Published:Updated:

“ஓ.பி.எஸ்-ஸின் பினாமி... இ.பி.எஸ்-ஸின் பணம்...” - புதுச்சேரி அ.தி.மு.க-விலும் ஒற்றைத் தலைமை யுத்தம்!

புதுச்சேரி அ.தி.மு.க
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி அ.தி.மு.க

அ.தி.மு.க-வுக்கு இரட்டைத் தலைமைதான் வேண்டும்’ என்ற சொன்ன ஓம்சக்தி சேகர், `பொதுச்செயலாளராக எடப்பாடியார் வந்தால் கட்சியைவிட்டே சென்றுவிடுவேன்

“ஓ.பி.எஸ்-ஸின் பினாமி... இ.பி.எஸ்-ஸின் பணம்...” - புதுச்சேரி அ.தி.மு.க-விலும் ஒற்றைத் தலைமை யுத்தம்!

அ.தி.மு.க-வுக்கு இரட்டைத் தலைமைதான் வேண்டும்’ என்ற சொன்ன ஓம்சக்தி சேகர், `பொதுச்செயலாளராக எடப்பாடியார் வந்தால் கட்சியைவிட்டே சென்றுவிடுவேன்

Published:Updated:
புதுச்சேரி அ.தி.மு.க
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி அ.தி.மு.க

புதுச்சேரி அ.தி.மு.க-வில் நீறுபூத்த நெருப்பாக நீண்டகாலமாக நீடித்துவந்த கோஷ்டி மோதல், தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

புதுச்சேரி அ.தி.முக-வின் கிழக்கு மாநிலச் செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகனுக்கும், மேற்கு மாநிலச் செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். எடப்பாடி ஆதரவாளராக இருக்கும் அன்பழகனும், இதுநாள்வரை ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த ஓம்சக்தி சேகரும், தமிழ்நாட்டு அ.தி.மு.க சண்டையைக் காரணம் காட்டி தங்களுக்குள் சாட்டையைச் சுழற்றிவருகிறார்கள்.

ஓம்சக்தி சேகர்
ஓம்சக்தி சேகர்

கடந்த 1-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ஓம்சக்தி சேகர், “இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இருவரையுமே நான் என் இரு கண்களாகப் பார்க்கிறேன். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது சசிகலா பக்கம் சென்ற அன்பழகன், கட்சி ஒருங்கிணைந்தபோது மீண்டும் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பக்கமே வந்துவிட்டார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்துக்காக எடப்பாடி தரப்பு கொடுத்த மிகப்பெரிய தொகையை அன்பழகன் வாங்கி வந்து தன் வீட்டிலேயே வைத்துக்கொண்டார். ஒரு பொதுக்குழு உறுப்பினருக்காவது அந்தப் பணத்தைக் கொடுத்தாரா... ஓ.பி.எஸ் மனைவி இறந்தபோது அவர் படத்தை வைத்து அன்னதானம் வழங்கியவர் அன்பழகன். ஆனால் சில நாள்களுக்கு முன்பு ஓ.பி.எஸ் படத்தைக் கிழித்தார். யார் கையில் கட்சி, கொடி, சின்னம் இருக்கிறதோ, அவர்கள் பக்கமே புதுச்சேரி அ.தி.மு.க-வினர் எனது தலைமையில் செயல்படுவார்கள். அன்றைய தினத்திலிருந்து அன்பழகன் கட்சியில் இருக்க மாட்டார். தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஒற்றைத் தலைமை ஏற்றவுடன் புதுச்சேரி அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாக நான்தான் இருப்பேன்” என்றார்.

அன்பழகன்
அன்பழகன்

அதற்கடுத்த ஒரு மணி நேரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பழகன், “ `அ.தி.மு.க-வுக்கு இரட்டைத் தலைமைதான் வேண்டும்’ என்ற சொன்ன ஓம்சக்தி சேகர், `பொதுச்செயலாளராக எடப்பாடியார் வந்தால் கட்சியைவிட்டே சென்றுவிடுவேன்’ என்றும் கூறினார். ஆனால் இன்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகிய நால்வரில் யாரை வேண்டுமானாலும் தலைவராக ஏற்றுக்கொள்வேன் என்கிறார். யார் வலுப்பெறுவார்களோ அவர்கள் பக்கம் போவதாகச் சொல்கிறார். வெற்றிபெறுபவர்களின் தலைமையை ஏற்பேன் எனக் கூறுவது அரசியலுக்கு அழகா... ஓம்சக்தி சேகரின் கட்டுப்பாட்டிலிருக்கும் மேற்கு மாநில அ.தி.மு.க-வின் 65% நிர்வாகிகளும், 21 பொதுக்குழு உறுப்பினர்களில் 11 பேரும் எங்களிடம் வந்துவிட்டனர். ஓ.பி.எஸ் தமிழ்நாட்டில் கொள்ளையடித்த பணத்தை புதுச்சேரியில் முதலீடு செய்திருக்கிறார். ஓ.பி.எஸ்-ஸின் பினாமியாக இருக்கும் ஓம்சக்தி சேகர், அரியூர் பகுதியில் ரூ.30 கோடிக்குச் சொத்து வாங்கியிருக்கிறார். அவரை எப்படிக் கட்சி அங்கீகரிக்கும்?” என்றார்.

ஓம்சக்தி சேகர்
ஓம்சக்தி சேகர்
அன்பழகன்
அன்பழகன்

கேரளா, கர்நாடகாவிலாவது அ.தி.மு.க ஒற்றுமையாக இருக்கிறதா?!