்தில், கிழக்கு ஒன்றிய அலுவலகத்தை தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி திறந்துவைத்தார். தொடர்ந்து, கோவை சாலையிலுள்ள கொங்கு மெஸ் தங்கவேல் நகரில், தான்தோன்றிமலை மேற்கு ஒன்றிய அலுவலகத்தை அவர் திறந்துவைத்தார்.

தி.மு.க அலுவலக திறப்புவிழாவில் செந்தில் பாலாஜி
தி.மு.க அலுவலக திறப்புவிழாவில் செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, ``அ.தி.மு.கவினர் வன்முறைக்குத் தயாராகிட்டாங்க. எப்படி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அதிகாரிகளின் துணையோடு வன்முறையில் இறங்கினார்களோ, அதேபோல் இப்பவும் வன்முறையில் இறங்கத் தயாராகிட்டாங்க. அதற்கு, இப்போதைய மாவட்ட ஆட்சியர் துணைபோகிறார். நாடாளுமன்றத் தேர்தலின்போது இருந்த மாவட்ட ஆட்சித்தலைவரைவிட, 100 மடங்கு பொய் பேசக்கூடிய வல்லமை வாய்ந்த மாவட்ட ஆட்சியர் இப்போது கரூருக்கு வந்திருக்காங்க. அவங்கதான் மாவட்ட தேர்தல் அதிகாரி. ஏன்னா, பறக்கும்படைக்குப் புகார் போகுது. அவங்க போய் ஆளுங்கட்சியினர் வைத்திருந்த பரிசுப் பொருள்களை கைபற்றுறாங்க. ஆனா, அந்த பறக்கும்படை அதிகாரிக்கு இந்த மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்புகிறார்.

ஆளுங்கட்சிக்கு அவங்க சாதகமா நடந்துக்கணும்னு நினைக்கிறாங்க. அவங்களுக்கு கரூர்ல ஓட்டு இல்லை. அவங்க யாரையும் ஓட்டு போடுங்கனு சொல்ல முடியாது, அது வேற விஷயம். இவங்க நினைக்கிறாங்க, தான் நினைச்சா கரூர் மாவட்டத்துல நான்கு தொகுதிகளிலும் அ.தி.மு.க-வை ஜெயிக்கவெச்சுடலாம்னு. ஆனா, நீங்க நினைத்தால் மட்டுமல்ல, டெல்லி எஜமானர்கள் நினைத்தால் மட்டுமல்ல, வேறு யார் நினைத்தாலும் தி.மு.க வெற்றிபெறுவதைத் தடுக்க முடியாது.

தி.மு.க அலுவலக திறப்புவிழாவில் செந்தில் பாலாஜி
தி.மு.க அலுவலக திறப்புவிழாவில் செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

234 தொகுதிகளிலும், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிபெறும். மொத்தமுள்ள 234 தொகுதிகளிலேயே கரூர் தொகுதியில் தி.மு.க அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். கரூர் தொகுதியில் ஆளுங்கட்சி அமைச்சர், வீட்டுக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுக்க இருக்கிறதா சொல்றாங்க. 100 பவுன் கொடுத்தாலும், அ.தி.மு.க கரூரில் ஜெயிக்காது. தொகுதி மக்கள் ஆளுங்கட்சி வேட்பாளரை மண்ணைக் கவ்வவைப்பார்கள்" என்றார்!.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு