Published:Updated:

``பாஜகவின் ஒப்பந்தக் கொலைகாரர்களாக மத்திய விசாரணை ஏஜென்சிகள் செயல்படுகிறது": சிவசேனா குற்றச்சாட்டு

மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் ஒப்பந்த கொலைகாரர்களாக மத்திய விசாரணை ஏஜென்சிகள் இருப்பதாக சிவசேனா கடுமையாக சாடியிருக்கிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை தொடர்ந்து எதாவது காரணத்தை சொல்லி ரெய்டு நடத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. சிவசேனா தலைமையிலான அரசு ஊழல் அரசு என்று நம்ப வைப்பதற்காக இதுபோன்று தொடர்ச்சியான ரெய்டுகள் நடத்தப்படுவதாக காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது குறித்து சிவசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மத்திய அரசு மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாக பயன்படுத்துகிறது. மகாராஷ்டிராவில் தங்களது அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்ட ஒப்பந்தக் கொலைகாரர்களாக இப்போது மத்திய அரசு மாறி இருக்கிறது. டெல்லியில் உள்ள ஆட்சியாளர்களின் ஒப்பந்தக் கொலைகாரர்களாக மத்திய விசாரணை ஏஜென்சிகள் செயல்படுகின்றன. முன்பு டெல்லியில் இருப்பவர்கள் பொய் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்
`சிவசேனா கூட்டணி அரசை கலைத்துப் பாருங்கள் பார்க்கலாம்!' - எம்.பி சஞ்சய் ராவத் சவால்

இப்போது எந்த வித முதலீடும் இல்லாமல் ரெய்டு நடத்துவதை தொழிலாக கொண்டிருக்கின்றனர். மக்கள் பணம், அரசு இயந்திரத்தை பயன்படுத்தி அரசியல் எதிரிகளை அகற்றும் வேலையை செய்கின்றனர். மும்பையில் மாபியாக்கள் வலுவாக இருந்த நேரத்தில் ஒப்பந்தக் கொலைகள் அதிக அளவில் நடந்தது. மாபியாக்கள் எதிரிகளை ஒழிக்க ஒப்பந்தக் கொலைகாரர்களை நியமிப்பது வழக்கம். இப்போது அந்த வேலையை அரசு செய்கிறது. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் ஒப்பந்த கொலைகாரர்களாக மத்திய விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன. வேண்டாத அரசியல் கட்சிகளை மத்திய விசாரணை ஏஜென்சிகளைக்கொண்டு ஒழித்துக்கட்டுவது புதிய கொள்கையாகி இருக்கிறது. மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் மருமகனை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து 8 மாதம் சிறையில் அடைத்திருந்தனர். இப்போது கோர்ட் ஜாமீன் வழங்கி இருக்கிறது. கோர்ட் தனது உத்தரவில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தது போதைப்பொருள் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் வீட்டில் சிபிஐ அடிக்கடி ரெய்டு நடத்துகிறது. ஆனால் அனில் தேஷ்முக் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திய மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அவரை தேடி கண்டுபிடிக்க மறுக்கின்றனர்" எனத் தெரிவித்திருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரேயும் இதே குற்றச்சாட்டை சுமத்தியிருக்கின்றனர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு