Published:Updated:

நிலமோசடி வழக்கு; உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான சஞ்சய் ராவத் நள்ளிரவில் கைது- அமலாக்கத்துறை அதிரடி

சஞ்சய் ராவத்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமான எம்.பி சஞ்சய் ராவத் நிலமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

நிலமோசடி வழக்கு; உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான சஞ்சய் ராவத் நள்ளிரவில் கைது- அமலாக்கத்துறை அதிரடி

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமான எம்.பி சஞ்சய் ராவத் நிலமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
சஞ்சய் ராவத்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் எம்.பி சஞ்சய் ராவத் வீட்டில் நேற்று காலையிலிருந்து மாலை வரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். ரூ.1,000 கோடி அளவுக்கு மும்பையில் நடந்த நில மோசடி தொடர்பாக விசாரணை நடத்திவரும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், பலத்த மத்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்த ரெய்டை நடத்தினர். சஞ்சய் ராவத்திடம் நில மோசடி தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு இரண்டு சம்மன் அனுப்பியது. ஆனால் இரண்டு முறையும் சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை.

மேலும் அவர் ஆகஸ்ட் 7-ம் தேதி ஆஜராவதாகத் தெரிவித்திருந்தார். நில மோசடி தொடர்பாக விசாரணை நடத்தவேண்டியிருந்ததால் நேற்று மீண்டும் சம்மன் அனுப்பிவிட்டு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மும்பை பாண்டூப்பில் உள்ள அவர் இல்லத்தில் ரெய்டு நடத்தினர். ரெய்டுக்குப் பிறகு அமலாக்கப்பிரிவு விசாரணைக்காக அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரெய்டில் சஞ்சய் ராவத் வீட்டிலிருந்து ரூ.11.5 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து சஞ்சய் ராவத் வழக்கறிஞர் விக்ராந்த் அளித்த பேட்டியில், ``வீட்டில் ரெய்டு நடத்தியபோது நிலமோசடி தொடர்பாக எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. சஞ்சய் ராவத் விசாரணைக்கு மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். விசாரணைக்குப் பிறகு கைதுசெய்யப்படலாம்’ எனத் தெரிவித்தார்.

sanjay raut
sanjay raut

இது குறித்து சஞ்சய் ராவத் சகோதரர் சுனில் ராவத் கூறுகையில், ``எனது சகோதரர் உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கம் என்பதால்தான் கைதுசெய்திருக்கின்றனர். ஊழலில் அவருக்கு எந்தவிதத் தொடர்பும் கிடையாது. இந்த வழக்கு இல்லாவிட்டால் வேறு வழக்கில் கைதுசெய்திருப்பார்கள். பாஜக, சஞ்சய் ராவத்தைக் கண்டு பயப்படுகிறது” என்று தெரிவித்தார்.

சஞ்சய் ராவத் வீட்டிலிருந்து புறப்படும் முன்பு அவரின் தாயார் ஆரத்தி எடுத்தார். உடனே சஞ்சய் ராவத் தன்னுடைய தாயாரின் காலில் விழுந்து வணங்கினார். பின்னர் தாயாரைக் கட்டிப்பிடித்துவிட்டு புறப்பட்டு சென்றார். விசாரணைக்குப் பிறகு நள்ளிரவில் சஞ்சய் ராவத் கைதுசெய்யப்பட்டதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்திருக்கிறது. இன்று காலை 11:30 மணிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!