Published:Updated:

ஒற்றைத் தலைமை விவகாரம்: பழனிசாமி `அமைதி’க்குப் பின்னால்..?! - அதிமுக அப்டேட்ஸ்

`பழனிசாமி

ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த 7 நாள்களாக அனலடித்து வரும்நிலையில், பொதுக்குழுவை தற்போதைய சூழ்நிலையில் நடத்தவேண்டாம் என்று ஓ.பி.எஸ் பகிரங்கமாகவே கடிதம் எழுதியும், எடப்பாடி அமைதியாகவே இருக்கிறார்.

ஒற்றைத் தலைமை விவகாரம்: பழனிசாமி `அமைதி’க்குப் பின்னால்..?! - அதிமுக அப்டேட்ஸ்

ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த 7 நாள்களாக அனலடித்து வரும்நிலையில், பொதுக்குழுவை தற்போதைய சூழ்நிலையில் நடத்தவேண்டாம் என்று ஓ.பி.எஸ் பகிரங்கமாகவே கடிதம் எழுதியும், எடப்பாடி அமைதியாகவே இருக்கிறார்.

Published:Updated:
`பழனிசாமி

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர். அமைப்பு ரீதியான 75 மாவட்டங்களுக்கான, செயலாளர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கீழ்மட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றன. இதனை பொதுக்குழுவில் சமர்ப்பித்து, ஓப்புதல் பெறுவதற்கான கூட்டம் ஜூன் 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

அதிமுக கூட்டம்
அதிமுக கூட்டம்

மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து ஜூன் 14-ம் தேதி நடந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்தான், ஒற்றைத் தலைமை விவாதம் வெடித்தது. மா.செ கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பேசப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதால், ஒட்டுமொத்த தமிழக அரசியலில் இது பேசுபொருளானது. அதேபோல, தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸும், இ.பி.எஸும் தொடர்ந்து ஆலோசனை செய்து வருவதால், ஒற்றைத் தலைமை விவகாரம் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்படி, பழனிசாமி தரப்பில் அதிக நிர்வாகிகள் இருப்பதாகவும், இதனால், அவர் தான் ஒற்றை தலைமைக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், " ஒற்றைத் தலைமை என்பது அம்மாவுக்குச் செய்யும் துரோகம். அவர் மட்டுமே அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச்செயலாளர். தேவையற்ற இப்படியான விவாதங்களால் தொண்டர்களைச் சஞ்சலப்படுத்தக் கூடாது. 14 பேர் கொண்ட உயர்மட்ட ஆலோசனைக்குழு அமைத்து, இந்தப் பிரச்னைகள் தொடர்பாக விவாதித்து, முடிவெடுக்கப்பட்டால் அதற்கு நான் கட்டுப்படுவேன்” என்கிறார் பன்னீர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால், பழனிசாமி தரப்பு இதனை கேட்பதாக இல்லை. அரசியல் சாசனமே அவ்வப்போது மாற்றப்படுகிறது. கட்சியின் சட்டவிதிகளை மாற்றுவது தவறு ஒன்றுமில்லை என்று விடாப்பிடியாக இருகிறார்கள். இதற்கிடையே, இருவரின் ஆதரவு மாவட்டச் செயலாளர்களும், போட்டிப் போட்டுக் கொண்டு ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், பல்வேறு கருத்துகளை முன்வைத்து பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் குறிப்பிட்டுள்ளார். அதில், கழகத்தின் நலன் கருதி, நடைபெறவுள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தினை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்றும், அடுத்த கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தைக் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இருவரும் கலந்தாலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஓபிஎஸ்
ஓபிஎஸ்

இதுகுறித்து பன்னீர் தரப்பில் இருந்து சமீபத்தில் பழனிசாமி தரப்புக்கு தாவிய துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி, அவ்வாறு கடிதம் எதுவும் வரவில்லை என்றும் பொதுக்குழுவுக்குப் பன்னீர்செல்வம் கட்டாயம் வருவார் என்றும் தெரிவித்துள்ளார்.

கே.பி. முனுசாமி
கே.பி. முனுசாமி

பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானமாக ஒற்றைத் தலைமை விவகாரம் கொண்டு வந்தால், பன்னீர் வெற்றி பெற முடியாது என்று தெரிந்துதான், பொதுக்குழுவை அவர் தடுக்கிறார் என்று பழனிசாமி ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். ஒற்றை விவகாரம் கடந்த 7 நாள்களாக கொளுந்துவிட்டும் எரியும் நிலையில், அதிரடி அரசியல் செய்யும் பழனிசாமி, இதுகுறித்து இன்னும் பேசவேயில்லை.

இதுகுறித்து பழனிசாமியின் நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்தபோது, ``எடப்பாடி தரப்பில் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, பெஞ்சமின், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், காமராஜ் என முன்னாள் அமைச்சர்கள் துணை நிற்கிறார்கள். அதேபோல, 60-க்கும் அதிகமான மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

ஆனால், ஓ.பி.எஸ் தரப்பில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தர்மர், சையது கான் உள்ளிட்ட சில நிர்வாகிகளே ஆதரவு அளித்து வருகின்றனர். ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை இழுக்கும் முயற்சியும் நடக்கிறது. இதனால், அ.தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தின் ஒற்றை தலைமையை நோக்கி இ.பி.எஸ் நகர்ந்துவிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

எனவே, இப்போது இந்த விவகாரம் குறித்துப் பேசவேண்டிய அவசியமில்லை. இதனால்தான், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் வைத்து ஓ.பி.எஸை டீல் செய்து வருகிறார். குறிப்பாக, தலைமை ஏற்றபின்னர், அடுத்த கட்ட தலைவராக ஓ.பி.எஸ் இருக்கவேண்டும் என்று இ.பி.எஸ் நினைக்கிறார். இதன்காரணமாகவே ஓ.பி.எஸை நேரடியாக எதிர்காமல் அமைதியாக இருக்கிறார். தற்போது பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று ஓ.பி.எஸ் கடிதம் எழுதியும்கூட, முனுசாமியை வைத்தே பதிலுரைக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஓ.பி.எஸ் பின்னாலும் நிர்வாகிகளும், தொண்டர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் முழுமையாக இணைக்க இ.பி.எஸ் திட்டமிட்டுள்ளார். ஏனென்றால், ஒரு தரப்பு விரோதம் கட்சிக்கு நல்லதல்ல. அதேபோல, தினகரன், சசிகலா தரப்பு இதனை சாதகமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அவர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது என்றாலும், தற்போது சூழ்நிலையில் தேவையில்லா குழப்பத்தை ஏற்படுத்திவிடும். தற்போது இருமுனையாக இருக்கும் பிரச்னை, மும்முனையாக மாறும் வாய்ப்பை ஏற்படுத்திவிடக்கூடாது அல்லவா!. அதேபோல, பொதுக்குழுக்கு தயாராக இருக்க, மாவட்ட செயலாளர்களை சொந்த ஊருக்கு செல்லவும் இ.பி.எஸ் உத்தரவிட்டுள்ளார்" என்றனர் விரிவாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism