Published:Updated:

`24 மணி நேரத்தில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் வந்தால் மகாவிகாஸ் கூட்டணியிலிருந்து விலக தயார்!' - சிவசேனா

சஞ்சய் ராவுத்

அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 24 மணி நேரத்தில் திரும்ப வந்தால் மகாவிலாஸ் அகாடி கூட்டணியிலிருந்து விலக தயார் என்று சிவசேனா தெரிவித்திருக்கிறது.

`24 மணி நேரத்தில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் வந்தால் மகாவிகாஸ் கூட்டணியிலிருந்து விலக தயார்!' - சிவசேனா

அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 24 மணி நேரத்தில் திரும்ப வந்தால் மகாவிலாஸ் அகாடி கூட்டணியிலிருந்து விலக தயார் என்று சிவசேனா தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
சஞ்சய் ராவுத்

மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே 30 எம்.எல்.ஏ-க்களுடன் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் பா.ஜ.க-வின் பாதுகாப்பில் தங்கியிருக்கிறார். இன்று மேலும் 3 சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் அஸ்ஸாம் சென்றிருக்கின்றனர். சிவசேனா உடையாமல் இருக்கவேண்டும் என்றால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலிருந்து சிவசேனா உடனே விலகவேண்டும் என்று அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நிபந்தனை விதித்திருக்கிறார். இதற்கு சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவுத், ``மகாவிகாஷ் அகாடியிலிருந்து சிவசேனா விலக வேண்டுமானால் முதலில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் மும்பை வரவேண்டும். அதன் பிறகு மகாவிகாஷ் அகாடியிலிருந்து விலகுவது குறித்து சிவசேனா நிச்சயம் பரிசீலிக்கும். சமூக வலைதளங்கள் மூலம் தகவல் கொடுக்கக் கூடாது.

சஞ்சய் ராவுத்
சஞ்சய் ராவுத்

ஏக்நாத் ஷிண்டேவுடன் இருக்கும் 20 எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்போது இது தெரியவரும். அமலாக்கத்துறையின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து கட்சியிலிருந்து வெளியில் சென்றவர்கள் உண்மையான பால் தாக்கரே விசுவாசிகள் கிடையாது. ஏக்நாத் ஷிண்டேவுடன் இருப்பவர்கள் பால் தாக்கரேவின் உண்மையான தொண்டர்கள் கிடையாது. அவர்கள் அமலாக்கத்துறைக்கு பயப்படுகின்றனர். எங்களது கட்சி இன்றைக்கும் வலுவாக இருக்கிறது. கட்சி எம்.எல்.ஏ நிதின் தேஷ்முக் சூரத்திலிருந்து நாக்பூர் வந்திருக்கிறார். அவரைக் கடத்திச் சென்றிருக்கின்றனர்" பதிலளித்தார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஏக்நாத் ஷிண்டே மறுத்திருக்கிறார். அதோடு கவுகாத்தி ஓட்டலில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அதில் 42 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

அதோடு சிவசேனா முன்னாள் கவுன்சிலர்கள் 400 பேர் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர இருக்கின்றனர். மாநகராட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 400 முன்னாள் கவுன்சிலர்கள் விலக முடிவு செய்திருப்பது சிவசேனாவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையே அதிருப்தி எம்.எல்.ஏ ஒருவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தில், `தாக்கரே ஏஜெண்டுகள் எங்களை முதல்வரின் இல்லமான வர்ஷா பக்கமே அனுமதிக்கவில்லை. ஏக்நாத் ஷிண்டேதான் எங்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைத்தார். எனவே உரிமைக்காக இந்த முடிவை எடுக்கும்படி ஏக்நாத்திடம் நாங்கள்தான் கேட்டுக்கொண்டோம்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கடிதம் வைரலாகி வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism