Published:Updated:

``எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ஒப்புக்கொள்ளாதது ஏன்?" - சரத் பவார் விளக்கம்

சரத் பவார்

`சிறிய கட்சிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுக்கவும், எதிர்க்கட்சிகளை ஆட்சியிலிருந்து அகற்றவும் பா.ஜ.க மத்திய விசாரணை ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்துகிறது.' - சரத் பவார்

``எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ஒப்புக்கொள்ளாதது ஏன்?" - சரத் பவார் விளக்கம்

`சிறிய கட்சிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுக்கவும், எதிர்க்கட்சிகளை ஆட்சியிலிருந்து அகற்றவும் பா.ஜ.க மத்திய விசாரணை ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்துகிறது.' - சரத் பவார்

Published:Updated:
சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை 2024-ம் ஆண்டு பிரதம வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் சார்பாக திட்டமிடப்பட்டது. சரத் பவார் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து சரத் பவார் ஆலோசனை நடத்தினார். சரத் பவார் மறுத்திருப்பதால் யாரை பிரதம வேட்பாளராக நிறுத்துவது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் திணறிக்கொண்டிருக்கின்றன. இது குறித்து சரத் பவார் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில், ``இந்த வயதில் நான் எந்த வித பொறுப்புக்களையும் ஏற்க விரும்பவில்லை.

sharad pawar and prime minister modi
sharad pawar and prime minister modi

அதனால்தான் 2024-ம் ஆண்டுக்கான எதிர்க்கட்சிகளின் பிரதம வேட்பாளர் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டேன். பா.ஜ.க அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கவே விரும்பினேன். மத்தியில் பா.ஜ.க 2014-ம் ஆண்டிலிருந்து சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. இணையதளம் மூலம் கிராமங்களை இணைப்பது, கிராமங்களில் கழிவறை, தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகளை செய்துகொடுக்க தவறிவிட்டது.

சரத் பவார்
சரத் பவார்

சிறிய கட்சிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுக்கவும், எதிர்க்கட்சிகளை ஆட்சியிலிருந்து அகற்றவும் பா.ஜ.க மத்திய விசாரணை ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்துகிறது. பா.ஜ.க ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருவது மிகவும் கவலையளிக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எம்.எல்.ஏ-க்களிடம் பிளவை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறது. அதற்கு மகாராஷ்டிரா ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்" என்று தெரிவித்தார்.

சரத் பவாரின் வழிகாட்டுதலில்தான், தான் அரசியலுக்கு வந்ததாக பிரதமர் மோடி தெரிவித்திருப்பது குறித்து நிருபர் ஒருவர் கேட்டதற்கு, ``அது எனக்கு மரியாதை சேர்க்கும் செயல் என்று நான் கருதவில்லை" என்று தெரிவித்தார். சரத் பவாருக்கு தற்போது 81 வயதாகிறது. அதனால் எதிர்க்கட்சிகள் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக சரத் பவாரை நிறுத்த நடந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.