Published:Updated:

`மகாத்மா காந்தி விரும்பியதை மோடி நிறைவேற்றுகிறார்!' - மதுரையில் ஸ்மிரிதி இரானி

தி.மு.க-வுக்கு இந்துக்களையும், காங்கிரஸுக்கு சீக்கியர்களையும் பிடிக்காத நிலையில் தற்போது கிறிஸ்துவர்களுக்கு குடியுரிமை வழங்குவதையும் ஏன் எதிர்க்கிறீர்கள்?

ஸ்மிரிதி இரானி
ஸ்மிரிதி இரானி ( என்.ஜி.மணிகண்டன் )

கடந்த காலத்தில் செய்யப்பட்ட வரலாற்றுப் பிழைகளை பி.ஜே.பி அரசு சரி செய்து வருகிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மதுரையில் பேசினார்.

ஸ்மிரிதி இரானி
ஸ்மிரிதி இரானி
என்.ஜி.மணிகண்டன்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நாடு முழுவதும் நடத்தி வரும் போராட்டங்களுக்கு எதிராக பி.ஜே.பி, விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் மதுரை செல்லூரில் இன்று நடந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கலந்துகொண்டார்.

அவர் பேசும்போது, ''குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி மகாத்மா காந்தியின் ஆசையை நிறைவேற்றியுள்ளது மோடி அரசு. அனால், தேசத்தை துண்டாட நினைக்கும் காங்கிரஸுக்கு ஆதரவாக தி.மு.க செயல்படுவது ஏன். தேசத்தைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆதரவாக தி.மு.க பேசுவது ஏன். காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது, இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க காங்கிரஸ் மறுத்தபோது தி.மு.க எதிர்காதது ஏன்?

ஸ்மிரிதி இரானி
ஸ்மிரிதி இரானி
என்.ஜி.மணிகண்டன்

தி.மு.க-வை பார்த்து கேள்வி கேட்கிறோம். இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில்கூட காங்கிரஸ் இரட்டை குடியுரிமை வழங்க முயலவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவை கொள்ளையடிக்கும் பணியை தி.மு.க-வுக்கு அளித்ததால் இலங்கை தமிழர்கள் பற்றி கண்டுகொள்ளவில்லை.

பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என வாஜ்பாய் ஆட்சியில் முடிவெடுத்தபோது ஆதரவளித்த தி.மு.க, தற்போது எதிர்ப்பது ஏன்? காங்கிரஸும் தி.மு.க-வும் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்துக்களுக்கு மட்டும் எனத் தவறான தகவல்களைப் பரப்பிவருகிறார்கள். தி.மு.க-வுக்கு இந்துக்களையும், காங்கிரஸுக்கு சீக்கியர்களையும் பிடிக்காத நிலையில் தற்போது கிறிஸ்துவர்களுக்கு குடியுரிமை வழங்குவதையும் ஏன் எதிர்க்கிறீர்கள்?

பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சர் மண்டல், கடைசி காலத்தில் இந்தியாவில் அகதியாக வர வேண்டிய நிலை ஏற்பட்டது. தி.மு.க-வுக்கு இந்துக்கள் மீது அன்பு இல்லையா, பாகிஸ்தானிலிருந்து இந்து, தலித், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் இந்தியா வருவதை விரும்பவில்லையா?

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி
என்.ஜி.மணிகண்டன்

பாகிஸ்தானில் மதரீதியாகப் பாதிப்புக்குள்ளாகும் இந்துக்களுக்கு குடியுரிமை சட்டத்தால் ஆதரவு தருகிறோம். இந்திய நலனுக்கு எதிராகப் பேசுவதால் ராகுலுக்கு பாகிஸ்தானில் ஆதரவு அதிகம் உள்ளதால், தி.மு.கவும் பாகிஸ்தானை ஆதரிக்கிறது.

காங்கிரஸ், பல்கலைக்கழக மாணவர்களை தேசத்துக்கு எதிராகத் தூண்டுகிறார்கள். தேசத்தைத் துண்டாட நினைக்கும் காங்கிரஸுக்கு ஆதரவாக தி.மு.க செயல்படுவது ஏன்? இந்திய நலனுக்கு எதிராக தி.மு.க பேசுவது இது முதல்முறை அல்ல.

காஷ்மீரில் கஜானாவில் புதையல் இருப்பதால் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது. ஆனால், தி.மு.க ஏன் எதிர்க்கிறது? மோடி அரசு வரலாற்று பிழைகளை சரிசெய்யும் ஆட்சியாக செயல்பட்டுவருகிறது. பாகிஸ்தான் சிறுபான்மையினத்தவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தி விரும்பியதை மோடி நிறைவேற்றி வருகிறார்.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி
என்.ஜி.மணிகண்டன்

பொறுப்பேற்ற 6 மாதத்தில் காஷ்மீரில் சிறப்பு சட்டம், குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகியவற்றை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பாகிஸ்தான் சிறுபான்மையினர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் எனக் கூறியபோது அப்போது தி.மு.க ஏன் எதிர்க்கவில்லை'' என்று தி.மு.க-வை குறி வைத்து பேசினார்.