Published:Updated:

``ஷிண்டே அணியில் சிக்கியுள்ள சிலர் எங்கள் தொடர்பிலிருக்கிறார்கள்” - பற்றவைக்கும் ஆதித்ய தாக்கரே?!

ஆதித்ய தாக்கரே

``சிவசேனா அதிருப்தி கோஷ்டிtஹ் தலைவர் ஏக்நாத் ஷிண்டே அணியில் சிக்கியுள்ள சிலர் எங்களுடன் தொடர்பிலிருக்கிறார்கள்” என்று உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே தெரிவித்திருக்கிறார்.

``ஷிண்டே அணியில் சிக்கியுள்ள சிலர் எங்கள் தொடர்பிலிருக்கிறார்கள்” - பற்றவைக்கும் ஆதித்ய தாக்கரே?!

``சிவசேனா அதிருப்தி கோஷ்டிtஹ் தலைவர் ஏக்நாத் ஷிண்டே அணியில் சிக்கியுள்ள சிலர் எங்களுடன் தொடர்பிலிருக்கிறார்கள்” என்று உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஆதித்ய தாக்கரே

மகாராஷ்டிராவில் கடந்த மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் சிவசேனா இரண்டாக உடைந்தது. அதிருப்தி கோஷ்டித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஓர் அணியும், உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டுவருகின்றன. யாரின் அணி உண்மையான சிவசேனா என்ற போட்டி ஏற்பட்டிருக்கிறது. இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அணுகியிருக்கின்றனர். அதோடு இரு தரப்பினரும் தங்களின் செல்வாக்கை நிரூபிக்கப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அடிக்கடி இரு அணிகளும் மோதிக்கொள்கின்றன.

இதற்கிடையே, உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களைச் சந்தித்துப் பேசிவருகிறார். ஆதித்ய தாக்கரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ``ஏக்நாத் ஷிண்டேயிடம் சிக்கிக்கொண்டிருக்கும் சிலர் எங்கள் தொடர்பில் இருக்கிறார்கள். அமைச்சரவை விரிவாக்கத்துக்குப் பிறகு அவர்கள் எங்களுடன் தொடர்பு கொண்டுவருகின்றனர்.

``ஷிண்டே அணியில் சிக்கியுள்ள சிலர் எங்கள் தொடர்பிலிருக்கிறார்கள்” - பற்றவைக்கும் ஆதித்ய தாக்கரே?!

எங்கள் கதவு திறந்தே இருக்கிறது. யார், எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் வந்து சேரலாம். அங்கேயே இருக்க நினைப்பவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலைச் சந்தியுங்கள். யார் உண்மையான முதல்வர் என்று இப்போது எல்லோருக்கும் தெரியும். அமைச்சரவை விரிவாக்கத்தில் மும்பையைச் சேர்ந்தவர்களோ, பெண்களோ அல்லது சுயேச்சைகளைகளோ இடம்பெறவில்லை” என்று ஆதித்ய தாக்கரே தெரிவித்தார்.

ஷிண்டே அணியில் இடம்பெற்றிருக்கும் எம்.எல்.ஏ-க்களில் பலர் அமைச்சர் பதவி கிடைக்காததால் மிகவும் அதிருப்தியில் இருக்கின்றனர். ``தற்போது முழு அளவில் அமைச்சரவை விரிவுபடுத்தப்படவில்லை. முழு அளவில் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும்போது வாய்ப்பு கொடுக்கப்படும்’’ என்று கூறி அதிருப்தியாளர்களின் வாயை ஏக்நாத் ஷிண்டே மூடியிருக்கிறார். மற்றொரு பக்கம் அமைச்சரவையில் உள்துறை உட்பட முக்கியத் துறைகள் அனைத்தும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் அவர் முதல்வர் போன்று செயல்பட்டுவருவதாகவும் ஷிண்டே ஆதரவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.