Published:Updated:

டெல்லியைவிட்டு வெளியேறிய சோனியா காந்தி... கோவாவில் வசிக்கத் திட்டம்! - என்ன காரணம்?

சோனியா, ராகுல்
சோனியா, ராகுல்

சோனியா காந்தி கோவா சென்றிருப்பதாகத் தகவல் தெரிவித்திருக்கிறது ஏ.என்.ஐ செய்தி நிறுவனம். சோனியா காந்தியுடன் ராகுல் இருக்கும் புகைப்படங்களையும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது ஏ.என்.ஐ.

இடைக்கால காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, புதுடெல்லியின் ஜன்பத் பகுதியிலுள்ள தனது வீட்டில் வசித்துவருகிறார். கடந்த ஜூலை 30-ம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால், புதுடெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு செப்டம்பர் 12-ம் தேதியன்று ராகுல் காந்தியுடன் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்குச் சென்றார் சோனியா. அமெரிக்கா சென்ற காரணத்தால் சோனியா, ராகுல் இருவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோனியா, ராகுல், பிரியங்கா
சோனியா, ராகுல், பிரியங்கா
சிதம்பரம்: நடராஜர் சிலைமீது மட்டும் மழை... வைரலாகும் வீடியோ! - உண்மை என்ன? #FactCheck

73 வயதாகும் சோனியாவுக்கு நெஞ்சகத்தொற்றும், ஆஸ்துமா பிரச்னையும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காகத் தொடர்ச்சியாக மருந்துகள் எடுத்துவருவதாகவும் சோனியாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் சொல்கின்றன. இந்தநிலையில் டெல்லியில், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் காற்று மாசு காரணமாக, சோனியாவை சில நாள்கள் டெல்லியைவிட்டு வெளியேறி வேறு எங்காவது வசிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாகச் சொல்லப்பட்டது.

இது குறித்து, காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்ததாக பி.டி.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்தச் செய்தியில்,

டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டால் சோனியாவுக்கு ஆஸ்துமா பிரச்னை அதிகரித்திருக்கிறது. அதன் காரணமாக டெல்லியைவிட்டு வெளியேறி கோவா அல்லது சென்னை புறநகர்ப் பகுதியில் சில காலம் வசிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் வட்டாரங்கள்
மேற்கு வங்கம்: `மிஷன் 200'... 11 பேர்கொண்ட குழு - மம்தாவை வீழ்த்துமா பா.ஜ.க?

இன்று பிற்பகலில் டெல்லியிலிருந்து சோனியா புறப்படவிருப்பதாகவும் ராகுல் காந்தி அல்லது ப்ரியங்கா காந்தியுடன் இணைந்து பயணம் செய்யவிருப்பதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் சொல்லப்பட்டிருந்தது.

இந்தநிலையில், சோனியா காந்தி கோவா சென்றிருப்பதாக தகவல் தெரிவித்திருக்கிறது ஏ.என்.ஐ செய்தி நிறுவனம். சோனியா காந்தியுடன் ராகுல் இருக்கும் புகைப்படங்களையும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது ஏ.என்.ஐ.
அடுத்த கட்டுரைக்கு