Published:Updated:

``ஆட்சியை கவிழ்க்க உதவி கேட்டனர்; மறுத்ததால் ரெய்டு!” - சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் புகார்

சஞ்சய் ராவத்

``ஆட்சியை கவிழ்க்க உதவி கேட்டு மறுத்ததால் ரெய்டு நடத்துகிறார்கள்” என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

``ஆட்சியை கவிழ்க்க உதவி கேட்டனர்; மறுத்ததால் ரெய்டு!” - சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் புகார்

``ஆட்சியை கவிழ்க்க உதவி கேட்டு மறுத்ததால் ரெய்டு நடத்துகிறார்கள்” என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் இருக்கும் சிவசேனா கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு புதிய அரசு அமைக்கவேண்டும், அல்லது தேர்தல் நடத்தவேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது என்றும், இதற்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் உதவியை பாஜக நாடுகிறது என்றும், ஆனால் அது கைகொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. தற்போது புதிய திருப்பமாக, `தன்னிடம் மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க சிலர் உதவி கேட்டதாக’ சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராஜ்ய சபை உறுப்பினரான சஞ்சய் ராவுத் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ``பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் துணையோடு சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்த பிறகு சிவசேனா தலைவர்கள் மீது அமலாக்கத்துறை குறி வைத்து செயல்பட்டு வருகிறது.

சஞ்சய் ராவுத்
சஞ்சய் ராவுத்

ஒரு மாதத்திற்கு முன்பு என்னை சிலர் அணுகி மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க உதவும் படி கேட்டனர். இதற்கு நான் துணையாக இருக்கவேண்டும் என்று விரும்பினர். இதன் மூலம் மகாராஷ்டிராவில் மீண்டும் தேர்தலை நடத்தலாம் என்று திட்டமிட்டனர். ஆனால் அவர்களது திட்டத்திற்கு நான் உதவ முடியாது என்று சொன்னேன். உடனே இதற்கு கடுமையான விலையை கொடுக்கவேண்டியிருக்கும் என்று மிரட்டினர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நடத்தப்படும் இந்த மிரட்டல்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு ராஜ்ய சபை உறுப்பினர்கள் துன்புறுத்தப்படுவதில் இருந்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சிலரின் தூண்டுதலின் பேரில் அமலாக்கப்பிரிவு போன்ற விசாரணை ஏஜென்சிகள் செயல்படுகிறது” என்று கடிதத்தில் தெரிவித்திருதார்.

மகாராஷ்டிவில் சிவசேனா கூட்டணி அரசு தனது 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் என்றும் சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்தார். சமீபத்தில் சஞ்சய் ராவத்தின் உறவினர்கள் பிரவின் ராவத் மற்றும் சுஜித் பட்கர் ஆகியோரது அலுவலகங்களில் அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தியதோடு ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலத்தையும் பறிமுதல் செய்தது குறிப்பிடதக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism