Published:Updated:

விடாது துரத்தும் ஊழல் ரெய்டு!

செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு
பிரீமியம் ஸ்டோரி
News
செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு

செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் அமைச்சர்!

‘போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டனர்’ என்று 2015-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், செந்தில் பாலாஜியின் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனை, கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக் கிறது.

தற்போது, கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.கழக எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார் செந்தில் பாலாஜி. 2011-2016 காலகட்டத்தில் அ.தி.மு.க-வில் இருந்த அவர், போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார். அப்போது ‘போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 81 பேரிடம் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டார்’ என்று, சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தனர்.

செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு - அலுவலகத்தில் ரெய்டு
செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு - அலுவலகத்தில் ரெய்டு

அதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி உட்பட 12 பேர்மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றார் செந்தில் பாலாஜி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அருண்குமார், ‘எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கியப்புள்ளிகளின் பெயர் இடம்பெற வில்லை. உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘உரிய விசாரணை நடத்தி ஆறு மாதங்களுக்குள் மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்’ என மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு கடந்த நவம்பர் 27-ம் தேதி உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜி - விஜயபாஸ்கர்
செந்தில் பாலாஜி - விஜயபாஸ்கர்

இதையடுத்து, ஜனவரி 31-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி சோதனையில் இறங்கினர். சென்னை மந்தைவெளியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு சீல் வைத்ததுடன், கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு, அலுவலகம் மற்றும் அவரின் தம்பி அசோக்குமாரின் வீடு உள்ளிட்ட இடங்களில் தொடர் சோதனை நடத்தி சில ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து, உள்விவரங்கள் அறிந்த கட்சியினர் சிலரிடம் பேசினோம். ‘‘கரூரில் செந்தில் பாலாஜி தன்னை விஞ்சி வளர்ந்துவிடக் கூடாது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு நினைக் கிறது. நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டாலும், அதன் வீரியத்தை அதிகப்படுத்தியது விஜயபாஸ்கர் தரப்புதான். மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மீண்டும் தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜியின் பெயர் இடம்பிடிக்கிறதா இல்லையா என்பதைவைத்து அதை முடிவுசெய்துவிடலாம்’’ என்கிறார்கள்.

விடாது ஊழல்!