Published:Updated:

சின்னம் திரிசூலம்... பெயர்?! - உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்த கட்சி பெயர், சின்னங்கள் என்னென்ன?

உத்தவ் தாக்கரே

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்தல் கமிஷனில் தான் விரும்பும் மூன்று கட்சியின் பெயர்கள் மற்றும் சின்னத்தை தாக்கல் செய்துள்ளார்.

சின்னம் திரிசூலம்... பெயர்?! - உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்த கட்சி பெயர், சின்னங்கள் என்னென்ன?

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்தல் கமிஷனில் தான் விரும்பும் மூன்று கட்சியின் பெயர்கள் மற்றும் சின்னத்தை தாக்கல் செய்துள்ளார்.

Published:Updated:
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்திருப்பதால் அக்கட்சியின் சின்னம் மற்றும் பெயரை தேர்தல் கமிஷன் நேற்று முடக்கியது. அதோடு திங்கள் கிழமைக்குள் வேறு சின்னம் மற்றும் கட்சியின் பெயர் விருப்ப விபரங்களை தாக்கல் செய்யும்படி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது. தேர்தல் கமிஷனின் உத்தரவை தொடர்ந்து உத்தவ் தாக்கரே கட்சியின் பெயருக்கு 3 பெயர்களையும், புதிய தேர்தல் சின்னத்தையும் பரிந்துரை செய்து தேர்தல் கமிஷனில் கடிதம் கொடுத்திருக்கிறார். தேர்தல் கமிஷன் தனது இடைக்கால உத்தரவில் தாங்கள் புதிதாக தேர்வு செய்யும் கட்சியின் பெயரில் தாய் கட்சியான சிவசேனா பெயர் இடம் பெறலாம் என்று குறிப்பிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் 'சிவசேனா பாலாசாஹேப்' என்ற பெயரை தனது முதல் விருப்பகாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இரண்டாவது விருப்பமாக 'சிவசேனா உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே' என்ற பெயரை குறிப்பிட்டுள்ளார்.

ஷிண்டேயுடன் உத்தவ்
ஷிண்டேயுடன் உத்தவ்

இது தவிர எந்த சின்னம் வேண்டும் என்ற விருப்பத்தையும் உத்தவ் தாக்கரே தனது கடிததில் குறிப்பிட்டுள்ளார். அதில் தனது முதல் விருப்பமாக திரிசூலத்தை தனக்கு ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இரண்டாவது விருப்பமாக உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கேட்டுள்ளார். 1989ம் ஆண்டுதான் சிவசேனாவிற்கு வில் அம்பு சின்னம் கிடைத்தது. அதற்கு முன்பு வாள், கவசம், தென்னமரம், ரயில் எஞ்சின், கப் பிளேட் சின்னத்தில் போட்டியிட்டது.

ஏக்நாத் ஷிண்டேயும் இன்று அல்லது நாளைக்குள் தனது கட்சியின் பெயர் என்னவாக இருக்கவேண்டும் என்பது குறித்து தேர்தல் கமிஷனில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார். அதன் அடிப்படையில் இன்னும் ஓரிரு நாள்களில் இரண்டு அணியினரும் என்ன கட்சியின் பெயரை பயன்படுத்தவேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் கமிஷன் தனது அறிவிப்பை வெளியிடும். ஏக்நாத் ஷிண்டேயும் தனது கட்சிக்கு பின்னால் பால்தாக்கரே பெயரை சேர்ப்பார் என்று தெரிகிறது. இதனால் இவ்விவகாரத்தில் தேர்தல் கமிஷன் எந்த மாதிரியான முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மும்பையில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. அதற்குள் தேர்தல் கமிஷன் இவ்விவகாரத்தில் முடிவு எடுக்க இருக்கிறது. இத்தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே அணியினர் போட்டியிடவில்லை என்பதால் கட்சியின் சின்னம் விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று உத்தவ் தாக்கரே தரப்பில் தேர்தல் கமிஷனில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை தேர்தல் கமிஷன் ஏற்கவில்லை.