Published:Updated:

காங்கிரஸ் மூவ்-க்கு செக் வைத்த பாஜக! - சிவகாசி மாநகராட்சி... திமுக மேயர் ரேஸில் யார் யார்?!

சிவகாசி மாநகராட்சி

விருதுநகர் மாவட்டத்தின் முதல் மாநகராட்சியான சிவகாசியின் மேயர், துணை மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு மாவட்டம் முழுவதும் நிலவுகிறது. இந்த நிலையில், மேயர், துணை மேயர் பதவியைக் கைப்பற்றிட நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் மூவ்-க்கு செக் வைத்த பாஜக! - சிவகாசி மாநகராட்சி... திமுக மேயர் ரேஸில் யார் யார்?!

விருதுநகர் மாவட்டத்தின் முதல் மாநகராட்சியான சிவகாசியின் மேயர், துணை மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு மாவட்டம் முழுவதும் நிலவுகிறது. இந்த நிலையில், மேயர், துணை மேயர் பதவியைக் கைப்பற்றிட நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

Published:Updated:
சிவகாசி மாநகராட்சி

பட்டாசு உற்பத்தியில் உலகில் முதலிடத்திலுள்ள சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது ’குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படும் ’சிவகாசி.’ இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள், இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 90 சதவிகிதத்தைப் பூர்த்திசெய்கின்றன. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறியதும் பெரியதுமாக 1,050 பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. ’சிவகாசி’ முதன்முதலாக மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் முதல் மாநகராட்சி இது. சிவகாசி நகராட்சியின் 24 வார்டுகள், திருத்தங்கல் நகராட்சியின் நகராட்சியின் 24 வார்டுகள் இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

சூரியா - ரேணுநித்திலா
சூரியா - ரேணுநித்திலா

மொத்தமுள்ள 48 வார்டுகளில் தி.மு.க 32 வார்டுகளிலும், காங்கிரஸ் 12 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா ஒரு வார்டிலும் போட்டிட்டன. தி.மு.க மற்றும் அ.தி.மு.க நேரடியாக 32 வார்டுகளில் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க 24 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 6 இடங்களிலும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா ஓர் இடத்திலும் வெற்றிபெற்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல, அ.தி.மு.க 11 வார்டுகளிலும், சுயேச்சை 4 வார்டுகளிலும், பா.ஜ.க ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மொத்தம் 32 வார்டுகளைக் கைப்பற்றியிருந்தாலும், 4 சுயேச்சைகளும் தி.மு.க-வுக்கு ஆதரவு அளிக்கும் நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சிவகாசி தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வாக அரசன் அசோகனும், விருதுநகர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யாக மாணிக்கம் தாகூரும் உள்ளனர்.

விக்னேஷ்பிரியா - சங்கீதா
விக்னேஷ்பிரியா - சங்கீதா

சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளிலும் காங்கிரஸுக்கு செல்வாக்கு இருப்பதால் ஆரம்பத்தில் மேயர் பதவியைக் கேட்டு அடம்பிடித்தது காங்கிரஸ். அதேநேரத்தில், மாவட்டத்தின் முதல் மாநாகராட்சியின் மேயர் பதவியை விட்டுத்தர முடியாது என திட்டவட்டமாகக் கூறியது தி.மு.க. அதனால், துணை மேயர் பதவியிலாவது தனது மருமகன் கார்த்தியை அமரவைக்க வேண்டும் என முயன்றார் அரசன் அசோகன். ஆனால், வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க வேட்பாளரிடம் தோற்றார் கார்த்தி. அதனால், காங்கிரஸின் துணை மேயர் எதிர்பார்ப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவகாசி மாநகராட்சியின் மேயர் ரேஸில் முன்னாள் ஒன்றியச் செயலாளர் சந்திரனின் மகள் சூரியா, சிவகாசி நகர வர்த்தக அணிச் செயலாளர் இன்பத்தின் மனைவி சங்கீதா, சிவகாசி தி.மு.க நகரப் பொறுப்பாளர் காளிராஜனின் மனைவி விக்னேஷ் பிரியா, வடக்கு மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் ராமமூர்த்தியின் மனைவி ரேணு நித்திலா ஆகியோர் முட்டி மோதுகின்றனர். எப்படியும் மேயராக்கிவிட வேண்டும் என மேயர் ரேஸில் உள்ளவர்களின் குடும்ப உறவுகளும், மாவட்டத்தின் இரு அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மூலம் காய்நகர்த்திவருகின்றனர்.

ஞானசேகரன்
ஞானசேகரன்

மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் துணை மேயர் பதவியையும் பெண்களுக்கு ஒதுக்கினால்தான் நல்லது எனவும் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். இது ஒரு புறமிருக்க துணை மேயர் பதவி, சிவகாசி நகராட்சியின் முன்னாள் சேர்மன் ஞானசேகரனுக்குத்தான் எனக் கட்சி வட்டாரத்தில் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. மேயர், துணை மேயர் இருவரும் அனுபவம் இல்லாத புது முகங்களாக இருந்தால் நிர்வாகத்தை எப்படிக் கொண்டு செல்ல முடியும்?

சிவகாசி மாநகராட்சியின் சேர்மனாக நிர்வாகத்தில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஞானசேகரன்தான் அந்தப் பதவிக்கு சரியானவர், அதுமட்டுமல்லாமல், இதற்கு முன்பு சிவகாசி நகராட்சியின் சேர்மனாக இருந்தபோது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நியாயமாக நடந்துகொண்டார் என்கின்றனர். இருந்தாலும், அவர் காங்கிரஸிகுருந்து தி.மு.க-வுக்கு வந்தவர்.

சிவகாசி மாநகராட்சி அலுவலகம்
சிவகாசி மாநகராட்சி அலுவலகம்

கட்சி நிர்வாகிகளை எப்படி அனுசரிப்பார், வருமானத்துக்கு முட்டுக்கட்டை போடுவாரே என்ற குற்றச்சாட்டையும் கட்சியினர் முன்வைக்கிறார்கள். மேயர் ரேஸுக்குப் போட்டி போடும் நான்கு பேரில் ஒருவருக்குத்தான் மேயர் பதவி என்றாலும், மேயர் பதவி கிடைக்காத மற்றவர்களும் துணை மேயர் பதவி கிடைத்தால்கூட ஓ.கேதான் என்ற மற்றொரு மனநிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆக, சிவகாசி மாநகராட்சியில் மேயர், துணை மேயர் இரண்டு பதவிக்குமே கடுமையான போட்டி நிலவுகிறது என்பதே உண்மை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism