Published:Updated:

`என் வைரல் மீம்களை ஃபார்வர்டு செய்வதற்கு முன்..?' - கோவை அ.தி.மு.க. உறுப்பினர் சோனாலி

சோனாலி பிரதீப்
சோனாலி பிரதீப்

இதே பதவிக்காக, எத்தனையோ பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், எதற்காக என்னைப் பற்றிய தகவல்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்?

உள்ளாட்சித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவேயில்லை. ஆனால், அதற்குள் அ.தி.மு.க-வில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு விருப்பமனு கொடுத்த சோனாலி பிரதீப் தமிழகம் முழுவதும் பேசு பொருளாகிவிட்டார். சோனாலி, 'மிசஸ் இந்தியா' யுனிவர்ஸ் எர்த்' பட்டம் வென்ற அழகி என்பதால், அவரது போட்டோக்களுடன் இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. அதே நேரத்தில், தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக சோனாலி, சாய்பாபாகாலனி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

சோனாலி
சோனாலி

இதுதொடர்பாக, கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க உறுப்பினர் ரகுபதி என்பவரைக் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில், தன்னைப் பற்றி அவதூறு பரப்புவது தொடர்பாக சோனாலி தனது முகநூல் பக்கத்தில் ஓர் நீண்ட விளக்கத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், "நமது சமூகத்தில் எப்போதும் பெண்களை அழகை வைத்து எடைபோடுவது ஆரோக்கியமான செயல் இல்லை.

சோனாலி
சோனாலி

ஒவ்வொரு பெண்ணுமே, தனது செயலிலும் இலக்கிலும் அழகானவர்தான். அதை ஏன் இங்கு முன்னிலைப்படுத்துவதில்லை? இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

Vikatan

ஒரு மேயர் பதவிக்கு விருப்பமனு கொடுத்ததற்காக, நான் ஏன் விவாதப் பொருளாக மாறியுள்ளேன் என்று புரியவில்லை. திரும்பிய திசையெல்லாம் என்னைப் பற்றி கேள்விகள் எழுந்துகொண்டிருக்கின்றன. அதற்கான பதில் இதோ.

சோனாலி குடும்பம்
சோனாலி குடும்பம்

நான் பிறந்தது, வளர்ந்தது, செட்டில் ஆகியிருப்பது எல்லாமே கோவையில்தான். திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

பறிபோகப் போகிறதா மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷியாரியின் பதவி?

பணியை எடுத்துக்கொண்டால் நான் ஒரு தொழிலதிபர். கல்வியாளர். சமூக சேவையில் மிகுந்த ஆர்வமுடையவள். அ.தி.மு.க-வில் நான் திடீரென சேரவில்லை. நான் தீவிர அ.தி.மு.க பிரமுகர் ஒருவருக்கு மகளாகப் பிறந்தவள்.

சோனாலி தந்தை
சோனாலி தந்தை

என் தந்தை அ.தி.மு.க-வின் மூத்த உறுப்பினர். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியதிலிருந்து என் தந்தை அ.தி.மு.க-வில் இருந்தவர். பல்வேறு பொறுப்புகளிலும் அவர் இருந்திருக்கிறார்.

என்னுடைய சிறுவயதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பொதுக் கூட்டங்களுக்கு தந்தை அழைத்துச் செல்வார். அந்த நாள்கள் எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. சிறுவயதிலிருந்தே ஜெயலலிதா அம்மாவால் ஈர்க்கப்பட்டவள் நான். 2009-ம் ஆண்டு என் தந்தை உயிரிழந்துவிட்டார்.

சோனாலி
சோனாலி

கட்சிக்காகக் கடுமையாக உழைத்தவர் அவர். தந்தை இறந்த பிறகு அ.தி.மு.க-வில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால், அப்போது நான் இரண்டு குழந்தைகளுக்குத் தாய். அந்த நேரத்தில், என் குழந்தைகளுக்கு வயது மிகவும் குறைவு. குழந்தைகள் மற்றும் குடும்பப் பொறுப்புகள் இருந்ததால், அப்போது என்னால் கட்சியில் இணைய முடியவில்லை. தற்போது சரியான நேரம் என்பதால் கட்சியில் இணைந்துவிட்டேன். கட்சியில் மட்டுமல்ல சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.

சோனாலி
சோனாலி

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடம் எடுத்து வருகிறேன். எனக்கு சிறந்த நிர்வாகத் திறன் இருக்கிறது என்று நம்புவதாலும் ஆர்வத்தாலும் கவுன்சிலர், மேயர் பதவிக்கு நான் விருப்பமனு கொடுத்தேன். ஜனநாயக நாட்டில் இதில் ஏதேனும் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இதே பதவிக்காக, எத்தனையோ பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், எதற்காக என்னைப் பற்றிய தகவல்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்? இதை என்னால் கையாள முடியவில்லை. என் மீதும், என் கட்சி மீதும், நான் மிகவும் மதிக்கிற தலைவர்கள் பற்றியும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சொல்லி வருகிறார்கள்.

சோனாலி
சோனாலி

இதனால், நான் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளேன். என் குடும்பத்தினரும் கடுமையான மன உளைச்சலை அனுபவித்து வருகின்றனர்.

அரசியலில் பெண்களுக்கு விலக்கு இருக்கிறதா? சமூக முன்னேற்றம் குறித்துப் பேசுவது எளிது. ஆனால், அதற்காகக் களத்தில் வந்து பணியாற்றுவது அவ்வளது எளிதல்ல. அதை எதிர்கொள்ளும் தைரியமும் வலிமையும் எனக்கு இருக்கிறது. எனது இலக்குகளை அடைய என் கணவரும் குடும்பத்தினரும் எனக்கு பக்கபலமாக நிற்கின்றனர். உங்களது கீ-பேடை ஆயுதமாக மாற்றி, அதை வன்முறையாகப் பெண்கள் மீது தாக்காதீர்கள்.

சோனாலி
சோனாலி

உங்களது தாயையோ, சகோதரிகளையோ இப்படி தவறாகச் சித்தரிப்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? எனவே, இதுபோன்ற தகவல்களை பகிருவதற்கு முன்பு நன்கு சிந்தியுங்கள். நான் அர்ப்பணிப்புடன் உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். சுமார் 1,000 பெண்களை உடற்பயிற்சி, ஆரோக்கியம் விஷயத்தில் ஈர்த்துள்ளேன். ஏராளமான அழகு போட்டிகளில் கலந்துகொண்டு பட்டங்களையும் வென்றிருக்கிறேன்.

மேடைகளை, நமது ஆர்வத்தையும் நம்பிக்கையையும், திறமையையும் வெளிக்கொண்டு வருவதற்கான சிறந்த வாய்ப்பாகப் பார்க்கிறேன். அழகு என்பது தோற்றத்தை வைத்து முடிவு செய்யப்படக் கூடாது. ஒருவரின் அறிவு, சமூக அக்கறை, திறமை, தலைமைத்துவ பண்பு ஆகியவற்றை வைத்துத்தான் அழகை முடிவு செய்ய வேண்டும். அந்த வகையில் என்னால் முடிந்த வரையில் சமூகத்துக்குப் பங்களித்துள்ளேன்.

சோனாலி
சோனாலி

இதற்காக விருதுகளையும் பெற்றுள்ளேன். சமூகத்துக்காக தொடர்ந்து பணியாற்றி மாற்றம், முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டு, வாழ்வதற்கு சிறந்த பகுதியாகக் கோவையை மாற்ற முயல்வேன். இந்த நேரத்தில் எனக்குத் துணையாக நின்ற அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்து, மீண்டு வந்த பெண்களை நான் பார்த்திருக்கிறேன். அதேபோல, இந்த விஷயத்தை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு சமூகப் பணிகளை தொடர உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், அந்தப் பதிவில் தன் தந்தை அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள், தலைவர்களுடன் இருக்கும் படங்களையும் சோனாலி வெளியிட்டுள்ளார்.

பின் செல்ல