Published:Updated:

மகாராஷ்டிரா: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் வலதுகரமான சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்!

சஞ்சய் ராவுத்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் வலதுகரமான சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருக்கிறது.

மகாராஷ்டிரா: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் வலதுகரமான சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்!

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் வலதுகரமான சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருக்கிறது.

Published:Updated:
சஞ்சய் ராவுத்

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் தங்கியிருக்கின்றனர். தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி குறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தும், ட்விட்டர் மூலமும் தகவல்களை கொடுத்துக்கொண்டே இருந்தார். இந்த நிலையில், சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருக்கிறது. நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவு அந்த சம்மனில் குறிப்பிட்டிருக்கிறது. ரூ.1,034 கோடி பத்ரா சால் நில மோசடி தொடர்பாக இந்த சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

இந்த சம்மன் குறித்து சஞ்சய் ராவத், ``அமலாக்கப் பிரிவின் சம்மன் எனக்கு எதிரான சதியாகும். ஏக்நாத் ஷிண்டே பிரச்னையில் அமலாக்கப் பிரிவு, சி.பி.ஐ எங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. நீங்கள் என் தலையை துண்டித்தாலும் கவுஹாத்தி வழியை நான் பின்பற்ற மாட்டேன். முடிந்தால் கைதுசெய்து பாருங்கள். நான் ஒன்றும் பயப்படமாட்டேன்" என்று தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பா.ஜ.க-வின் உத்தரவை கேட்டு செயல்படுகின்றன என்று குற்றம்சாட்டியிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

அமலாக்கத்துறையின் சம்மன் குறித்து அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே, ``அமலாக்கப் பிரிவின் சம்மனுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு, ``எங்கள் அணி நீதிமன்றம் மூலம் வெற்றி பெறும். மகாராஷ்டிரா மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் தக்கபதிலடி கொடுப்பார்கள். அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் இன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வார்கள்" என்று தெரிவித்திருக்கிறார். மேலும், அதிருப்தி கோஷ்டியில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்களின் இலாகாக்களை பறித்து உத்தவ் தாக்கரே அரசு உத்தரவிட்டிருக்கிறது.