Published:Updated:

பாஜக-வில் ஓரங்கட்டப்படுகிறாரா பங்கஜா முண்டே?! - கோபிநாத் முண்டே மகளை சிவசேனா பக்கம் இழுக்கத் திட்டம்

பங்கஜா முண்டே
News
பங்கஜா முண்டே

மகாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டே மகள் பங்கஜா முண்டேயை தங்களது பக்கம் இழுக்க உத்தவ் தாக்கரே தீவிரம் காட்டி வருகிறார்.

பாஜக-வில் ஓரங்கட்டப்படுகிறாரா பங்கஜா முண்டே?! - கோபிநாத் முண்டே மகளை சிவசேனா பக்கம் இழுக்கத் திட்டம்

மகாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டே மகள் பங்கஜா முண்டேயை தங்களது பக்கம் இழுக்க உத்தவ் தாக்கரே தீவிரம் காட்டி வருகிறார்.

Published:Updated:
பங்கஜா முண்டே
News
பங்கஜா முண்டே

மகாராஷ்டிராவில் சிவசேனாவை பாஜக திட்டம் போட்டு உடைத்துவிட்டது என சிவசேனா குற்றம்சாட்டுகிறது. இதனால் பாஜக-வுக்கு ஏதாவது ஒரு வகையில் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய சித்தப்பா தனஞ்சே முண்டேயிடம் தோல்வியடைந்த பாஜக-வின் பங்கஜா முண்டேயை இப்போது பாஜக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. அதோடு அமைச்சரவையிலும் இடம் கொடுக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த சட்டமேலவைத் தேர்தலிலும் பங்கஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் பங்கஜா முண்டே பாஜக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்துவருகிறார். சமீபத்தில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பங்கஜாவின் பீட் நகருக்கு வந்திருந்தபோது அதில் கலந்துகொள்ளாமல் பங்கஜா புறக்கணித்துவிட்டார்.

பட்னாவிஸ், பங்கஜா
பட்னாவிஸ், பங்கஜா

தான் கட்சியில் புறக்கணிக்கப்படுவதாக ஏற்கெனவே பங்கஜா முண்டே பல பொது நிகழ்ச்சிகளில் மறைமுகமாக பேசியிருக்கிறார்.

இதற்கு முன்பு பாஜக ஏக்நாத் கட்சே என்ற மூத்த தலைவரை புறக்கணித்துவந்தது. அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். இப்போது பங்கஜா முண்டேயும் வேறு கட்சியில் சேருவது குறித்து ஆலோசித்துவருகிறார் என்பது தகவல். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அவரின் சித்தப்பா இருப்பதால் அந்தக் கட்சிக்குச் செல்ல முடியாது. ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவுக்கும் செல்லமாட்டார், எனவே உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவில் சேருவது குறித்து ஆலோசித்துவருகிறாராம். அவர் வந்தால் வரவேற்கத் தயாராக இருப்பதாக சிவசேனா எம்.எல்.ஏ சுனில் ஷிண்டே தெரிவித்திருக்கிறார். ``பங்கஜா மிகப்பெரிய தலைவர். அவர் பாஜக-வில் நியாயமாக நடத்தப்படவில்லை. அது அவர்களின் உட்கட்சி விவகாரம்.

ஆனால், அவரின் பணிகளுக்கு எப்போதும் நாங்கள் மதிப்பளிப்போம். அவர் எங்களது கட்சிக்கு வந்தால் நிச்சயம் வரவேற்போம்” என்று தெரிவித்தார். மற்றொரு சிவசேனா தலைவர் சந்திரகாந்த் கெய்ரே இது தொடர்பாக அளித்த பேட்டியில், ``மறைந்த கோபிநாத் முண்டே பாஜக-வை கிராமங்களுக்கு எடுத்துச்சென்றவர். அவரின் மகளுக்கு பாஜக-வில் அநீதி இழைக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

ராதாகிருஷ்ண விகே பாட்டீல் - பங்கஜா
ராதாகிருஷ்ண விகே பாட்டீல் - பங்கஜா

ஆனால், இது குறித்து பாஜக அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் அளித்த பேட்டியில், ``சந்திரகாந்த் இது போன்ற அறிக்கைகள் வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். பங்கஜாவுக்கு பாஜக-வில் எப்போதும் முக்கிய பங்கு இருக்கிறது” என்று தெரிவித்தார். ராதாகிருஷ்ண விகே பாட்டீல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த மக்களவைத் தேர்தலின்போதுதான் பாஜக-வில் சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.