Published:Updated:

ராஜ்ய சபா: பாஜக-வின் `ப்ளஸ் ஒன்’ முயற்சி; எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாக்கும் சிவசேனா கூட்டணிக் கட்சிகள்!

தேவேந்திர பட்நாவிஸ், உத்தவ் தாக்கரே

ராஜ்ய சபா தேர்தலில் எம்.எல்.ஏ-க்கள் விலை போகாமலிருக்க சிவசேனா கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் மும்பையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனராம்.

ராஜ்ய சபா: பாஜக-வின் `ப்ளஸ் ஒன்’ முயற்சி; எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாக்கும் சிவசேனா கூட்டணிக் கட்சிகள்!

ராஜ்ய சபா தேர்தலில் எம்.எல்.ஏ-க்கள் விலை போகாமலிருக்க சிவசேனா கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் மும்பையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனராம்.

Published:Updated:
தேவேந்திர பட்நாவிஸ், உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் காலியாகும் ஆறு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு, வரும் 10-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆறு இடங்களுக்கு ஏழு பேர் போட்டியிடுகின்றனர். பாஜக தரப்பில் இரண்டு பேர் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற நிலையில், அந்தக் கட்சி மூன்று வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. மூன்றாவது வேட்பாளரைத் திரும்பப் பெறும்படி கேட்டு சிவசேனா கூட்டணித் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்நாவிஸைச் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பின்போது மூன்றாவது வேட்பாளரைத் திரும்பப் பெற்றால் சட்டமேலவைத் தேர்தலின்போது ஒரு இடத்தை விட்டுக்கொடுப்பதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனராம். தேவேந்திர பட்நாவிஸும் `நீங்கள் ஒரு வேட்பாளரைத் திரும்பப் பெற்றால் சட்டமேலவைத் தேர்தலில் நாங்கள் ஒரு தொகுதியை விட்டுக்கொடுப்பதாக’த் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே - தேவேந்திர பட்நாவிஸ்
உத்தவ் தாக்கரே - தேவேந்திர பட்நாவிஸ்

இதனால் பேச்சுவார்த்தை வெற்றி பெறாமல் போய்விட்டது. இதனையடுத்து ஆளுங்கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் மும்பைக்கு வரும்படி அழைத்துள்ளன. அவர்களைத் தேர்தல் முடியும் வரை தென்மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்க ஆளும் கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறிவிடக் கூடாது என்பதற்காக ஆளுங்கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன. அதே சமயம் மூன்று வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்துவிட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது.

இதற்காக சுயேச்சைகள், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்றுவருகிறதாம். தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேலும், பாஜக சார்பாக பியூஸ் கோயலும் போட்டியிடுகின்றனர். தற்போதைய நிலவரப்படி சிவசேனா கூட்டணியால் நான்கு இடங்களில் வெற்றி பெறமுடியும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், ``ராஜ்ய சபா தேர்தலுக்கு எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கில் செலவு செய்துகொண்டிருக்கிறது பா.ஜ.க. பண பலம் மற்றும் மத்திய விசாரணை ஏஜென்சியைப் பயன்படுத்தி வெற்றிபெற நினைக்கிது. நாங்கள் இங்கு ஆட்சியில் இருக்கிறோம் என்பதை பாஜக மறந்துவிடக் கூடாது” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism